காத்தான்குடி மற்றும் அதனை அன்மித்த பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், பழங்கள் மரக்கறி விற்பனை நிலையங்களில் மனித சுகாதாரத்திற்கு கேடானா உணவு மற்றும் பழங்கள்,மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் தெறிவிக்கின்றனர்..
குறிப்பாக பிரதான வீதிகளில் உள்ள விற்பனை நிலையங்களில் இவ்வாறு அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
டெங்கு காய்ச்சல் சீசனில் மாத்திரம் ரோந்து வரும் சுகாதார பரிசோதகர்கள் ஏன் இதனை கவனத்தில் கொள்வதில் தயக்கம். டெங்கு ஒழிப்பு மாத்திரம் உங்கள் பணி அல்ல..
உடனடியாக இது போன்ற வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதோடு உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புனர்வு செய்யுமாறு பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம்..

