கடவுச்சீட்டுக்கான கட்டணம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள நிர்வாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அறிவிக்கப்பட்ட புதிய கட்டணத்தின் அடிப்படையில் முதியோருக்கான கடவுச்சீட்டு 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் வரையிலும், சிறுவர்களுக்கான கட்டணம் 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மற்றும் ஒரு நாள் சேவையின் அடிப்படையில், முதியோருக்கான கடவுச்சீட்டுக் கட்டணம் 7,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரையிலும் சிறுவர்களுக்கான கட்டணம் 3,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
