Featured Home (TOP)

Recent Comments

Monday, June 8, 2015

Unknown

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை சர்ச்சை தொடர்பில் ஜக்கிய மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு-ஓடியோ இணைப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை சர்ச்சை தொடர்பில் ஜக்கிய மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு 07-06-2015 நேற்று  ஞாயிற்றுக்கிழமை இரவு காத்தான்குடி கடற்கரையிலுள்ள கடாபி பீச் காடன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் ஜக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நஸார் காத்தான்குடி பூர்வீக நூதனசாலை சர்ச்சை தொடர்பில் ஜக்கிய மக்கள் ஒன்றியம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கை தொடர்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

அவர் தெரிவித்த கருத்துக்கள் இத்துடன் முழுமையாக ஓடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

கீழ் இணைப்பை கிளிக் செய்க.




Read More
Unknown

தாய், தந்தையை கொலை செய்த 16 வயது மாணவிக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது ( படங்கள்)

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் கடந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக் கொலை வழக்கின் நான்காவது சந்தேக நபருக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த குறித்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம், நான்காவது சந்தேகநபரான, கொலை செய்யப்பட்டவர்களின் மகளான ரகு தக்ஷனா (வயது 17) எனும் பள்ளி மாணவிக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்க உத்தரவிட்டார்.
இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று சந்தேக நபர்களான மாணவர்கள் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
Read More
Unknown

நாட்டில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்: ஜனாதிபதி சூளுரை

நாட்டை ஒழுக்க சீர்கேட்டிலிருந்து பாதுகாப்பதற்காக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறப்பானதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்காக மத நல்வழிகாட்டல்கள் அவசியமாகுமென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வாத்துவ சுனத்தாராம விஹாரையில் இரண்டு மாடி பிரிவெனா கட்டத்தை திறந்து வைத்த பின்னர் அங்கு இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார். 
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
Read More
Unknown

காத்தான்குடியின் சமகால அரசியல்...! ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் விழிப்பூட்டும் பிரசுரம். அங்கம் 04

அங்கம் 04
இப்பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்படவிருந்த வேளையில் மெத்தைப்பள்ளிவாயலில் பேஷ் இமாமாக இருந்தபோது, அப்பள்ளிவாசல் மத்ரஸா மாணவர்கள் தனவந்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கத்முல் குர்ஆன் ஓதித் தமாம் செய்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தொகைகளை வீட்டுக்கு வெளியே வந்ததும் முழுவதுமாகப் பறித்துக் கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, உள்ளுர் பத்திரிகையிலும் பல வாரங்களாக நீடித்து வந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டு பதவியிறக்கப்பட்டவரும், ஜம்இய்யாவின் நிர்வாக சபை உறுப்பினருமான மௌலவி .எம். காலித் ஹஸன் (பலாஹி), காத்தான்குடி மத்திய கல்லூரி ஆசிரியரும், ஜம்இய்யாவின் உப தலைவர்களில் ஒருவருமான மௌலவி எச்.எம். ஷாஜஹான் (பலாஹி), முன்னாள் நகர சபை உறுப்பினரும், ஜம்இய்யாவின் நிர்வாக சபை உறுப்பினருமான மௌலவி எம்..எம். முபாறக் (பலாஹி) போன்றவர்களும் அந்தப் பிரேரணைக்கு எதிராகத் துள்ளிக்குதித்து, போர்க்கோலம் கொண்டு, சபைக்கு மத்தியில் நின்று தாண்டவமாடியதாகவும் கூறப்படுகிறது.
இந்த அமளியின் காரணமாக ஜனநாயக வழியில் இப்பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கூட அங்கு நடைபெறாது கண்ணியமிக்க உலமாக்கள் ஆளுக்கொரு பக்கமாகக் கலைந்து சென்றதாகவும் தகவல் கிடைத்தது. இந்தக் களேபரத்தினால் எமது கடிதம் அன்றையக் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லை. எமக்கொரு முடிவை அறிவிக்கவுமில்லை.
இவ்விடத்தில் இந்த காலித் ஹஸன் மௌலவியைப் பற்றியும் நாம் சிறிது குறிப்பிட வேண்டும்.
2011
ம் ஆண்டு நகர சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நாம்போர்வாள்சின்னம் ஏந்தி எதிர்த்து நின்ற நவக்கிரக டே;பாளர்களுக்கு ஆதரவாக இவர் மெத்தைப்பள்ளிவாசல் மிம்பரில் நின்றுகொண்டு ஜும்ஆப்பிரசங்கம் செய்த இறையச்சமில்லாதவர்.
Read More