Featured Home (TOP)

Recent Comments

Sunday, March 1, 2015

Unknown

உருவப் பொம்மை எரிப்பில் எனக்கு சம்பந்தமில்லை' - சுரேஷ் செவ்வி

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் துணைபோயிருப்பதாகக் குற்றம் சுமத்தி அவர்களின் இந்த நடவடிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்கு உள்ளாக்கியிருப்பதாகத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு குற்றஞ்சாட்டியுள்ளது.
Read More
Unknown

இலங்கை விவகாரம் தொடர்பாக ஹுசைன் சுருக்கமாக குறிப்பிடுவார்

அமைச்சர் மங்கள தலைமையில் இலங்கையிலிருந்து குழு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் கடும் சவாலாக விளங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28 வது கூட்டத் தொடர் நாளை 2ம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.
Read More
Unknown

யுவதி தூக்கிட்டு தற்கொலை : மஸ்கெலியாவில் சம்பவம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்டன் தோட்ட பார்கினி பிரிவில்  யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 வயதுடைய குறித்த யுவதி நேற்று மாலை தனது வீட்டில் வைத்தே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனணகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Read More
Unknown

கெட்ட வார்த்தைகளால் திட்டினார் அதிபர்.! மயங்கி விழுந்த ஆசிரியை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

யாழ்.மாவட்டத்தில் காரைநகர் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் கடமைக்குச் சென்ற, பாலூட்டும் தாயான ஆசிரியை ஒருவரை கெட்டவார்த்தைகளால் திட்டியதால், மயங்கீ வீழ்ந்த ஆசிரியை யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
Read More
Unknown

இங்கிலாந்தின் பந்து வீச்சை சிதறடித்த இலங்கை அணி அபார வெற்றி

இங்கிலந்து அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணியின் குமார் சங்கக்கார மற்றும் திரிமன்னே ஆகியோர் சதம் விளாசி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் இடம்பெற்று வருகின்றது.
Read More
Unknown

மைத்திரி - ரணில் உடன்பாடு : ஜூனில் தேர்தலை நடத்த திட்டம்

பாரா­ளு­மன்­றத்தை எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி கலைத்­து­விட்டு ஜூன் மாதம் பொதுத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்­சி­க­ளுக்­கி­டையில் இணக்கம் காணப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

எதிர்­வரும் பொதுத் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை பிர­தான இரு ­கட்­சி­களும் மேற்­கொண்டு வரு­வ­துடன் ஆங்­காங்கே பிர­சார வேலைத்­திட்­டங்­களும் மேற்கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களின் அடிப்­ப­டையில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட நூறு நாள் வேலைத்­தி­ட்ட­மா­னது எதிர்­வரும் ஏப்ரல் 23ஆம் திக­தி­யுடன் நிறை­வ­டை­ய­வுள்­ளது.
Read More
Unknown

சிரேஸ்ட ஊடகவியலாளர் மௌலவி முஸ்தபா மீது தாக்குதல் நடாத்த முயற்சி: ஜம் இய்யாவின் கூட்டத்தில் சலசலப்பு : ஊடகவியலாளர் மௌலவி முஸ்தபா பொலிசில் முறைப்பாடு.


(ஜுனைட்.எம்.பஹ்த்.)

ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா அவர்களை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை கூட்டத்தில் வைத்து அதன் உறுப்பினரான மௌலவி ஒருவர் தாக்க முற்பட்டதாக ஊடகவியலாளர் மௌலவி முஸ்தபா காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு(28.2.2015 சனிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.
Read More
Unknown

அல்குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் பரிசளிப்பு விழா

-டீன் பைரூஸ்-

காத்தான்குடி அல்குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் 28 வது வருட குர்ஆன் பரிசளிப்பு விழாவின் 3 வது நாள் நிகழ்வு (28.02.2015 சனிக்கிழமை)காலை 09.00 புதிய காத்தான்குடி நூராணியா ஜூம்ஆ பள்ளிவாயலில் அதன் தலைவர் பீ.எம்.பாயிஸ் தலைமையில் நடை பெற்றது.
Read More