Featured Home (TOP)

Recent Comments

Saturday, March 21, 2015

Unknown

லஜ்னதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா - காத்தான்குடி மகளிருக்கான 'உஸ்ரா ஸஈதா' மகிழ்ச்சியான குடும்பம் - விஷேட பாடநெறி தொடர்பான திட்ட வரைபு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
بسم الله الرحمن الرحيم
y[;dJ];]{d;dh me;egtpa;ah - fhj;jhd;Fb

மகளிருக்கான 'உஸ்ரா ஸஈதா'  மகிழ்ச்சியான குடும்பம் - விஷேட பாடநெறி தொடர்பான திட்ட வரைபு

دورة تأهيلية نسوية تهدف تحقيق السعادة في الزواج وتخفيف نسبة حالات الطلاق والمشاكل الزوجية
Nehf;fk;:
,y;ywtho;T rpwg;Gw;W kzkf;fs; Gupe;Jzh;Tld; gpur;rpidfs; kw;Wk; FLk;g td;Kiwfsw;w tho;itf; fl;baikf;Fk; fiyia ,yF Kiwapy; mwpe;J nfhs;s top nra;jy;.
ü tanjy;iy    -    18 30 tiu
ü gapw;rpf; fhyk;  -    3 khjk;
ü thuj;jpy;      -    4hours
ü khjj;jpy;      -    4 X 4 = 16hours
ü nkhj;jk;      -    16X3 =  48hours (3 Month)

gapw;r;rp newp eilngWk; Neuk; :
ü rdp> QhapW Mfpa jpdq;fspy; khj;jpuk;
fhiy 8.00 kzp  njhlf;fk; fhiy 10.00 kzp tiu

Nghjpf;fg;gLk; ghlq;fs;
v gpf;`{y; c];wh فقه الأسرة
v ju;gpa;ah تربية        
v tho;f;ifj; jpwd; - Life Skill               

Neu xJf;fPL
ü gpf;`{y; c];wh فقه الأسرة kw;Wk; ju;gpa;ah تربية ghlq;fs; - thuj;jpy; 3 ghlk;
3 x 4 = 12hours in month,           12 X 3 = 36hours in 3 month
ü tho;f;ifj; jpwd; - Life Skill - thuj;jpy; 1 ghlk;
1 x 4 = 4hours in month,              4 X 3 = 12hours in 3 month
ghlq;fs; cs;slf;Fk; tplaj;Jtq;fs;
gpf;`{y; c];wh
1.   ngz;fs; njhlu;ghd nghJthd tplaq;fs;
2.   gpf;`{];]th[; (jpUkzk; rhu;e;j mk;rq;fs;)
3.   fztd; kidtp Kuz;ghLk; mjid Kfhikj;Jtk; nra;jYk;
4.   ngz;fs; Rj;jk;
5.   ngz;fs; vjpu;Nehf;Fk; gpur;rpidfs;
6.   Foe;ij tsu;g;G
7.   ,];yhkpa \uPM rhu;e;j rl;lq;fs; (jyhf;> Fy;C> ,j;jh Nghd;wit)
ju;gpa;ah rhu;e;j ghlq;fs;
1.   my; Fu;Md;
2.   my; mfPjh
3.   my; mj;fhu;
4.   khu;f;f rl;lq;fs;
Life Skill
1.   rikay; (Cooking)
2.     “5 -  S” System
3.   KjYjtp  (First aid)
4.   Neu Kfhikj;Jtk; (Time Management)
5.   FLk;g Kfhikj;Jtk; (Family Management)
Vw;ghL
y[;dJ];]{d;dh me;eggtpa;ah> fhj;jhd;Fb

njhlu;G : 077 9918586, 077 9995535
Read More
Unknown

35 இலட்சம் ரூபாய் நிதி உதவியில் மஸ்ஜிதுல் ஜன்னத் பள்ளிவாயலில் - புதிய மேல்மாடி கட்டிட திறப்பு விழா

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி-06 பாவா லேனிலுள்ள மஸ்ஜிதுல் ஜன்னத் பள்ளிவாயலில் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் 35 இலட்சம் ரூபாய் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மேல்மாடி கட்டிட திறப்பு விழா 21-03-2015 இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

மஸ்ஜிதுல் ஜன்னத் பள்ளிவாயலின் தலைவர் ஏ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது அதிதிகளினால் மேற்படி பள்ளிவாயல் கட்டிடத்தின் நினைவு கல் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டு புதிய மேல்மாடி கட்டிடம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இப் புதிய மேல்மாடி கட்டிட திறப்பு விழாவில் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி),காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும், காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி),காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர், முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஜூனைட் நளீமி உட்பட காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள்  ,உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள்,   மஸ்ஜிதுல் ஜன்னத் பள்ளிவாயல் நிருவாகிகள் உட்பட மஹல்லாவாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த பள்ளிவாயலின் புதிய மேல்மாடி கட்டிடம் மத்ரசா நடாத்தும் நோக்கிலும் நோன்பு காலத்தில் பெண்கள் தராவிஹ் தொழுகை நிறைவேற்றும் நோக்கிலும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















Read More
Unknown

"அறிவார்ந்த ஆற்றல்களால் ஆளுமைகள் வளர்த்தெடுப்போம்" NFGGயின் மகளிர் அணியின் மகளிர் தின நிகழ்வுகள்

(ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)



"அறிவார்ந்த ஆற்றல்களால் ஆளுமைகள் வளர்த்தெடுப்போம்" எனும் தொனிப்பொருளில் NFGGயின் மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின நிகழ்வுகள் நேற்று மாலை (20.03.2015) மஞ்சந்தொடுவாய்யில் இடம்பெற்றது.
NFGGயின் மகளிர் அணி உறுப்பினரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மகளிர் சூறாசபை உறுப்பினருமான திருமதி சல்மா ஜவாஹிர் ஆசிரியை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருமதி பௌமியா சரீப், திருமதி நிஹாரா லாபிர் மற்றும் பரீதா முஸ்தபா ஆகியோர் உள்ளிட்ட மகளிர் சூறாசபை உறுப்பினர்கள், மகளிர் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பெண்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட மகளிர்களினால் கவிதை, பாடல் என கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் "பெண்களின் மேம்பாட்டிற்கு அதிகம் பங்களிப்புச் செய்வது அறிவியல் ரீதியான அபிவிருத்தியா? பௌதீக ரீதியான அபிவிருத்தியா" என்ற தலைப்பில் பட்டிமன்றமும், "சாதிக்கப் பிறந்தவர்கள்" நாடகமும் விஷேட நிகழ்வுகளாக இடம்பெற்றன.
நிகழ்வில் மகளிர்களின் உரைகள் இடம்பெற்றதுடன், NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் நளீமி அவர்கள் விஷேட உரை ஒன்றினை நிகழ்த்தினார்.
அத்துடன் பிரதேச மகளிர்களின் பனைக் கைப்பணிப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றன.




































Read More
Unknown

காத்தான்குடி –பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபை நடாத்திய 2015 சாதனையாளர் பாராட்டு விழாவும் ,கௌரவிப்பு நிகழ்வும்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபை நடாத்திய 2015 சாதனையாளர் பாராட்டு விழாவும் ,கௌரவிப்பு நிகழ்வும்- 21-03-2015 இன்று சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபையின் ஸ்தாபகத் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் தலைமையில் இடம்பெற்ற இவ் சாதனையாளர் பாராட்டு விழாவில் பிரதம அதிதியாக  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டதோடு கௌரவ மற்றும் விஷேட அதிதிகளாக ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.சுபைர்,சிப்லி பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி வரலாற்றில் கல்வித் துறையில் சாதனை படைத்த மாணவர்கள் அதிதிகளினால் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்,அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள்,வழிகாட்டிய அதிபர்கள் ஆகியோர் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர்,பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெவ்வை,கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன்,மட்டக்களப்பு,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைகளின் தலைவரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நளீமி உட்பட ஊர்பிரமுகர்கள்,உலமாக்கள்,புத்திஜீவிகள், கல்வியலாளர்கள் ,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளம் மற்றும் ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், , பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் ,அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள்,வழிகாட்டிய அதிபர்கள், மூத்த சமூக சேவையாளர்கள் ,கல்விமான்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

































Read More