காத்தான்குடி பாலமுனை கர்பலா வீதி பல ஆண்டுகலாக கவனிப்பாரற்று கிடக்கின்ற நிலையில் கடந்த காலங்களில் தேர்தல் வாக்குறுதிகள் பல அளித்திருந்த நிலையிலும்மேற்படி விதியினை உரிய காலத்தில் போட யாரும் முன்வரவில்லை என்பதே உண்மை.
இலங்கையில் கடந்த காலங்களில் நடந்துள்ள வன்முறைகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை புரிந்தவர்களுக்கு எதிராக சுதந்திரமானதும் நம்பகத்தன்மை உள்ளதுமான விசாரணைகளை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர்.
தெதுருஓயாவில் குதித்து காணமல் போனதாக கூறப்படும் கும்புக்கெடே பிரதேச பாடசாலையை சேர்ந்த மாணவியின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை தெதுருஓயா நீர்த் தேக்கத்தின் கீழிருந்து மீட்கப்பட்டுள்ளது.