Featured Home (TOP)

Recent Comments

Wednesday, December 23, 2015

avathani Media Network

குத்து விளக்கு

(எம்.எல்.எம்.அன்ஸார்)

இன்றைய பூரணை இரவை
நட்சத்திரங்கள் கண்டுகளிக்கும் மண்டபத்தில்
விழாவாகக் கொண்டாட விரும்பியது சூரியன்!
*
விருந்தினராக வந்திருந்த முழுநிலவு
குத்து விளக்கை ஏற்றி ஆரம்பித்து வைத்தது
வெளிச்சம் என்கின்ற  நிகழ்ச்சியை!
*
நிலவு குத்து விளக்கு ஏற்றியதை
வானம் படம் பிடித்து
ராவு முழுக்க பதிவிட்டிருந்தது
தன் வலைப் பக்கத்தில்!
*
இருட்டில் ஒளிந்து
அடங்கிப்போய்க் கிடந்த  சூரியன்
நிலவு புரிந்துணர்வுடன்
இரவோடு இணங்கிப் போனதை
விடியற்காலை கேள்விப்பட்டதும்
நிலவைப் பழிவாங்கி
நாளைய ராவிலிருந்து தேயவைக்க
பகலைக் கூட்டி "பத்வா" கேட்டு
சதித் திட்டம் தீட்டுகிறது.

23-12-2015

-எம்.எல்.எம்.அன்ஸார்

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :