Featured Home (TOP)

Recent Comments

Wednesday, December 23, 2015

avathani Media Network

BCAS Campus நடாத்திய ஆராய்ச்சி மாநாடு ! தனியார் உயர் கல்வித்துறையில் மற்றுமொரு முன்னுதாரணம்.!!

நம்நாட்டு தனியார் உயர்கல்வித்துறையில் முன்னோடியான BCAS Campus தனது முதலாவது ஆராய்ச்சி மாநாட்டினை கடந்த 18 ஆம் திகதி கொழும்பில் நடாத்தியது. BCAS Campusஇன் பிரதான வளாகங்களில் ஒன்றான கல்கிஸ்ஸை (Mt.Campus) வளாகத்தில் நடை பெற்ற இந்த ஆராய்ச்சி மகா நாட்டில் ஆராய்ச்சி கட்டுரைகள் பல BCAS இன் விரிவுரையாளர்களினாலும், மாணவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்டன.

குறித்த தினத்தில் காலை 09.30 மணி முதல் மாலை 06.00 மணிவரை நடை பெற்ற இம்மகாநாட்டிற்கு முன்னாள் பல்கலைக் கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும் தற்போதைய BCAS Campus  இன் தலைமைப்  பீடாதிபதியுமான பேராசிரியர் சானிகா ஹிரும்புரேகம தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் சிரேஸ்ட கல்வியாளரான நீதியரசர் சலீம் மர்சூப் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், களணி பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவப் பீடத்தின் திணைக்கள தலைவர் கலாநிதி பண்டார வன்னியாராச்சி அவர்களும், இலங்கையிலுள்ள சிரேஸ்ட சட்டத்துலைற வல்லுனரான ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் அவர்களும் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர். அத்தோடு MAS Holdings நிறுவனத்தின் மநிறைவேற்று அதிகாரி தயான் கோமஸ் அவர்களும், மென்பொருள் ஏற்றுமதியில் சர்வதேச புகழ் மிக்க நிறுவனமான Virtusa நிறுவனத்தின் மனிதவள பணிப்பாளர் துசாற ஹெட்டிகம அவர்களும் இதில் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாராய்ச்சி மாநாட்டின் போது கணனி, தகவல் தொழில் நுட்பம், பொறியியல், நிதி முகாமைத்துவம், சட்டம், உயிரியல் மருத்துவம் , ஆங்கில இலக்கியம் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் ஆகிய துறைகளை உள்ளடக்கியதாக 21 ஆராய்ச்சிக் கட்டுரைகள் BCAS Campus இன் விரிவுரையாளர்களினாலும், மாணவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளை வரவேற்ற BCAS Campus இன் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இம்மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் சாரம்சங்களை உள்ளடக்கிய புத்தகங்களை அதிதிகளுக்கு வழங்கி வைத்தார். அத்தோடு அவர்களுக்கான நினைவுப்படிகங்களையும் பேராசிரியர் சானிகாவுடன் இணைந்து அதிதிகளுக்கு வழங்கி வைத்தார்.

கடந்த 16 வருடங்களில் தனியார் உயர் கல்வித் துறையில் பல்வேறு முன்னுதாரணங்களை ஏற்படுத்தியிருக்கும் BCAS நிறுவனம் ஆராய்ச்சி மகாநாடு ஒன்றினை தனியார் உயர் கல்வித்துறையில் முதன்முறையாக நடாத்தியிருக்கிறது என்பது பெருமைக்குரிய மற்றுமொரு முன்னுதாரணமாகும்.

கொழும்பு, கல்கிஸ்ஸை, கண்டி, குருனாகல, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை மற்றும் தோஹா-கட்டார் ஆகிய இடங்களில் தனது பிரதான வளாகங்களையும் துணை வளாகங்களையும் கொண்டு இயங்கி வருகின்ற BCAS Campus உயர் கல்வி நிறுவனம் தற்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணணி ( IT/Computing ), பொறியியல்( Engineering), கட்டட நிர்மானம் மற்றும் கணிமஅளவீடு ( QS and Construction), சட்டம்(Law), உயிரியல் விஞ்ஞானம்(Bio Medical sciences) , முகாமைத்துவம் ( Management) ஆகிய துறைகளில் அடிப்படைப் பாடநெறி (Degree foundation) முதல் முதுமானிப் பட்டப் படிப்பு (Masters ) வரையான உயர் கல்வி வாயப்புகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.






avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :