Featured Home (TOP)

Recent Comments

Friday, November 20, 2015

avathani Media Network

மைத்திரி, ரணிலின் உத்தியோகபூர்வ இல்லங்கள் பறிமுதல் : ஜனாதிபதிக்கும் இடப்பெயர்வா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே பகுதிக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லங்கள் மாற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றிற்கு அருகாமையில் இந்த இல்லங்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிர்வாகத் தலைநகரான ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நகரம், கடவத்தை, கடுவல, கொட்டாவ ஆகிய பகுதிகளின் ஊடாக விஸ்தரிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அநேகமாக அரசாங்க அலுவலகங்கள் இங்கு அமைக்கப்படும் எனவும் ஹோமாகமவில் வானியல் ஆய்வு மையமொன்று உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரப் பகுதிகளில் முழுவதுமாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :