Featured Home (TOP)

Recent Comments

Sunday, April 5, 2015

Unknown

கட்டாரில் ‘நபிவழியில் நம் தொழுகை தொடர் ’ எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு

(கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி)

கட்டாரில் நபிவழியில் நம் தொழுகை தொடர் ’  எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு நாளை 6 திங்கட்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை பனார் இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஸனாஇய்யாக் கிளையில் இடம்பெறும்.
இதில் அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Read More
Unknown

"இஸ்லாமிய வரையறைகளுக்கு முரண்படாத வகையில் காத்தான்குடி நூதன சாலை அமையப்பெற வேண்டும்": NFGG வேண்டுகோள்

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி


"நூதனசாலையில் சிலைகளை அமைக்கும் விடயத்தில் உலமாக்களின் வழிகாட்டுதல்களை நிராகரித்து மார்க்கத்துக்கு விரோதமான நடவடிக்கைளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இஸ்லாத்திற்கு முரண்படாத வகையில் சமுக நோக்கத்தை நிறைவு செய்யத்தக்க ஒன்றாக காத்தான்குடி நூதனசாலையை அமைப்பதற்கு அவர் ஒத்துழைக்க வேண்டும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) காத்தான்குடி செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More
Unknown

கிழக்கு ஊடக சங்கத்துடனான சந்திப்பில் ஓப்பனைகள் இல்லாமல் மனந்திறந்தார் மட்டு. அரசாங்க அதிபர்


(பொதுச் செயலாளர்,
கிழக்கு ஊடக சங்கம்)

கிழக்கு ஊடக சங்கத்தின் பிரதான நிர்வாகிகளுக்கும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ். எம். சார்ள்ஸ் அம்மையாருக்கும் இடையிலான அறிமுகச் சந்திப்பொன்று அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.


சங்கம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மரியாதையின் நிமித்தம் இடம்பெற்ற இந்த அறிமுகச் சந்திப்பின்போது, சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், செயலாளர் வீ. பத்மஸ்ரீ, உப செயலாளர் திருமதி. காமிலா பேகம், பொருளாளர் எஸ் சச்சுதானந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read More
Unknown

பெண்களுக்கான ஜனாஷா குளிப்பாட்டுவதற்கான பயிற்சிப் பட்டறை

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் பெண்களுக்கான ஜனாஷா குளிப்பாட்டுவதற்கான பயிற்சிப்பட்டறை ஒன்று கடந்த (03.04.2015) காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மிக ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி நெறியின் வளவாளர்களாக     மஃஹதுஸ்ஸுன்னா மகளீர் அரபிக்கல்லூரி விரிவுரையாளர் மௌலவியா சில்மியா தாரிக் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்;.






Read More
Unknown

காத்தான்குடி மீடியா போரத்தின் 16 வது வருடாந்த மாநாட்டினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்


காத்தான்குடி மீடியா போரத்தின் 16 வது வருடாந்த மாநாட்டினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பிரதேசத்தில் ஊடகத்துறையில் கடமையாற்றுபவர்களிடமிருந்து  அங்கத்துவ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்களும் அங்கத்தவர்களாக சேர விரும்புபவர்களும் விண்ணப்ப படிவங்களை பெற்று எதிர்வரும் 19.04.2015 ம் திகதிக்கு முன்னர் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாவோ ஒப்படைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள் தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு   ஏற்றுக்கொள்ளப்படும்

விண்ணப்பங்களை பெற வேண்டிய முகவரி 

எம்.எச்.எம்.அன்வர் (உப செயலாளர்)

16 ஹிஜ்றா லேன் 

ஊர் வீதி 

காத்தான்குடி -03

0777 397662
Read More
Unknown

மட்டக்களப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய முழுமையான உரையும் அதன் தமிழாக்கமும்.ஓடியோ ஒலிப்பதிவு இணைப்பு

(ஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான்)

04-04-2015 நேற்று சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய முழுமையான உரையும் அதன் தமிழாக்கமும்.ஓடியோ ஒலிப்பதிவு இணைப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .https://soundcloud.com/user733934398/mp-3
Read More
Unknown

கலாச்சார விழாவும், நிந்தவூர் வரலாறும் வாழ்வியலும் நூல் வெளியீட்டு விழா.

(முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்.)


நிந்தவூர் பற்றிய வரலாற்றைத் தெரிவிக்கும்' நிந்தவூர் வரலாறும் வாழ்வியலும்' நூல் வெளியீட்டு விழா இன்று 2015.04.04 பி.ப.3.30 மணியளவில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில்,பிரதேச செயலாளர் ஜனாபா.ஆர்.யூ.அப்துல் ஜலீல் அவர்களது தலைமையில் நடைபெற்றது

இவ்விழாவில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சரும்,முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான அல்ஹாஜ்.எம்.ரி.ஹஸன் அலி அவர்களும், கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.எம்.சி.பைசால் காசீம் அவர்களும், மாகாண சபை உறுப்பினர் கௌரவ.ஆரிப் சம்சுதீன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
Read More