Featured Home (TOP)

Recent Comments

Thursday, April 23, 2015

Unknown

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவினால் -விபத்துக்களை தடுக்க பழைய பழுதடைந்த வாகனங்கள் பரிசோதிப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவினால் விபத்துக்களை தடுக்க பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் செல்லும் பழைய பழுதடைந்த  வாகனங்களை பரிசோதிக்கும் நிகழ்வு 23.04.2015 இன்று வியாழக்கிழமை காத்தான்குடி மீரா பலிகா தேசிய பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் தலைமையில் இடம்பெற்ற இவ் வாகன பிரிசோதன நிகழ்வில் மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சிரேஷ்ட பரிசோதகர் சீ.எச்.கே.விமலசந்திர உட்பட காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Read More
Unknown

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

நான் ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாள் நிறைவடைந்துள்ள நிலையில் உங்களிடம் பேச ஆவலாய் உள்ளேன்.
இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல், சர்வதேச தொடர்பு என்பவற்றை நோக்காகக் கொண்டு நாம் புதிய பல திட்டங்களை முன்னெடுத்தோம்.
ஜனாதிபதி தேர்தல் ஊடாக கிடைத்த ஜனநாயகத்தினூடாக கடந்த 3 மாத காலங்களில் சிலருடைய நடத்தைகள் மற்றும் சில அரசியல்வாதிகளுடைய நடத்தைகளில் மாற்றங்களை காண்கையில் உலக வரலாற்றில் மாற்றத்தின் பின்வரும் விளைவுகளை கண்டேன்.
அன்று ஐ.நா. மற்றும் சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களின் அழுத்தங்களை நீங்கள் அறிவீர்கள்.
மக்கள் ஆணையினூடாக நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் சர்வதேச ரீதியில் நட்புகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.
நான் சீனாவுக்கு சென்றதும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த முடிந்தது.
மக்கள் ஆணையினூடாக நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் சர்வதேச ரீதியில் நட்புகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.
வெளிநாட்டு அரச தலைவர்கள் என்னோடு கலந்துரையாடிய விதம் அற்புதமானது, அழகானது.
வெளிநாட்டுத் தலைவர்கள், இராஜதந்திரிகள், முக்கிய பிரதிநிதிகள் எமது நாட்டுக்கு வருகை தந்து உறவை வளர்த்தார்கள்.
100 நாட்களில் என்ன செய்தோம் என்று கேட்கிறார்கள். நாம் சர்வதேசத்தின் ஆதரவை பொற்றுக்கொண்டுள்ளோம்
அன்று அரச ஊழியர்கள் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை. தொலைபேசியில் கூட சுதந்திரமாக கதைக்க முடியவில்லை. இந்த 3 மாதத்துக்குள் நாம் அந்த சுதந்திரத்தை பெற்று கொடுத்துள்ளோம்.
அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளோம்.
அன்று நீதித்துறை மீது நம்பிக்கை இருந்ததா? இல்லை.
அன்று நீதிபதிக்கு சுதந்திரம் இருந்ததா? நான் பிரதம நீதியரசரை நியமித்தல் இராணுவத் தளபதியை நியமித்தல் எல்லாம் குறித்த துறைகளில் சிறப்பானவர்களை நியமித்தேன்.
என்னை தைரியம் இல்லாதவர், தலைமை பொறுப்புக்கு தகுதி இல்லாதவர் என்று சொல்லுகின்றார்கள்.
நான் அதிகாரத்தை கையில் எடுக்க ஆட்சிக்கு வரவில்லை.
என்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகாரத்தை நிறைவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்திருந்தேன். அவ்வாறே செய்ய கடமைப்பட்டுள்ளேன்.
பாராளுமன்ற உறுப்பினர்களை நான் பணிவாக கேட்டுகொள்வது என்னவென்றால் மக்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து 19ஆவது திருத்துக்கு ஆதரவாக வாக்களியுங்கள்.
புதிய தேர்தல் முறை தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாராளுமன்றத்தில் அதை சமர்ப்பித்து நடைமுறைப்படுத்த எதிர்பாரக்கின்றேன்.
அனைத்து இனங்களுக்கு மத்தியிலும் சுமுகமான உறவு ஏற்படும் வகையில் அனைவரையும் ஒன்றிணைக்க முடிந்தது.
அனைத்து இனத்தவர்களும் முரண்பாடுகள் இன்றி வாழ்வதை உறுதிப்படுத்த ஜனாதிபதி செயலணியை உருவாக்கினோம். அது மாத்திரமின்றி பிரத்தியேக செயலகம் ஒன்றையும் ஸ்தாபித்தோம்.
இணையத்தினூடாக பொய் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சிங்களவர்களை தவிர்த்து தமிழ் -முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது
நாம் இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் தெளிவாக இருக்க வேண்டும்.
எமது நாடு உலகத்தில் ஆசிர்வதிக்கப்பட்டதும் இயற்கை வளங்களை கொண்டதுமாகும். நாம் அதனை பாதுகாக்க வேண்டும்.
நல்லாட்சியினூடாக கிடைத்துள்ள ஜனநாயகத்தை தவறாக பயன்படுத்தாமல் நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
நான் இதுவரை எந்தவொரு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் தொலைபேசி அழைப்பு விடுக்கவில்லை
அதேபோன்று நீதித்துறை சார்ந்த எவருக்கும் நான் அழைப்பு எடுக்கவில்லை.
அலரிமாளிகையில் அன்று 1575 பேர் தொழில் புரிந்தனர். ஆனால் இன்று 600 பேர் தொழில் புரிகின்றார்கள். நாம் முன்னுதாரணமாக இருக்கின்றோம்.
நாம் ஆரோக்கியமான கலாசாரத்தை கட்டியெழுப்புவோம். நாட்டு மக்களின் நன்மை கருதியும் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியும் பொறுப்புணர்வோடு செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் முன்னோக்கிச் செல்வோம். புதிதாக சிந்திப்போம். அனைவருக்கும் அதிர்ஷ்டமும் சுபீட்சமும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.
Virakesary
Read More
Unknown

அல்-மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில்- மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் சேகு அலியை வரவேற்கும் நிகழ்வு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான், -எம்.எச்.எம்.அன்வர்-)

காத்தான்குடி அல்-மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நிமியமிக்கப்பட்டுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலியை வரவேற்கும் நிகழ்வு 23-04-2015 இன்று வியாழக்கிழமை அல்-மனார் நிறுவனத்தின் அர்ராஷித் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அல்-மனார் நிறுவனத்தின் நிருவாகப் பணிப்பாளர் எம்.எச்.ஏ.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இவ் வரவேற்பு நிகழ்வில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி கலந்து கொண்டதோடு விஷேட அதிதியாக அல்-மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) கலந்து கொண்டார்.

இதன் போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நிமியமிக்கப்பட்டுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி அதிதிகளினால் பொன்னாடை போர்த்தப்பட்டு ,பரிசும் ,நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
Read More
Unknown

பாராளுமன்றில் பகலிரவு ஆர்ப்பாட்டம்: மஹிந்த ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? ராஜித

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கடந்த நாட்களில் பாராளுமன்றில் பகலிரவாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதுவும் நல்லாட்சியின் வெளிப்பாடே ஆகும். மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பாராமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்த தினத்தன்று இரவில் மின்சாரத்தை துண்டித்து குளிரூட்டியை தடைசெய்திருப்பார். நாங்கள் அவ்வாறு செய்திருந்தால் அவர்களால் எவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இதுவே நல்லாட்சியின் வெளிப்பாடாகும். மேலும் அவர்களின் ஜனநாயக உரிமை என அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
Read More
Unknown

இன்று 23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்


உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தினால் (யுனெஸ்கோ - UNESCO) அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நாளாகும்.
Read More
Unknown

100 நாள் திட்டத்தை முழுமையாக நாம் நிறைவேற்றியுள்ளோம்

மக்­க­ளுக்கு நாம் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமைய அர­சாங்­கத்தின் நூறு நாட்கள் வேலைத்­திட்டம் முழு­மை­யாக நிறை­வ­டைந்­த­துள்ளது. கொடுத்த வாக்­கு­று­தி­களை செய்து காட்டி விட்டோம் என அர­சாங்கம் தெரி­வித்­தது.
19ஆவது திருத்தம் மட்­டுமே எஞ்­சி­யுள்ள நிலையில் அதையும் நிறை­வேற்­றி­விட்டு பொதுதேர்­த­லுக்கு செல்­வதா­கவும் குறிப்­பிட்­டது. அர­சாங்க தகவல் திணைக்­களத்தில் இடம்­ பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின்போதே பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;
Read More