Featured Home (TOP)

Recent Comments

Saturday, May 16, 2015

Unknown

நியா­ய­மான காரணம் கூறப்­ப­டா­விடின் அரசிலிருந்து அடுத்தவாரம் விலகுவோம்

உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்­களை ஜன­நா­யக விரோ­த­மான முறையில் விசேட ஆணை­யா­ளர்­களின் கீழ் கொண்­டு­வந்­துள்­ளமை நல்­லாட்­சிக்கு ஏற்­பு­டை­ய­தாக இல்லை. இந்த விட­யத்தில் நாங்கள் அதி­ருப்­தி­யுடன் இருக்­கின்றோம். இது தொடர்பில் ஜனா­தி­பதி விளக்­க­ம­ளிக்­க­வேண்டும்.
நியா­ய­மான கார­ணங்கள் முன்­வைக்­கப்­ப­டா­விடின் அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­பதா இல்­லையா? என்­ப­தனை அடுத்த வார­ம­ளவில் சுதந்­திரக் கட்சி தீர்­மா­னிக்கும் என்று கட்­சியின் ஊடக பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.
Read More
Unknown

தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்கம் அமைக்க ஒத்­து­ழைக்­க­மாட்டோம்

பொதுத் தேர்­தலின் பின்­னரும் தேசிய அர­சாங்கம் அமை­வதை நாம் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம். கூட்டு அர­சாங்­கத்­துக்கு இனி அவ­சியம் இல்லை. எனவே, பிர­தான தனிக் கட்­சியே ஆட்­சி­ய­மைக்க வேண்டும் என எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­ல டி சில்வா தெரி­வித்தார்.
எமது பிர­தான எதிரி ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆவார். அவரை ஒன்­றி­ணைத்து எதிர்­கால அர­சி­யலை மேற்­கொள்ள முடி­யாது. இந்த பொதுத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியை வீழ்த்­து­வதே எமது நோக்­க­மெ­னவும் அவர் குறிப்­பிட்டார்.
பொதுத் தேர்­தலின் பின்னர் மீண்டும் தேசிய அர­சாங்கம் அமை­வ­தற்­கான சாத்­தியம் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
Read More
Unknown

காத்தான்குடி நகர சபையின் ஐம்பெரும் எழுச்சி விழா-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி நகர சபையின் ஐம்பெரும் எழுச்சி விழா 15-05-2015 நேற்று சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இம் ஐம்பெரும் எழுச்சி விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ மற்றும் விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சட்டத்தரணி கே.சித்திரவேல் ,காத்தான்குடி நகர சபை செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர்,பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத்,காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்;பினர்களான எம்.எச்.எம்.பாக்கீர்,எம்.எம்.ஏ.லெத்தீப்,ஹாஜியானி சல்மா அமீர் ஹம்ஸா ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,கல்வியலாளர்கள் ,நகர சபை உத்தியோகத்தர்கள் உட்பட அதன் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு துறைகளிலும் சேவையாற்றிய கல்வியலாளர்கள்,உலமாக்கள்,ஊடகவியலாளர்கள்,  சமூக சேவையாளர்கள், எஸ்.எம்.எஸ்.குறுஞ்செய்தியாளர்கள்,கலைஞர்கள் ஆகியோர் அதிதிகளினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ,எழுச்சிக் கதிர் பாகம் -02 எனும் நூலும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இங்கு காத்தான்குடி நகர சபை பொது நூலக கணினி மயமாக்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதில் காத்தான்குடி நகர சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேற்படி விழாவில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

















































Read More