Featured Home (TOP)

Recent Comments

Wednesday, December 23, 2015

avathani Media Network

2015 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பட்டிருப்பு கல்வி வலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

செலிங்கோ லைப் ஆயூட் காப்புறுதி நிறுவனத்தின் களுவாஞ்சிக்குடி கிளையின் ஏற்பாட்டில் 2015 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பட்டிருப்பு கல்வி வலய மாணவர்களை கௌரவிக்கும் முதற்கட்ட நிகழ்வு 22-12-2015 நேற்று செவ்வாய்கிழமை மட்டக்களப்பு செலிங்கோ லைப் ஆயூட் காப்புறுதி நிறுவனத்தில் இடம்பெற்றது.

களுவாஞ்சிக்குடி செலிங்கோ லைப் ஆயூட் காப்புறுதி நிறுவனத்தின் உத்தியோகத்தர் திருமதி கோவிந்தராஜ் யசோதினி தலைமையில் இடம்பெற்ற மேற்படி கௌரவிப்பு நிகழ்வில் களுவாஞ்சிக்குடி செலிங்கோ லைப் ஆயூட் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளர் ஆர்.மயூரன், செலிங்கோ லைப் ஆயூட் காப்புறுதி நிறுவனத்தின் விற்பனை அபிவிருத்தி பிராந்திய முகாமையாளர் கே.சுமந்திரன்,குருக்கல்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தின் அதிபர் கே.செல்வராஜா உட்பட செலிங்கோ லைப் ஆயூட் காப்புறுதி நிறுவனத்தின் முன்னாள் விற்பனை பிரதிநிதி எம்.திருநாவுகரசு உட்பட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பட்டிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகளினால் பட்டிருப்பு கல்வி வலயத்திலிருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ,மாணவிகளுக்கு கிண்ணமும் ,பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு இங்கு இலவசமாக மாணவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க இலவச உண்டியலும் வழங்கப்பட்டது.

களுவாஞ்சிக்குடி செலிங்கோ லைப் ஆயூட் காப்புறுதி நிறுவனம் பட்டிருப்பு கல்வி வலயத்திலிருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 121 மாணவர்களில் முதற்கட்டமாக நேற்று 43 மாணவர்களை கிண்ணமும் ,பரிசும் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.















avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :