(எம்.எச்.எம்.அன்வர்)
சம்மேளனத்தின் பணிப்புரைக்கு அமைய பிரத்தியேக வகுப்புக்கள் (வரவைழைn உடயளள) நடாத்துவதில்லையென தீர்மானம்
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ஏற்கனவே அறிவித்த பிரகாரம் டிஸம்பர் 15 முதல் 31 வரை மாணவர்களின் நலன்கருதி தனியார் வகுப்புக்களை நடத்தவேண்டாம் எனவும் இதனால் டிஸம்பர் மாதத்தில் பாடசாலை விடுமுறையுடன் மாணவர்களுக்கு போதிய ஓய்வு வழங்குமாறும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அறிவித்திருந்தது
இதற்கமைய ஒரு சில தனியார் கல்வி நிறுவனங்கள் மூடப்படாமையால் இது விடயமாக முறைப்பாடுகள் சம்மேளனத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அழைத்து இன்று 20.12.2015 சந்திப்பொன்று சம்மேளன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது
இதன்படி அனைத்து பிரத்தியேக கல்வி நிலையங்களும் சம்மேளனத்தின் பணிப்புரைக்கிணங்க டிஸம்பர் 31 வரை உயர்தர வகுப்பு தவிர்ந்த ஏனைய பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துவதில்லை எனவும் மாணவர்கள் இந்த விடுமுறையை பயன்படுத்தி சுற்றுலாக்கள் செல்லல் இஸ்லாத்திற்கு பொருத்தமான முறையில் கழித்தல் டெங்கு போன்ற ஆட்கொல்லி நோயிலிருந்து பாதுகாத்தல் கல்வி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பேணல் போன்ற விடயங்களுக்கு பயன்படுத்தமுடியும் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு மேற்படி சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது