தேசிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் தனியார் பஸ்களுக்கு விதிக் கப்பட்டிருந்த 5000 ரூபா புகைப்பரிசோதனை கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்ப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வாகனங்களுக்கான புகைப்பரிசோதனைக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில் கடந்த காலங்களில் மோட்டார் சைக்கிள் உட்பட முச்சக்கர வண்டிகளுக்கான இக்கட்டண அதிகரிப்பு நீக்கப்பட்டதோடு தனியார் பேருந்துகளுக்கு மட்டுமே இந்த கட்டண அதிகரிப்பு அமுலில் இருக்கும் என நிதியமைச்சால் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேருந்து உரிமையாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க விருந்தன. நேற்றைய தினம் இது தொடர்பில் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்திற்கும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்தவகையில் தனியார் பேருந்துக்க ளுக்கான அதிகரிக்கப்பட்டுள்ள 5000 ரூபா கட்டணம் தற்காலிகமாக இடை நிறுத் தப்படுவதாக குறித்த பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
