உள்ளூராட்சி மன்றத்தேர்தல் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தத் தேர்தல் தொகுதிவாரி முறையில் நடைபெறுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
