Featured Home (TOP)

Recent Comments

Wednesday, June 17, 2015

Unknown

புனித ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்: ACJU


அல்லாஹ் புனித ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் இதனை சிறப்புப் படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும்.

மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமாகும்.

துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இவ்வரிய மாதத்தைப் பயன்படுத்தி நாம் எமது தேவைகளுக்காகவும் உம்மத்துடைய நலனுக்காகவும் அதிகமாக துஆவில்ஈடுபட வேண்டும். குறிப்பாக நாட்டில் ஒற்றுமை, சகவாழ்வு என்பன நிலவ நாம் பிரார்த்திக்க வேண்டும்.

ரமழானில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்குகள் பின்வருமாறு:

இபாதத்களில் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுதல். இதன் மூலம் நேரத்தை வீணாக்குவதை தவிர்ந்து கொள்ளல்.

அல்-குர்ஆன் இறக்கப்பட்ட மாதமான ரமழானில் அதிகளவு அல்-குர்ஆனை ஓதுதல் மற்றும் அதனை விளங்கி நடைமுறைப்படுத்தல்.

கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாது உலமாக்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப நிதானத்துடன் நடந்து கொள்ளல்.

ஏழைகளையும் தேவையுடையோரையும் அடையாளம் கண்டு ஸஹர் மற்றும் இப்தாருக்கான ஏற்பாடுகளை செய்தல். மேலும் இவற்றின் போது வீண்விரயத்தை தவிர்த்தல்.

இளைஞர்கள் மஸ்ஜித்களில் இபாதத்கள் முடிந்தவுடன், இரவு நேரங்களில் பாதைகளில் விளையாடுதல் போன்ற பிறருக்கு இடையூறு செய்யும் விடயங்களை முற்றாகத் தவிர்ந்து கொள்ளல். மேலும் பெற்றோர் இவ்விடயத்தில் கண்காணிப்புடன் செயற்படல்.

இரவுநேர இபாதத்களில் ஈடுபடும் போதும் பயான்களின் போதும் பிறருக்கு இடையூறு ஏற்றபடாத வகையில் ஒலிபெருக்கிகளின் சத்தத்தை மஸ்ஜிதுக்குள் மாத்திரம் வைத்துக் கொள்ளல்.

ஸஹர் நேரங்களில் பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் வானொலிச் சத்தத்தை உயர்த்தாதிருத்தல்.

உங்கள் வீடுகளில் தயாரிக்கும் உணவுப் பொருட்களை அயலிலுள்ள முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லா தோருக்கும் கொடுத்தல் போன்ற நற்பணிகளில் ஈடுபடுதல்.

பெண்கள் மஸ்ஜித்களுக்கு செல்லும் போது ஷரீஆ வரையறைகளைப் பேணி உரிய பாதுகாப்புடன் செல்லல். ஆண்கள் இது குறித்து சிறந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்.

மஸ்ஜித்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது பிறருக்கு இடைஞ்சல் இல்லாது நடந்து கொள்ளல்.

மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகளும் மஸ்ஜித் நிர்வாகங்களும் முஸ்லிம் சமூகமும் ஒத்துழைப்புடன் செயற்படல்.

எனவே இப்புனித ரமழானை சரியாகப் பயன்படுத்திக் கொள்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பிரார்த்தனைகளைஅங்கீகரித்து நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு வளரவும் புரிந்துணர்வோடு வாழவும் நல்லருள் பாலிப்பானாக.

அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
Read More
Unknown

பெண்களை சீதனக் கொடுமையிலிருந்து மீட்க வேண்டும் -சல்மா ஹம்சா

பெண்களை சீதனக் கொடுமையிலிருந்து மீட்க வேண்டும் என பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான திருமதி சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.
சீதனம் சீர்திருத்தப்படல் வேண்டும் எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று (15.6.2015)காத்தான்குடியிலுள்ள பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜம் இய்யத்துஸ் ஸபாப் நிறுவனத்தின் அனுசரணையுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஜம் இய்யத்துஸ்ஸபாப் நிறுவனத்தின் பணிப்பாளரும், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் உப செயலாளருமான மௌலவி எம்.எஸ்.எம்.தாஸீம் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த திருமதி சல்மா ஹம்ஸா சீதனம் என்பது வறுமையான பெண்களை வதைக்கும் ஒரு நடவடிக்கையாகும். இன்று சமூகத்திலே சீதனக் கொடுமையினால் திருமணம் செய்து கொள்வதற்கான வயதாகியும் சீதனம் கொடுப்பதற்கு தம்மிடம் வசதி வாய்ப்பு இல்லை என்பதற்காக திருமணம் செய்யாமல் வீட்டின் மூலைக்குள் முனங்கிக்கிடக்கும் பல வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை நாங்கள் இன்று பார்க்கின்றோம்.
திருமணம் செய்து கொள்வதற்காக வீடொன்றை நிர்மானிப்பதற்கு பல வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் வெளிநாடு சென்று மிகவும் கஸ்டத்திற்குள் நிர்க்கதியான நிலைக்குள் தள்ளப்படுவதையும் நாங்கள் பார்க்கின்றோம்.
இந்த நிலை மாற வேண்டும் ஆண்கள் வீடுகட்டி பெண்களை எடுத்து திருமணம் செய்ய வேண்டும். சீதனம் சீர்திருத்தப்படல் வேண்டும் என்றார்.
ஜம் இய்யத்துஸ் ஸபாப் நிறுவனத்தின் அனுசரணையுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சீதனத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் அதனால் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி விழிப்புனர்வு வேலைத்திட்டத்தினை சமூக மட்டத்தில் மேற் கொள்வதென இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாகவும் திருமதி சல்மா ஹம்ஸா மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் தொழிலின்றி காணப்படும் ஆண்களுக்கு தொழில் வழிகாட்டுதல், சீதனமின்றி பெண்களை திருமணம் செய்வதற்காக முன்வரும் ஆண்களை அதற்காக ஊக்குவித்தல் போன்ற செயற்திட்டங்களையும் மேற் கொள்ள நடவடிக்கை எடுப்பதெனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டதாக திருமதி சல்மா ஹம்ஸா மேலும் குறிப்பிட்டார்.



Read More
Unknown

காத்தான்குடி பூர்வீக நூதனசாலையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வா குழு பிரதிநிதிகள் பார்வையிட்டனர்

(எம் எச் எம் அன்வர்)

காத்தான்குடி பூர்வீக நூதனசாலையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வா குழு பிரதிநிதிகள் 11 பேர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்

காத்தான்குடி ஜம்இய்;யத்துல் உலமா, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ,முன்னாள் பிரதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா மற்றும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ் எச் அஸ்பரின் வேண்டுகோளின் பேரில் தாம் வருகை தந்துள்ளதாகவும் அவற்றினை பார்வையிடவே தாம் வருகை தந்துள்ளதாகவும் நாளை இடம்பெறவுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கூட்டத்தின்போது இதை சமர்ப்பித்து ஒரு காத்திரமான முடிவொன்றினை எடுக்கவுள்ளதாகவும் பத்வா குழு உலமா பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்

முன்னாள் பிரதியமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவின் அயராத முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட பூர்வீக நூதனசாலையானது சிலைகள் வைக்கப்பட்டமை தொடர்பாக அண்மையில் பல்வேறு விமர்சனங்கள் பலதரப்;பாலும் எழுப்பப்பட்டிருந்தன

இதன் காரணமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள் வந்து பார்வையிட்டு அவர்கள் எதை எடுக்கச்சொல்கிறார்களோ அல்லது எதை நீக்கச்சொல்கிறார்களோ அது நீக்கப்படும் என முன்னாள் நகர சபை தவிசாளர் எஸ் எச் அஸ்பர் தெரிவித்திருந்தார்

பல நூற்றாண்டுகாலமாக முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு அரும் பங்காற்றியுள்ளனர் அது இன்று மறைக்கப்படுகிறது பர்மா நாட்டிலும் இதே நிலைதான் ஏற்பட்டதுடன் அவர்களின் நிலைமை எமது முஸ்லிம்களுக்கு ஏற்படக் கூடாது என்ற நோக்கிலும் பல்வேறு இனவாத சக்திகளுக்கும் மத்தியில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தினை நாடி மாத்திரமே இதை செய்ததாகவும் நாம் மரணித்தாலும்  எதிர்கால சந்ததிகளுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும் இதை நீங்கள் சமர்ப்பித்து சரியான  முடிவொன்றை எடுக்குமாறு முன்னாள் பிரதியமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் இந்த சந்திப்பின்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது











Read More
Unknown

அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு

(-எம்.எச்.எம்.அன்வர்-)

காத்தான்குடி அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு  வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று காத்தான்குடி அல் பஜ்ர் காரியாலயத்தில் தலைவர் அலஹாஜ் எஸ் ஏ கே பழீலுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றது

அல் கிம்மா நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 75 குடும்பங்களுக்கு இவ்வுலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மேற்படி நிகழ்வுக்கு ஓட்டமாவடி அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம் எஸ் எஸ் ஹாறுன் ஸஹ்வி உட்பட சவூதி அரேபிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டு உலருணவுப்பொருட்கள் வழங்கி வைத்தனர்

பல்வேறு சமூக சமய கல்விப்பணிகளில் ஈடுபட்டுவரும் காத்தான்குடி அல் பஜ்ர் நலன்புரி அமைப்பானது அதன் ஓர் சிறு முயற்சியாக இந்நிகழ்வு இடம்பெற்றதாகவும் இலவச ஜனாஸா கொண்டுவருதல் மற்றும் வறிய மக்களுக்கான பொருளாதார உதவிகளை வழங்கி வைத்தல் போன்ற பணிகளை செய்து வருவதாகவும் அதன் தலைவர் அலஹாஜ் எஸ் ஏ கே பழீலுர் ரஹ்மான்  இதன்போது தெரிவித்தார்






Read More