Featured Home (TOP)

Recent Comments

Friday, November 27, 2015

avathani Media Network

கொழும்பு- மட்டக்களப்பு நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் படுகாயம்

கொழும்பு- மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் மைலம்பாவெளியில் வீதியின் மருங்கில் இருந்த அதி உயர் 33 ஆயிரம் வோல்டேஜ் மின்சார கம்பிகளைத் தாங்கிச் செல்லும் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நித்திரைக் கலக்கத்தில் கட்டுப்பாட்டை மீறி வீதித் தடத்திலிருந்து தவறி வீதியின் மறு மருங்கிலிருந்த மின் கம்பத்தில் மோதி வேன் தரித்து நின்றுள்ளது. அதிகாலை 4.20 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தையடுத்து ஏறாவூர் நகரம் உட்பட இன்னும் சில பிரதேசங்களில் சில மணி நேரங்கள் மின்சாரம் தடைப்பட்டது.
வேனில் பயணித்த மட்டக்களப்பைச் சேர்ந்த போதகரான மகேந்திரன் என்பவரே விபத்தில் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மேற்படி விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ttnnews

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :