Featured Home (TOP)

Recent Comments

Sunday, December 6, 2015

avathani Media Network

றவ்ழதுல் அத்பால் லிதஹ்லீமில்குர்ஆன் பிறைந்துரைச்சேனை இஸ்லாமிய பாலர் பாடசாலையின் முதலாவது வருடப்பூர்த்தி..



(ஜுனைட்.எம்.பஹ்த்)
றவ்ழதுல் அத்பால் லிதஹ்லீமில்குர்ஆன் பிறைந்துரைச்சேனை இஸ்லாமிய பாலர் பாடசாலையின் முதலாவது வருடப்பூர்த்தி நிகழ்வின் போது கிழக்கு மாகான சபை உறுப்பினர் கெளரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் உரையாற்றும் போது........
எத்தனையோ பல பாலர் பாடசாலைகளுக்கு, பல கலை நிகழ்வுகளுக்கு நாம் சென்று இருக்கின்றோம் ஆனால் மார்க்க ரீதியாக இஸ்லாமிய வரம்புக்குள் நடைபெறுகின்ற ஒரு கலை நிகழ்ச்சியாக மிகவும் எடுத்துக் காட்டான நிகழ்வாக இது அமைந்திருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ்.
இங்கு நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்சிகளையும் பார்க்கும் போது எமது சமூகம் மார்கத்தோடு இவ்வாறு தமது பிள்ளைகளை வளர்க்க முடியும் என்ற செய்தியினை இந்த நிர்வாகம் கௌரவமாக செயப்படுத்திவருகின்றது.
ஏனென்றால் பொதுவாகவே பாலர் பாடசாலை நிகழ்வுகளுக்கு செல்லும் பொழுது அங்கு போடப்படும் பாடல்களுக்கு நடனமாடும் பிள்ளைகள்தான் மிக அதிகம். இவ்வாறுதான் அநேகமான பாலர் பாடசாலைகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
பிள்ளைகளிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்வுகள் நடைபெறுவது குறைவாகவே இருகின்றது. இங்கு நடைபெற்ற இந்த பிள்ளைகளின் நிகழ்சிகளை பார்க்கின்ற பொழுது மிகவும் திறமை வாய்ந்த பிள்ளைகளாக இருகின்றார்கள்.

அவர்களுக்குள்ளே பாரியளவிலான திறமைகள் ஒளிந்திருக்கின்றது, அந்த பிள்ளைகளை ஊக்கிவிப்பதன் ஊடாக எதிர்காலத்தில் நல்ல ஓர் சமூகத்தை நாம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எம்மிடத்தில் வந்திருகின்றது. ஏனென்றால் பொதுவாக மார்கத்தை பற்றி பேசுவதாக இருந்தால் , மார்க்கம் சொல்கின்ற விடயங்களை பின்பற்ற வேண்டும் என்று கூறும் நாங்கள் சில வேலைகளில் மார்க்க வரம்புகளை மீறி எமது நிகழ்சிகளை நடத்துகின்றோம். 
அவ்வாறு நடக்க கூடாது இவ்வாறுதான் நடக்க வேண்டும் என்று இந்த பாலர் பாடசாலை செய்து காட்டி இருக்கின்றார்கள்.

எமது சமூகத்தை பொறுத்தமட்டில் கல்வியில் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து வருகின்றோம். ஆனால் பூரணமாக நாங்கள் வளர்ச்சியடையவில்லை.
உங்களுக்கு தெரியும் நீங்கள் ஓர் வைத்தியசாலைக்கு சென்றால் அங்கு எத்தனை முஸ்லிம் வைத்தியர்கள் இருக்கின்றார்கள் ஆண் பெண் வைத்தியர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் பார்த்தால் மிகவும் குறைந்தவர்கள்தான் எங்கள் சமூகத்தில் அங்கு வேலை செய்கின்றார்கள்.
முஸ்லிம் சமூகம் கல்வித்துறையில் பாரிய பின்னடைவுள்ளதாகத்தான் இருக்கின்றது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மிகவும் நன்றாக வளர்க்க வேண்டும் உங்கள் பிள்ளை வைத்தியராகலாம் பொறியியலாளர் ஆகலாம் ஆனால் அந்தப்பிள்ளை அடிப்படையில் மார்க்கத்துடன் கல்வி கற்கின்றதா என்பதை அவதானிக்க வேண்டும்.
அவ்வாறு இருந்தால் மாத்திரம் தான் அந்தப்பிள்ளை பிரயோசனம் உள்ள பிள்ளையாக மாறும். மேலும் பிள்ளைகளை இந்த சமூகத்திற்கு பிரயோசனம் உள்ள பிள்ளைகளாக மாற்ற வேண்டும். அது மாத்திரமல்ல அந்தப்பிள்ளைகள் மார்க்கத்திலும் தலை சிறந்தவர்களாக மாறுவதற்கு நாங்கள் எல்லோரும் பாடுபட வேண்டும் எனக்கேட்டு விடைபெறுகின்றேன.



avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :