(ஜுனைட்.எம்.பஹ்த்)
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்தம் இடம்பெறும் விஷேட சொற்பொழிவுத்தொடரில், டிசம்பர் மாதத்துக்கான சொற்பொழிவு நாளை 1ம் திகதி செவ்வாய் கிழமை மாலை 6.45 மணிக்கு ‘சமூகத்தீமைகளை களைவதில் சமூகத்திற்குள்ள பொறுப்புக்கள்’ எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.
77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இவ்விஷேட சொற்பொழிவை, இஸ்லாஹிய்யா பெண்கள் அறபுக்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர், அஷ்ஷெய்க் மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்கள் நிகழ்த்தவூள்ளார். மஃரிப், இஷா தொழுகைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பதையூம் அறியத்தருவதோடு, காலத்துக்குத்தேவையான தொனிப்பொருளில் இடம்பெறும் இச்சொற்பொழிவில் கலந்து பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புகளுக்கு: 0766529128
