Featured Home (TOP)

Recent Comments

Monday, December 7, 2015

avathani Media Network

வடக்கு – கிழக்கு இணைக்க தேவையில்லை – ரவி கருணாநாயக்க

வடக்கு கிழக்கு மாகாணங்களை பொருளாதார ரீதியான நன்மைகளுக்காக இணைக்க வேண்டிய அவசியமில்லை என நிதி அமைசர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார காரணங்களின் அடிப்படையில் இரண்டு மாகாணங்களையும் இணைப்பத்தில் பயன் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மொத்த தேசிய உற்பத்தியில் வட மாகாணம் 4 வீத பங்களிப்பினையும் கிழக்கு மாகாணம் 6 வீத பங்களிப்பினையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து இன,மத மக்களையும் ஒன்றிணைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பௌதீக ரீதியாக பிளவடைய வேண்டும் எனத் தாம் கருதவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் உதவி வழங்கும் நாடுகளுக்கான மாநாடு ஒன்றை நடாத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :