(சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர்)
சுதந்திரத்துக்குப் பின்னரான கிழக்கு மாகாண அரசியலில் மட்டக்களப்பிற்கு தெற்கே தமிழ் பேசும் மக்களின் அரசியலில் மஷ{ர் மௌலானா
என்ற ஆளுமை அதன் தாக்கம் அது குறித்து பதிவுகள் என்பன இன்னும் விபரமாகப் பதியப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான
ரவூப் ஹக்கீம் கூறினார்.
மறைந்த செனட்டர் மசூர் மௌலானா நினைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு - 07 சுவடிக்கேட்போர் கூடத்தில்
நடைபெற்ற நிகழ்வில்
மேலும் பேசிய அமைச்சர் கூறியதாவது>
மஷ{ர்
மௌலானா என்ற நாமம் இந்த நாட்டு
அரசியலிலே தமிழ் தேசியப் பரப்பிலே தமிழர்களின் போராட்டத்தில் முஸ்லிம்களுடைய பங்களிப்பு என்று பேசப்படுகின்ற போது மறுக்க முடியாத மறைக்க முடியாத ஒரு வகிபாகமாகும்.
மௌலானாவின் அபரிமிதமான அரசியல் பங்களிப்பு என்பது ஒரு சாதாரண ஆங்கில ஆசிரியராக ஆரம்பித்த அவரது வாழ்க்கை> தமிழரசுக் கட்சியின் மேடைகளிலே மேடை அதிரப் பேசுகின்ற ஒரு மேதாவித் தன்மை தமிழ் அரசியல் பிரமுகர்களின் சொற்பொழிவை
கேட்பதை விடவும் இவருடைய சொற்பொழிவுக்கு இருந்த மக்கள் ஆதரவும் அவர் பேசி
முடிக்கின்ற போது வானைப் பிளக்கின்ற கரகோஷமும் அன்றைய தமிழரசுக் கட்சி மேடைகளிலே வழமையாகக் காணப்படுகின்ற விடயம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
சுதந்திரத்துக்குப் பின்னரான கிழக்கு மாவட்ட அரசியலில் மட்டக்களப்பிற்கு தெற்கே தமிழ் பேசுகிற மக்களின் அரசியலில் மஷ{ர் மௌலானா
என்ற ஆளுமை அதனுடைய தாக்கம் அது குறித்த பதிவுகள் என்பது இன்னும் விபரமாகப் பதியப்படவேண்டும். சுதந்திரத்துக்கு முன்னரான அரசியல் பற்றி நிறைய பேசலாம் இருந்தாலும் மருதமுனை என்ற நாமம்
அந்த நாமத்தின்
உயிர் நாடியாக இருந்த மஷ{ர்
மௌலானா என்றுமே தன்னுடைய ஊரைப் பற்றிப் பேசி எப்போதும் வாக்குவாதப் படுகின்ற பல சந்தர்ப்பங்களை அவர் கோபப்படுகின்ற போதும் சந்தோசப்படுகின்ற போதும் எந்த சந்தர்ப்பத்திலும் ஊருக்காகவே வாழ்ந்த ஒருவராகத்தான் அவருடைய அடையாளங்களை நாங்கள் கண்டிருக்கின்றோம். சுதந்திரத்திற்குப் பின்னர் மருதமுனை 3 பொதுத்
தேர்தல்களிலே பட்டிருப்பு
தொகுதியின் அங்கமாக இருந்தது. அதாவது 1947> 1952> 1956Mம் ஆண்டு பொதுத் தேர்தல்களிலே பட்டிருப்பு தொகுதியின்
அங்கமாக இருந்த மருதமுனை அத்தொகுதியில் நிறுத்தப்படுகின்ற தமிழ் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களின்
வெற்றியை தீர்மானிக்கின்ற சக்தியாக மருதமுனை முஸ்லிம்களுடைய கைகளில் இருந்தது என்பது அன்றைய கணிப்பாக இருந்தது. இதை
பட்டிருப்பு தொகுதியின்
பாராளுமன்ற உறுப்பினராக
இரு தடவைகள் இருந்த இராசமாணிக்கம் பல தடவைகள் பகிரங்கமாக பேசி இருக்கிறார். மருதமுனைதான் என்னை வெல்ல வைத்தது என்று பேசியதாக பதிவுகள் இருக்கின்றன.
1959ம்
ஆண்டு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டபோது கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் நிர்வாக எல்லை நிர்ணய கமிஷனுக்கு முன்னால்
வாதிட்டு கல்முனைத்
தொகுதியின் அங்கமாக மாற்றிய நிகழ்வின் பின்னரே மஷ{ர்
மௌலானாவின் அரசியல் பிரவேசம் ஆரம்பமானது. ஆரம்பத்தில் எம்.எஸ். காரியப்பர் கல்முனைத்
தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய போது> கல்முனையிலிருந்து பொத்துவில் வரை இருக்கும் கரையோரப்பிரதேசம் மற்றும் சம்மாந்துறை தொகுதி என்பன ஒரே தொகுதியாக இருந்தன. அதன்
பின்னர் 1959ம் ஆண்டு
எல்லை நிர்ணய கமிஷனால் கல்முனை> பொத்துவில்> சம்மாந்துறை தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்ட பின்னர் புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கல்முனைத்
தொகுதியில் தமிழரசுக்
கட்சியின் வேட்பாளராக
களமிறங்கிய மஷ{ர் மௌலானா தனது ஆக்ரோஷமான பேச்சுத்திறமையால் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
அதன் பின்னர் இடம்பெற்ற பல சத்தியாக்கிரக போராட்டங்களில் பங்குகொண்ட
அவர்> பனாகொடை தடுப்பு முகாமில் நான்கு மாதங்கள் தமிழர்களுக்காக rpiw kPz;l nrk;kyhthu;. அதன் பின்னர் 1960ம்
ஆண்டு இடம்பெற்ற
தேர்தலில் சொற்ப வாக்குகளான 212 வாக்குகளினால் ஆசனத்தை இழந்தார்.
அதன் பின்னர்
1965ம் ஆண்டு உருவாக்கப்பட் டட்லி சேனாநாயக்கவின் அரசில் தமிழரசுக் கட்சி சார்பில் செனட்டர் பதவி வகித்தார். அதில்
சில காலம் பதவி வகித்துவிட்டு அதனை இராஜினாமாச் செய்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு அதிலும் தோல்வியையே சந்தித்தார்.
அதன் பின்னர் தன்னை ஐ.தே.கவிற்குள் பிரவேசித்து அதன் தீவிர ஆதரவாளராக செயற்பட்டு அக்கட்சி மூலம் தனக்குக் கிடைத்த சலுகைகள் மூலம் மருதமுனையிலே பல அபிவிருத்திகளைக் கொண்டு வந்து விளையாட்டு மைதானம்> வீடமைப்புத் திட்டம் என பல
விடயங்களிலே தனது பங்களிப்பை தனதூருக்குச்
செய்தார்.
1990 களில்
மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் சேவையால்
ஈர்க்கப்பட்டு அவரின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல சமூக சேவைகளில் ஈடுபட்டு தனது இறுதிமூச்சுவரை வயதில் மூத்த ஒருவராக கல்முனை மாநகரசபையில் நடவடிக்கைகளை
முன்னின்று வழிநடத்தி
கட்சிக்கு பெருமை சேர்த்த விதம் எண்ணிப்பார்க்க முடியாத ஒரு பெரும் சேவையாகும். இவ்வாறு பல வழிகளிலும் தனது கடைசி
மூச்சு வரை சேவை செய்த அவரின் மறைவு எமது கட்சிக்கும் மக்களுக்கும் பேரிழப்பாகும். md;dhUf;F [d;dj;Jy; gpu;njs]; vDk;
caupa nrhu;f;fk; fpilf;f ty;y ,iwtd; JizGupa Ntz;Lk; vd;W midtUk; gpuhu;j;jpg;Nghkhf! vd;Wk; njuptpj;jhu;.
