Featured Home (TOP)

Recent Comments

Monday, November 30, 2015

avathani Media Network

சீ­ருடைத் துணி­க­ளுக்கு நாளை முதல் ­வவுச்­சர்கள் வழங்கப்படும்

தேசிய அர­சாங்­கத்­தின்­ சீ­ருடைத் துணி­க­ளுக்கு பதி­லாக வழங்­கப்­ப­ட­வுள்ள பண வவுச்­சர்கள் நாளை முதல் ­நா­ட­ளா­விய ரீதி­யில்­ உள்ள அனைத்து பாட­சா­லை­க­ளிலும் வி­நி­யோ­கிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதா கல்வி அமைச்­சர்­ அ­கி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரிவித்தார். கல்வி அமைச்­சி­னால் ­வெளியி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்கை ஒன்­றி­லேயே கல்வி அமைச்­சர்­ மேற்­கண்­ட­வாறு தெரிவித்­துள்ளார்.
அவ்­வ­றிக்­கை­யில் ­மே­லும் ­கு­றிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,
தேசிய அர­சாங்­கத்­தி­னால்­ அ­றி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள நாட­ளா­விய ரீதி­யில்­ உள்ள அர­சாங்­கப் ­பா­ட­சா­லை­க­ளில் ­கல்வி பயிலும் அனைத்து மாண­வர்­க­ளுக்கு சீருடைத் துணி­க­ளுக்கு பதி­லாக வழங்­கப்­ப­ட­வுள்ள பண வவுச்­சர்கள் நாளை முதல்­நா­ட­ளா­விய ரீதி­யில்­ உள்ள அனைத்து பாட­சா­லை­க­ளில்­ வி­நி­யோ­கிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.450 ரூபா முதல் 1000 ரூபா வரை­யி­லான வவுச்­சர் ­வ­கை­களை பகிர்ந்­த­ளிப்­ப­தற்கு இம்­முறை 26,000 மில்­லி­யன்­ ஒ­துக்­கப்­பட்­டுள்­ளது.
அந்­த­வ­கை­யில் ­நாளை 1ஆம் திகதி முதல் சகல பாட­சாலை அதி­பர்­க­ளுக்கு இந்த வவுச்­சர்­கள்­ அ­னுப்­பி­ வைக்­கப்­ப­டும் ­கு­றிப்­பிட்ட இந்த வவுச்சர் அதி­பர்­கள் ­ஊ­டாக வகுப்­பா­சி­ரி­யர்­க­ளிடம் சென்று மாண­வர்­க­ளுக்கு சென்­ற­டையும். தமது பிர­தே­சத்தில் வலயக் கல்விப் பணிப்­பா­ள­ரினால் பதிவு செய்­யப்­பட்ட வர்த்­தக கடை­களில் சீரு­டை­களை கொள்­முதல் செய்ய முடியும். மிகுதி பணம்­கி­டைக்­கு­மா­யின் ­மா­ண­வர்­கள்­ த­மக்கு ஏற்­ற­வா­றான எத­னையும் பெற்று கொள்ள முடியும்.
விநி­யோ­கிக்­கப்­படும் வவுச்­சர்கள் மாண­வர்­களின் வயதுக்கு ஏற்­ற­வாறு 15 வகை­க­ளில்­வ­ழங்­கப்­ப­ட­வுள்­ளது. அந்­த­வ­கையில் 1–5 மாண­வர்கள் 450 ரூபா வவுச்சர், 1–5 மாண­வி­யர்கள் 400 ரூபா வவுச்சர், 1–5 மாண­வி­யர்கள் முஸ்லிம் பாட­சாலை பர்தா தலைக்­க­வசம் 600 ரூபா வவுச்சர், 1–5 மாண­வி­யர்கள் சீருடை 720 ரூபா வவுச்சர், 6–9 மாண­வர்கள் மேற்­சட்டை மற்றும் காற்­சட்டை 525 ரூபா வவுச்சர், 6–9 மாண­வி­யர்கள் 500 ரூபா வவுச்சர், 6–9 முஸ்லிம் வவுச்சர், மாண­வி­யர்கள் 700 ரூபா வவுச்சர், 6–9 மாண­வி­யர்கள் சீருடை 800 வவுச்சர்,
10–13 மாண­வர்கள் 525 ரூபா வவுச்சர், 10–13 மாண­வர்கள் 525 ரூபா வவுச்சர், 10–13 மாண­வி­யரின் துணிக்­காக 600 வவுச்சர், 10–13 முஸ்லிம் மாண­வி­யர்கள் 800 ரூபா வவுச்சர், 10–13 மாண­வி­யர்கள் 1000 ரூபா வவுச்சர், 1–7 காவி உடை 1300 ரூபா வவுச்சர், 8–13 மாண­வர்கள் 1700 ரூபா வவுச்சர், ஆகிய அடிப்ப­டை­யி­லேயே இந்த வவுச்­சர்கள் விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ளன.
இலங்­கையில் உள்ள 43 இலட்சம் மாண­வர்­க­ளது சீருடைகள் விடயத்தில் கடந்த காலத்தில் 4 நிறுவனங்கள் பாரிய நிதி மோசடிகளை செய்தது. இதனை இலகுபடுத்தும் திட்டமாகவே பிரதமர், ஜனாதிபதி, அமைச்சரவை அனைவரும் ஏற்றுக்கொண்டதற்கிணங்க இச்செயற்றிட்டம் அமுல்படுத்தப்படுவதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source-virakesari.lk

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :