(எம்.எச்.எம்.அன்வர்)
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பல வருடகாலம் சேவை செய்து இடம்மாறிச்சென்ற இளைப்பாறிய வேலையை விட்டு விலகிய உத்தியோகத்தர்கள் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான உத்தியோகத்தரின் பிள்ளைகளுக்கு கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது
நலன்புரிச்சங்கத்தின் தலைவரும் உதவிப்பிரதேச செயலாளருமான ஏ சி அப்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் கணக்களாளர் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் நிருவாக உத்தியோகத்தர் சமுர்த்தி முகாரமயாளர் ஆகியோர் மேற்படி உத்தியோகத்தர்களுக்கு சின்னங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன் உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன