
காத்தான்குடி நகரசபையின் ஆதன வரி அதிகரிப்பு தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் விடுக்கும் அறிவித்தல்.
இவ்வாண்டுக்கான (2015) ஆதன வரிகள் காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட காணிகள், வீடுகள், வியாபார ஸ்தாபனங்களுக்கு திடீரென 4 தொடக்கம் 5 மடங்காக அதிகரிக்கப்பட்டமையானது மக்களுக்கு ஒர் பாரிய வரிச்சுமையாக காணப்படுகின்றது.
வரிகள் திடீரென பன்மடங்காக அதிகரிக்கப்பட்டதனால் வறுமை கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்களும், அன்றாடம் பிழைப்பு நடாத்தி தமது சீவியத்தை கொண்டு செல்லும் மக்களும், சிறியசிறிய வியாபாரங்களில் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களும், மற்றும் அணைத்து தரப்பினரும் மிக பாரிய அசௌகரியத்தினை முகம் கொடுத்து வருகின்றனர் என்பதை அறிந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் இந்த விடயத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நஸீர் ஹாபீஸ் அவர்களின் கவனத்திற்கு கடந்த 11.02.2015 அன்று கடிதம் மூலம் இவ் வரி அதிகரிப்பு அறவீட்டினை நிறுத்துமாறு ஆணித்தரமாக வேண்டுகோளை விடுத்திருந்தார்.






