( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் கிழக்கு மாகாண சுகாதாரம், மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக இருந்த போது பல்வேறு சமூக சேவை நிறுவனங்களுக்காக ஒதுக்கீடு செய்த ரூபாய் 40 இலட்சம் பெறுமதியான உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசீக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பொருட்கள் அனைத்தையும் வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.எம்.சஃபீர், இணைப்புச் செயலாளர்களான யூ.எல்.பசீர், ஏ.எம்.தபீக் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், கணக்காளர் ஏ.எல்.மஃறூப், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பசீர், கிராம சேவகர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் இங்கு பேசுகையில்:- ' நாம் தொடர்ந்தும் வழிகெடுக்கப்படுகின்ற சமூகமாக இருக்கக் கூடாது என்பதைத்தான் நான் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் மக்கள் மத்தியில் பேசிவருகின்றேன். சிலருக்கு இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமலுள்ளது. இவர்களுக்கு மத்தியில்தான் இச்சமூகத்தை நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கு மத்தியில்தான் இச்சமூகத்தை விழிப்படையச் செய்யவேண்டியுள்ளது. இவர்களுக்கு மத்தியில்தான் இச்சமூகத்தை முன்னேற்றிச் செல்லவேண்டியுள்ளது' எனத் தெரிவித்தார்.







