Featured Home (TOP)

Recent Comments

Friday, May 22, 2015

Unknown

வித்யா கொலைக்கு எதிராக சவூதியில் ஆர்ப்பாட்டம்.. (படங்கள்)


படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்யா விற்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக்கோரியும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் எனவும் கோரி சவூதிஅராபியா ஜித்தா நகரில் உள்ள இலங்கை சகோதரர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 
Read More
Unknown

மட்டு நகரில் இடம்பெற்ற குடியரசு தின நிகழ்வு!

இலங்கையின் குடியரசு தினம் இன்று வெள்ளிக்கிழமை(22) காலை நாடு முழுவதிலுமுள்ள அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டசபைகள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் என அனைத்திலும் கொண்டாடப்பட்டன.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22)  காலை குடியரசு தின நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில், தேசியக்கொடியை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான  திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஏற்றி வைத்தார். நிகழ்வில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
Read More
Unknown

ஜனாதிபதி - பிரதமர் நீண்டநேரம் இரகசிய கலந்துரையாடல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்  நீண்டநேரம்   பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.   
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்ததன் பின்னரே  ஜனாதிபதியும் பிரதமரும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. 
குறிப்பாக பாராளுமன்றத்தை கலைத்தல் அரசியலமைப்பின்  20  ஆவது திருத்தச் சட்டமாக தேர்தல் முறை மாற்றத்தைக் கொண்டுவருதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  
Read More
Unknown

வித்யாவின் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் படுகொலையைக் கண்டித்து காத்தான்குடியில் முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம்

யாழ் புங்குடுதீவு மாணவி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு படு கொலை செய்யப்பட்டதை கண்டித்து காத்தான்குடியில் (21.5.2015) வியாழக்கிழமை முஸ்லிம் பெண்கள் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் என்பவற்றில் ஈடுபட்டனர்.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா தலைமையில் அதன் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
Read More
Unknown

பெண்களுக்கான சுயாதீனஆணைக்குழுவை உடனே நிறுவு என்ற கோரிக்கையுடன் வித்தியாவின் படுகொலையை கண்டிப்பு

(எச்.எம்.பாத்திமா ஷா்மிலா)

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பில் பொதுமக்கள் (21) இன்று காலை கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படுகொலை நிகழ்வைக் கண்டித்தும் கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கக் கோரியும் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
மஞ்சந்தொடுவாய் தொழினுட்பக் கல்லூரிக்கு முன்னாலும், காத்தான்குடி உள் வீதிகளிலும் தமிழ் முஸ்லிம் பொதுமக்கள் ஒன்று திரண்டு இந்த கவன ஈர்ப்பு பேரணியில் பங்கெடுத்தனர்.
பெண்களின் அபிவிருத்திக்கும் வலுவூட்டலுக்குமான அமைப்பின் தலைவி சல்மா ஹம்ஸா மற்றும் மட்டக்களப்பி இயங்கும் சில பெண்கள் அமைப்புக்கள் உடன் பெண் சமுக ஆர்வளா்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றினர்.
‘சாதிக்கப்ப பிறந்த பெண்ணை சோதித்தவர்களை சும்மா விடாதே,
மாணவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் மிதித்து விடாதே,
அன்று சீமா இன்று வித்தியா, நாளை யாரோ?
சட்டமே நீ தூங்கி விடாதே, சிறுவர் துஷ்பிரயோகத்தை உடன் நிறுத்து,
பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டனமூலத்தை வலுப்படுத்து’
அரசே பெண்களுக்கான சுயாதீனஆணைக்குழுவை உடனே நிறுவு.
போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் பொதுமக்கள் ஏந்தியிருந்ததுடன் பொதுமக்கள் அனைவரும் கையெழுத்திட்ட மகஜா் ஒன்றையும் ஜனாதிபதிக்கும் சிறுவா்பாதுகாப்பு அமைச்சிக்கும் அனுப்பி வைக்க தீர்மாணம் எடுத்தனா்.
Read More
Unknown

சேதமடைந்த வீதியை தற்காலிகமாக செப்பனிடும் பணி நிறைவு



காத்தான்குடி மில்லத் பாடசாலை சந்தியில் உள்ள ஊர் வீதி மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது இது மழை காலங்களில் பயணிக்க முடியாத ஓர் அவலநிலை காணப்படுவதனாலும் சாதாரண காலங்களில் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்குவதவதனாலும் இவ் வீதியினுடைய அப்பகுதியை தற்காலிகமாக சீர் செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வேண்டுகோள் விடுத்ததற்கு இனங்க  இதனை  சீர் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளது இதன் முதல் கட்டமாக ABC கலவை கற்கள் இடப்பட்டு இந்தப்பகுதி நேர்த்தியக்கப்படுகின்றது.

இன்ஷாஅல்லாஹ் மிக விரைவில் இப்பாதை பூரணமாக செப்பநிடுவதற்கானநடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதுவரைக்கும் மக்களுடைய இலகுவான பிரயாணத்திற்காக தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது.
என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லிபாறூக் தெறிவித்தார் .

(ஜுனைட்.எம்.பஹ்த் )



Read More