மாணவ சகோதர சகோதரிகளே அல்லாஹ் நமக்கு வழங்கிய செல்வங்களில் மிகப் பெருமதிவாய்ந்த செல்வங்களில் ஒன்றுதான் கல்விச் செல்வம். அத்தகைய செல்வம் எமக்கு அருளப்பட்டுள்ளது.அல்ஹம்துலிலா ஹ்.
உங்களது எதிர்கால வாழ்க்கை நோக்கிய கல்விப்பயணத்தில் மிக முக்கியமான கட்டத்தை எதிர் நோக்கியுள்ளீர்கள் அதுதான் இன்று நீங்கள் எதிர்நோக்கி இருக்கும் பொதுப் பரீட்சை இப் பரீட்சையின் பெறுபேற்றுக்குப் பின்னர் சிலரது பாடசாலை வாழ்வு வெற்றிகரமாக தொடரும் ஆனால் சிலரது பாடசாலை வாழ்வு முற்றுப்பெற்றுவிடும். பின்னர் அவர்கள் வாழ்க்கை வேறு வழிகளில் பயணம் தொடரும்.
எமது வாழ்க்கையில் சரியான சிறந்த வாழ்வை தீர்மானிக்கும் இப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினன பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்..
இப் பரீட்சை இன் பின்னர் சில மாணவ சகோதரர்கள் சிறையில் இருந்து விடுதலை கிடைத்த உணர்வோடு அதனை மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள் இவை மிகத்தவறான செயற்பாடுகளாகும்.
அதாவது மாணவ மாணவியர்கள் பரீட்சை முடிந்த பின்னர் வீதிகளில் ஆங்காங்கே கூட்டமாக நிற்பதும் வீதிகளில் கூட்டமாக பயணிப்பதும் தவிர்க்கப்படல் வேண்டும் ஏன் எனில் உங்களது இச் செயற்பாடுகளினால் வீதிகளில் பயணிக்கும் போதுமக்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படுகிறது.
அதே போல் மாணவர்கள் பிரியாவிடை என்ற பெயரில் பிற மாணவர்கள் மீது கலர் மை பூசுவது,முட்டை வீசியடிப்பது இது போன்ற அன்னிய கலாச்சாரத்தை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.. இச் செயற்பாடுகள் அல்லாஹ்வினது மிகவும் கோபத்தை உண்டாகும் .
முஸ்லிம்களாகிய நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு ஒப்பானவர்கள் அல்லர்..
எனவே அன்பான மாணவ சகோதர சகோதரிகளே இது உங்கள் வாழ்க்கையின் முக்கிய கட்டம் சிந்தியுங்கள்,முயற்சி செய்யுங்கள், அல்லாஹ்விடம் நெருக்கமாகி அவனது அன்பையும் அருளையும் பெற்று இந்நாட்டிற்கும் முஸ்லிம் சமுகத்திற்கும் சிறந்த ஒரு முன்மாதிரியாக வரவேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்திக்கிறேன்..
ஜு னைட்.எம்.பஹ்த்
ஊடகவியளாளன்.
பணிப்பாளர்.
முஹாசபா மீடியா நெட்வொர்க்.