மஷ{ர் மௌலானா பற்றி டாக்டர் உதுமாலெப்பை கூறியதாவது>
மஷ{ர்
மௌலானா பேசுகிறார்
என்றால் பேசுகின்ற மண்டபம் என்றால் மண்டம் நிறைந்து வழியும் மைதானம் என்றால் மைதானம் நிரம்பி வழியும். மஷ{ர்
மௌலானா பற்றி பேச இந்த மண்டபம் போதாது. மஷ{ர் மௌலானாவும் நானும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். மஷ{ர்
மௌலானா இலங்கை தமிழரசுக் கட்சியின் பீரங்கிப் பேச்சாளராக இருந்தார். அவருடைய பேச்சுக்கு உள்ள மதிப்பு> பேச்சு வன்மையைப் பற்றிச் சொன்னால் அதை சொல்லி
மாளாது. இதனால் அவர் நாவலர் என்றும் அழைக்கப்பட்டார். அவர் கல்முனைத் தொகுதியிலே தமிழரசுக்
கட்சியிலே 1960 களில் நின்ற போது அவருடைய சொந்தக்காரர்கள் வாக்களிக்காத காரணத்தினால்
பாராளுமன்ற ஆசனத்தை இழந்தார். அது அவர்
மரணிக்கும் வரையும் அந்த வடு இருந்து கொண்டே இருந்தது.
அவருக்கு முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவோடு நல்ல நெருக்கம் இருந்தது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன> பிரேமதாச போன்றோர் கூட்டங்களுக்கு போக வேண்டுமாயின் மஷ{ர் மௌலானா இல்லாமல் போக மாட்டார்கள்.
அந்த அளவுக்கு
அத்தலைவர்களுக்கு மத்தியிலே
பெரும் செல்வாக்கு
இருந்தது.
அக்காலகட்டத்திலே எல்லாத் தொகுதிகளுக்கும் சென்று ஐ.தே.கவை வெற்றி பெறச் செய்து> வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை எந்தெந்த தொகுதியில் இருந்து வந்தார்கள் என்று அறிமுகப்படுத்துகின்ற அளவுக்கு> நெருக்கமாக கட்சிக்குள்ளே மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒருவராக இருந்தார்.- vd;whu;.
சட்டத்தரணி அமீருல் அன்ஷார் மௌலானா கூறியதாவது>
மஷ{ர்
மௌலானா மருதமுனையின்
சொத்து> ஒரு முத்து. முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் ஒரு புத்தகம் எழுதி இருந்தார் அதில் பிறப்பில் இருந்து அவரது அரசியல் வாழ்வு வரை அதில்
விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
மஷ{ர்
மௌலானாவின் அரசியல் வாழ்க்கையைப் பார்த்து அவரைப் போல் அரசியல் செய்ய வேண்டு மென்று நினைத்தவன் நான். அவர் நடத்துகின்ற வாதப் பிரதி வாதங்கள்> பேசுகின்ற பாணி இவற்றையெல்லாம்
80 முன்னர் பார்த்து ரசித்தவர்கள் என்னைப் போல் பலர்
இருக்கின்றார்கள். மருதமுனையின் அரசியலின் குருவாகவும் தற்போது எமது ஊர்களில் அரசியல் செய்கின்ற அரசியல்வாதிகளின் தந்தையாகவும் வாழ்ந்து
மறைந்தவர் மஷ{ர் மௌலானா. அவரால்
மருதமுனைக்கு பெருமை என்பதுதான் உண்மை. அவர் எப்பொழுதும் எந்த இடத்துக்குச் சென்றாலும் நான் மருதமுனையைச் சேர்ந்தவன்
என்று பெருமையோடு
சொல்வார். என்றும் தனதுரையில் தெரிவித்தார்.








