Featured Home (TOP)

Recent Comments

Monday, November 2, 2015

avathani Media Network

மக்கள் வழங்கிய அதிகாரத்தை இன்றைய அரசாங்கமும் தவறாக பயன்படுத்துகிறது : அனுரகுமார திஸாநாயக்க

ஜன­நா­யக செயற்­பா­டு­களை மீறும் வகை­யி­லேயே ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் செயற்­ப­டு­கின்­றனர். பல்­க­லைக்­க­ழக மாண­ வர்­கள் மீதான தாக்­குதல் தொடர்பில் முழுப் ­பொ­றுப்­பையும் அர­சாங்­கமே ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க குற்றம் சுமத்­தினார்.

பொலிஸாரின் காட்­டு­மி­ராண்டி தன­மான செயற்­பா­டு­க­ளுக்கு மாண­வர்கள் பதி­லடி கொடுத்தால் அது அர­சாங்­கத்­தையே பாதிக்கும் எனவும் அவர் எச்­ச­ரித்தார்.
மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,
கடந்த காலத்தில் முன்னாள் அர­சாங்­கத்தின் ஆட்­சியில் இடம்­பெற்ற தாக்­கு­தல்கள், மனித உரிமை மீறல்கள், மாண­வர்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் என்­ப­வற்றை நாம் அவ­தா­னித்­துள்ளோம். மாண­வர்­களின் சாதா­ரணக் கோரிக்­கை­களை கூட ஏற்­காது அவர்கள் மீதான அடக்­கு­மு­றை­களை கையாண்­ட­மையை அவ­தா­னித்தோம். அவ்­வா­றான நிலையில் ஜன­வரி மாதம் ஏற்­பட்ட அர­சியல் மாற்றம் இந்த அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் நிரந்­தர தீர்­வாக அமையும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. சாதா­ரண ஜன­நா­யக செயற்­பா­டு­களை முழு­மை­யாக பாது­காக்க முடியும் என்ற நம்­பிக்­கையில் தான் மக்கள் ஆட்சி மற்­றதை ஏற்­ப­டுத்­தினர்.
மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாக்­கியும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ரா­கியும் அதி­கா­ரங்­களை அவர்­களின் கைகளில் கொடுத்­த­மையும் நாட்டை ஜன­நா­யக பாதையில் கொண்டு செல்­ல­வே­யாகும். ஆகவே மக்கள் எதற்­காக தமக்கு அதி­கா­ரத்தை கொடுத்­தனர் என்­பதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தெரிந்­து­கொள்ள வேண்டும். மக்கள் கொடுத்த அதி­கார பலத்­தினை எவ்­வாறு கையாள்­வது என்­பதை விளங்­கிக்­கொள்ள வேண்டும்.
ஆனால் இந்த அர­சாங்­கத்தை நம்பி மக்கள் கொடுத்த அதி­கா­ரத்தை இவர்­களும் தவ­றான விதத்­தி­லேயே பயன்­ப­டுத்­து­கின்­றனர். இவர்­களின் தேவையும் அதி­கா­ரத்தை தக்க வைக்­க­வேண்டும் என்­ப­தே­யாகும் என்­பது தெளி­வா­கி­யுள்­ளது. மாண­வர்­களின் தேவை, அவர்­களின் கோரிக்­கை­களை இந்த அர­சாங்­கமும் நிரா­க­ரிக்­கின்­றது.
கடந்த காலங்­களில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் கோரிக்­கைகளை அர­சாங்கம் எவ்­வாறு நிரா­க­ரித்­ததோ அதேபோல் இப்­போதும் இந்த அர­சாங்கம் பல்­க­லைக்­க­க­ழக மாண­வர்­களின் நியா­ய­மான கோரிக்­கை­களை நிரா­க­ரிக்­கின்­றமை மட்­டு­மல்­லாது அவர்கள் மீதான தாக்­கு­தல்­க­ளையும் மேற்­கொள்­கின்­றது.
மாண­வர்கள் தனது கோரிக்­கை­களை முன்­வைத்து எந்த மட்டத்­திலும் பேச்­சு­வார்த்­தை­களை கோரவும், வீதியில் இறங்கி ஆர்ப்­பாட்­டங்­களை முன்­வைக்­கவும் சகல உரி­மை­களும் அவர்­க­ளுக்கு உண்டு. அந்த வகையில் தான் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்­பாட்­டங்­களை முன்­னெ­டுத்­தனர்.
அதேபோல் அமை­தி­யான முறையில் தமது கல்­விக்­கான கோரிக்­கை­களை முன்­வைத்து போராட்டம் செய்­தனர். அவ்­வா­றான நிலையில் மாண­வர்கள் மீது காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான வகையில் தாக்­குதல் நடத்­தப்­பட்டு அவர்­களில் சிலரை கைது செய்­துள்­ளனர். அவர்கள் இப்­போது விடு­விக்­கப்­பட்­டாலும் மாண­வர்கள் மீது இவ்­வாறு காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான வகையில் தாக்­கு­தலை நடத்­தி­ய­மைக்கு இது­வரை யாரும் பொறுப்­புக்­கூ­ற­வில்லை.
ஆனால் இந்த சம்­ப­வத்­திற்கு முழுப் பொறுப்­பையும் அர­சாங்­கமே ஏற்­றுக்­கொள்ள வேண்டும். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இந்த சம்­பவம் தொடர்பில் உட­னடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். மாண­வர்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க அர­சாங்கம் முன்­வ­ர­வேண்டும். முன்­னைய அர­சாங்கம் எவ்­வாறு மாண­வர்கள் விட­யத்தில் அக்­க­றை­யின்றி செயட்­பட்­டதோ அதேபோல் இந்த அர­சாங்­கமும் செயற்­படக் கூடாது. மாண­வர்கள் இவ்­வாறு தமது உரி­மைக்­காக போரா­டு­கின்­ற­னரோ அதை தடுக்க அவர்­களின் கோரிக்­கை­களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதை விடுத்து அடக்குமுறைகளை கையாள வேண்டாம். இந்த விடயத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின் அது அரசாங்கத்தை பாதிக்கும் வகையிலேயே அமையும்.
ஆகவே இந்த சம்பவத்தை தட்டிக்களிக்காது உடனடியாக தீவுக்கான வேண்டும். அரசாங்கம் மாணவர்களை தண்டிக்காது அவர்களை பாதுகாக்க வேண்டும். ஜனாதிபதியும்இ பிரதமரும் ஜனநாயகத்தை மீறி செயற்பட வேண்டாம் என அவர் குறிப்பிட்டார்.
-virakesari.lk

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :