பொத்துவில் பிரதேசத்திற்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளர் நியமனம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவரும் நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்பில் பொத்துவில் முன்னைநாள் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந் நியமனம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் பிரதித் தவிசாளருமான கௌரவ-சபீக் ரஜாப்தீன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது. நிகழ்வில் கௌரவ அமைச்சரின் இனைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் அவர்களும் இலங்கை சுற்றுலாத்துறை சம்மேளனத் தவிசாளர் ஏ.எம். ஜௌபர் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
