Featured Home (TOP)

Recent Comments

Friday, April 3, 2015

Unknown

ஹிரு தொலைக்காட்சி நிகழ்வு தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அதிருப்தி ஜனாதிபதிக்கு கடிதம்


02.04.2015 வியாழக்கிழமை ஹிரு தொலைக்காட்சியில் காலை 07.30 மணிக்கு 985வது அங்கமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட “பத்தரேவிஸ்தரே” என்னும் பத்திரிகைகண்ணோட்ட நிகழ்ச்சியில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் முற்றாக மறைக்கப்பட்ட தலை கவசம் அணிவதனை தடைசெய்ய வேண்டும் என்கின்ற, பத்திரிகைகளில் வெளியான செய்திகளை ஒளிபரப்பு செய்யும்போது  “சிங்கள ராவய” எனும் பெளத்த கடும்போக்கு அமைப்பு நடாத்திய ஓர் பத்திரிகை மாநாட்டை ஒளிபரப்பியது. 
Read More
Unknown

NFGGயின் ஏற்பாட்டில் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி



நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் காத்தான்குடி ரோயல்ஸ் விளையாட்டுக் கழகதிற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.
காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியிலுள்ள மேற்படி விளையாட்டுக் கழக அங்கத்தவரின் இல்லத்தில் கழக உறுப்பினர் LM.சிப்லி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர்  மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்களான வித்யாகீர்த்தி MM.அமீர் அலி ஆசிரியர், SMM.பஸீர் ஆசிரியர், MYM.சரீப் உட்பட கழகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Read More
Unknown

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் சந்திப்பு

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி



நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் நேற்று (02.04.2015) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஸ்ரீகொத்தாவில் சந்தித்து விஷேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.
ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இலங்கையின் புதிய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாகவும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டது.
Read More
Unknown

ஜனாதிபதி மைத்திரியின் மட்டு விஜயத்தை முன்னிட்டு –மட்டக்களப்பு நகரில் பாதுகாப்பு தீவிரம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 04-04-2015 நாளை சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதனால் தற்போது மட்டக்களப்பு நகரில் பொலிசாரும்,பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மட்டக்களப்புக்கு வருகை தருவது இதுவே முதற்தடவையாகும்.







Read More
Unknown

காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2015ம் ஆண்டுக்கான புதிய நிருவாகத் தெரிவு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2015ம் ஆண்டுக்கான புதிய நிருவாகத் தெரிவு 03-04-2015  இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி தலைமையில் இடம்பெற்ற இந் நிருவாகத் தெரிவில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி.ஜெ.கலாராணி,மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தகவல் நிலையப் பொறுப்பதிகாரி மகேந்திரராசா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி குகதாஸ் உட்பட காத்தான்குடி பிரதேசத்திலுள்ள இளைஞர் கழகங்களின் தலைவர்கள்,செயலாளர்கள்,பொருளாளர்கள், அமைப்பாளர்கள்,உப தலைவர்கள்,உப செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read More
Unknown

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் சிறந்த கழகம் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழகம் யூ.எல்.எம்.என்.முபீன் புகழாரம்

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடி பிரதெச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்; சுற்றுப் போட்டியில் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக்கழகம் 2015 ஆண்டுக்கான சம்பியனாக தெரிவி செய்யப்பட்டதினை இட்டு நான் மிகவும் மகிழ்சிசியடைகின்றேன் என முன்னால் கிழக்கு மாகாகண சபை உறுப்பினரும் அமைச்சர றவூப் ஹக்கீம் இன் இனைப்ப செயலாளருமாக யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

விளையாட்டின் ஊடாக மட்டும் வெற்றி பெற மடியாது வீரர்களின் நல்ல பழக்க வழக்கம் மார்க்க பற்று நன்னடத்தை போன்ற பல்வேறு விடயங்கள் ஒரு விளையாட்டு வீரனிடம் காணப்பட வேண்டியது மிக முக்கிய பண்புகளாகும்.
Read More