Featured Home (TOP)

Recent Comments

Saturday, April 4, 2015

Unknown
ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

'விளையாட்டின் மூலம் பெறப்படும் ஆளுமைகளை சமூகத்துக்காகவும் பயன்படுத்த இளைஞர்கள் முன்வரவேண்டும்': பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள உங்களைப் போன்ற இளைஞர்கள் உங்கள் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பினையும் அந்தத் துறையோடு மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது. விளையாட்டின் மூலம் பெறப்படும் ஆளுமைகளைப் பயன்படுத்தி சமூகத்துக்காகவும் நாட்டுக்காகவும் பங்களிப்புச் செய்ய நீங்கள் முன்வரவேண்டும் என நேற்று (03.04.2015) இடம்பெற்ற காத்தான்குடி ரோயல்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
Read More
Unknown

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்பு

-பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை ஆசிர்வாதம்  (Bless Srilanka ) கிறிஸ்தவ அமைப்பு ஏற்பாடு செய்த மாபெரும் பஸ்கா பண்டிகை நிகழ்வு 04-04-2015 இன்று சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
Read More
Unknown

காத்தான்குடி மத்திய கல்லூரியின் 85 ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் கால்பந்தாட்ட தொடர்.....

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) இன் 85 வது ஆண்டினை முன்னிட்டு பல்வெறு நிகழ்வுகள் இடம்பெற இருப்பதுடன் அதன் தொடராக கழகங்ளுக்கிடையிலான முதலாவது உதைபந்தாட்ட போட்டி (03.04.2015 வெள்ளி) தேசிய பாடசாலை மைதானத்தில் கல்லூரி அதிபர் யூ.எல்.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்றது.
Read More
Unknown

கவிமணி தலைமையில் கலாசார நிகழ்வு காத்தான்குடிசம்மேளனத்தில்

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்களின் சம்மேளன கலை கலாச்சார பிரிவின் ஏற்பாட்டினில் முதலாவது கவியரங்கு சம்மேளன அஷ் ஷஹீட் அஹமடலெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் கவிமணி எம்.எச்.எம்.புஹாரி(பலாஹி) தலைமையில் நடைபெற்றது.

காத்தான்குடி சம்மேளன  கலாச்சார பிரிவின் ஏற்பாட்டினில் இடம் பெற்ற இக்கவியரங்கம் 'முறையீடு' எனம் தலைப்பில் கவிஞர் பெருமக்களால் கவி பாடப்பட்டது.
Read More
Unknown

ஓட்டமாவாடி,வாழைச்சேனை,கிரான் பிரதேசத்திற்கான தூய குடிநீர் வழங்கும் திட்டம் அமைச்சர; றவுப் ஹக்கீம் பங்கேற்பு

(ஏ.எல்.டீன்பைரூஸ்)
கல்குடா பிரதேச மக்களின் நீண்டகால பிரச்சினைகளில் ஒன்றாக இணங்கானப்பட்டு வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும்  வகையில்  ஓட்டமாவாடி,வாழைச்சேனை,கிரான் பிரதேசத்திற்கான தூய குடிநீர் வழங்கும் திட்டம் (04.04.2015 சனிக்கிழமை) இன்று பி.ப.03.00 மணிக்கு சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும், நகர அபிவிருத்தி தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் அமைச்சருமான றவுப் ஹக்கீம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

நீர் மாசடைதல்,பல்வேறுபட்ட நோய்கள் காரணமாக் மேற்படி பிரதேச மக்கள் எதிர் நோக்கி வந்த பிரச்சினைகளை சுற்றிக் காட்டிய கல்குடா பிரதேச சூறா சபை மற்றும் முஸ்லிம் காங்கிரசின்; முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி வேளைதிட்டத்தினை முன்னெடுக்குமாறு அமைச்சரின் பணிப்புலைக்கமைய அமைச்சரின் இணைப்பச் செயலாளர் யூ.எல்.எம்.என்.முபீன் முன்னெடுத்து வந்தார்.

இத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னால் கிழக்க மாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான  யூ.எல்.எம்.என்.முபீன்......
கல்குடா தொகுதிக்கான நீர்வழங்கள் திட்டமானது இரண்டு கட்டங்களாக மேற் கொள்ளப்பட இருக்கின்றது 
1)இடைக்கால திட்டம் .
2)நிரந்தர திட்டம் 
இடைக்கால திட்டமானது அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட இருப்பதாகவும் இத்திட்டத்திற்காக 1.27 இலட்சம் செலவில் மேற்படி திட்டம் அமுல்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். 

ஊண்ணிச்சை குழத்தின் ஊடாக பெறப்படும் நீரினைப்பயன்படுத்தியே இடைக்கால திட்டம் அமுல்படுத்தப்பட இருப்பதனூடாக மக்களின் நீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

குல்குடா தொகுதிக்கான நிரந்தர குடிநீர் திட்டம் இரண்டு கட்டங்களாக அமுல்படுத்தப்பட உள்ளது. இத்தட்டத்திக்கான உத்தேச மதிப்பீடு சுமார் 18 ஆயிரம் மில்லியன் ஆகும். இத்திட்டமானது உண்ணிச்சை, கரடியனாறு ஊடாக கல்குடாவுக்கு நீர் இணைப்பினை பெற்றுக் கொடுக்கும் நிரந்தர திட்டமாகும்.

இடைக்கால திட்டத்தின் மூலமாக  முதலில் கல்குடா மக்களின அவசர குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதாக  இருக்கும் என்பதுடன் இரண்டாவது திட்டத்தின் ஊடாக நிரந்தர குடிநீர பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும் எனவும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளரும,; அமைச்சரின் இணைப்பச் செயலாளருமான  யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

இன்றைய வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர் பஷீர்சேகுதாவுத் உட்பட முஸ்லிம் காங்கிரிசின் முக்கியஸ்தர்கள்,உயர் மட்ட அதிகார்கள் பலரும் கலந்து கொள்ள இருப்தாகவும்   யூ.எல்.உம்.உன்.முபீன தெரிவித்தார்
Read More