இந்த புலமைப்பரிசில் திட்டமானது. பல்கலைக் கழக விவகாரங்களுக்கான இராஜாங்க
அமைச்சர் மோகன்லால் க்ரேரோ அவர்களை
பிரதம அதிதியாகக் கொண்டு கடந்த 11.11.2015 அன்று
நடைபெற்ற BCAS Campus பட்டமளிப்பு நிகழ்வின் போது உத்தியோக பூர்வமாக
அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டதுடன், அதனைத்
தொடர்ந்து இது தொடர்பில் விளக்கமளிக்கும்
ஊடக சந்திப்பொன்றும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில்
London South Bank பல்கலைக்
கழகத்தினுடைய உப வேந்தர் பேராசிரியர்
டேவிட் பீனிக்ஸ் அவர்களும், அதனுடைய உதவித்தலைவர் பேராசிரியர்
ராவ் அவர்களும், அத்துடன் BCAS Campus யின் தலைவர் பொறியியலாளர்
அப்துர் ரஹ்மான் மற்றும் அதனுடைய
தலைமைப் பீடாதிபதி பேராசிரியர் சானிகா ஹிரும்புரேகம உள்ளிட்ட
பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
உயர்தரப்
பரீட்சையில் வருடாந்தம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான
மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதிக்கான தகுதியினைப்
பெறுகின்ற போதிலும் அதில் ஏறத்தாள 30 வீதத்திற்கும்
குறைவானவர்களே அரச பல்கலைக் கழகங்களில்
அந்த வாய்ப்புக்களைப் பெறுகின்றனர். ஏனைய 70 வீதமான மாணவர்களுக்கு
நம் நாட்டில் நிலவும் பல்வேறு சூழ்நிலைகள்
காரணமாக உயர் கல்விக்கான வாய்ப்புகள்
கிடைப்பதில்லை. இதற்கான தீர்வாக, தனியார்
உயர் கல்வித்துறையில் வெளிநாட்டு பட்டப்படிப்புகளை தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக நம் நாட்டில்
காணப்படுகின்ற போதிலும், அதற்கான நிதிச் செலவு
என்பது திறமையான பல மாணவர்கள் எதிர்
கொள்ளும் பிரச்சினையாக அமைந்துள்ளது.
அது போன்றே அரச பல்கலைக்
கழகங்களுக்கான அனுமதிகளை பெறும் மாணவர்கள்கூட பல
சந்தர்ப்பங்களில் தமது திறமைக்கும் எதிர்பார்ப்புக்கும்
ஏற்ற துறைகளில் கற்பதற்கான வாய்ப்புகளை பெறுவதில்லை என்பதும் இன்னுமொரு வகையான பிரச்சினையாக மாறியிருக்கிறது.
இச்சூழ்நிலையினைக்
கருத்திற் கொண்டு அரச பல்கலைக்
கழக அனுமதிக்காக பின்பற்றப்படும் நடை முறைகளை ஒட்டிZ-Score
புள்ளிகளை
அடிப்படையாகக் கொண்ட விசேட புலமைப்பரிசில்
திட்டமாகவே BCAS 'சிசு சவிய'
புலமைப் பரிசில் திட்டம் தற்போது
தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்புலமைப்
பரிசில் திட்டத்தின் மூலமாக Civil Engineering,
Quantity Surveying, Computing, Bio Medical Science, Law, Management Information System மற்றும் Business Management ஆகிய துறைகளில் 3 வருட பட்டப்படிப்பு பாட
நெறிகளை இலவசமாக தொடர்வதற்கான வாய்ப்புகளை
BCAS Campus வழங்ககின்றது.
இப்புலமைப்
பரிசில்களுக்கு தகுதி பெறும் மாணவர்கள்
தமது 3 வருட கற்கை நெறிகளை
வெற்றிகரமாக பூர்த்தி செய்கின்ற போது தமது இறுதித்
தகைமையினை UK யின் பிரபல பல்கலைக்
கழகங்களான university of
Wolverhampton அல்லது
London South Bank university இலிருந்து
பெற்றுக் கொள்வார்கள்.
இலங்கையில்
கொழும்பு, கண்டி, குருநாகல், மட்டக்களப்பு,
கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய
பகுதிகளில் தனது வளாகங்களையும் கிளை
வளாகங்களையும் BCAS Campus கொண்டிருப்பதன் காரணமாக புலமைப் பரிசில்களுக்கு
தகுதி பெறும் மாணவர்கள் தமக்கு
வசதியான வளாகங்களில் கற்கை நெறிகளை தொடர்வதற்கான
வாய்ப்பும் வழங்கப்படவுள்ளன.
இந்தப்
புலமைப் பரிசில்களுக்கான தெரிவு முழுக்கமுழுக்க Z-Score
புள்ளிகளை அடிப்படையாக கொண்டும், விசேட தெரிவுப் பரீட்சை
மற்றும் நேர்முகப் பரீட்சை என்பவற்றை அடிப்படையாகக்
கொண்டும் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BCAS 'சிசுசவிய' புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பப்படிவங்களையும், மேலதிக தகவல்களையும் பெற்றுக்
கொள்ள www.bcas.lk என்ற இணையத்தளத்தினை அல்லது வார இறுதி
பத்திரிகைகளில் வெளியாகும் அறிவித்தல்களை பார்வையிடுமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அத்துடன்,
இது பற்றிய தகவல்களை பெற்றுக்
கொள்வதற்கான தனியான தொலைபேசி இலக்கம்
ஒன்றினையும் BCAS Campus அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் 076 5204505 என்ற
தொலைபேசி இலக்கத்திற்கு உங்கள் பெயர், முகவரியினையும்
உங்கள் Z-Score இனையும் SMS
செய்வதன் மூலமும் மேலதிக விபரங்கள்ளை
பெற்றுக் கொள்ள முடியும்.














