Featured Home (TOP)

Recent Comments

Thursday, December 3, 2015

avathani Media Network

வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் காயம்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் புதன்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கும்புறுமூலை இராணுவ முகாமிற்கு சொந்தமான வாகனம் பாடசாலை மாணவர்கள் சென்ற துவிச்சக்கர வண்டியில் மோதுண்டதால் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் தரம் 08ல் கல்வி கற்கும் மாணவர்களான எம்.அனீக் மற்றும் ஏ.றிழா என்ற பாடசாலை மாணவர்கள் இருவருமே காயமடைந்தவர்கள் என்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பாடசாலை மாணவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வாகனத்தின் சாரதியான இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :