Featured Home (TOP)

Recent Comments

Friday, June 19, 2015

Unknown

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரீ.பி. சம்சூதீன் நியமனம் -

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
இலங்கை பொலிஸ் திணைக்களத்;தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரீ.பி.சம்சூதீன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனினால் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
மேற்படி  மாவட்டத்திற்கான 14வது பிரதிப் பொலிஸ் மா அதிபராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரீ.பி.சம்சூதீனுக்கான பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்;தியட்சகர் காரியாலய வளாகத்தில் இன்று (19) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 
 
இதன் போது மட்டு-மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரீ.பி.சம்சூதீனுக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. 
          
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் ஜெயசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்கர் அனுருத்த பண்டார ஹக்மன உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் பிராந்தியங்களின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். 
 
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 14வது பிரதிப் பொலிஸ் மா அதிபராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரீ.பி.சம்சூதீன் இதற்கு முன்னர் நுவெரெலியா மாவட்ட பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.













Read More
Unknown

வர்த்­த­மானி அறி­வித்­தலை உடன் வாபஸ் பெற வேண்­டும்

வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்பட்­டுள்ள 20ஆவது திருத்தச் சட்­டத்தை அர­சாங்கம் உட­ன­டி­யாக வாபஸ் பெற வேண்டும் என சிறு­பான்மை மற்றும் சிறி­ய­ கட்­சிகள் ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்­துள்­ளன.
மேலும் ஜன­நா­யக விரோ­த ­மான இந்த திருத்­தத்தை அர­சாங் கம் வாபஸ்­பெறாவிட்டால் நாடு­த­ழு­விய ரீதியில் போரா­டு­வ­தா­கவும் தீர்­மா­னித்­துள்­ளன.
வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­களின் விசேட கலந்­து­ரை­யாடல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸ­லாமில் நேற்று நடை­பெற்­றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நகர அபி­வி­ருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்­ச­ரு­மான ரவுப் ஹக்கீம் தலை­மையில் நடை­பெற்ற இந்த கலந்­து­ரை­யாடல் முஸ்லிம் காங்­கிரஸ், மக்கள் விடு­தலை முன்­னணி, தேசிய ஐக்­கிய முன்­னணி, ஈ.பி.டி.பி, நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி, நவ­சி­ஹல உறு­மய, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி, இலங்கை சோச­லிச கட்சி, புதிய தொழி­லாளர் முன்­னணி, ஜன­நாய தேசிய மக்கள் காங்­கிரஸ், ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆர். யோக­ராஜன் மற்றும் பல கட்­சிகள் கலந்து கொண்­டி­ருந்­தன.

தேர்தல் முறைமை மாற்றம் குறித்து ஆராய்­வ­தற்­காக ஏற்­க­னவே இந்த கட்­சிகள் கொழும்பில் பல தட­வைகள் கூடி தங்­க­ளது தீர்­மா­னங்­களை ஜனா­தி­பதி மற்றும் அர­சாங்­கத்­திடம் தெரி­வித்­தி­ருந்­தன.
இந்­நி­லையில் நேற்று முன்­தினம் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­ப­டுள்ள 20 ஆவது திருத்தச் சட்­ட­மூலம் சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­களின் ஜன­நா­யக உரி­மையை மீறு­வ­தா­கவே உள்­ளது என தெரி­வித்தே இந்த சந்­திப்பு கலந்­து­ரை­யாடல் நேற்று நடை­பெற்­றது.
இந்தக் கலந்­து­ரை­யா­டலின் இறு­தியில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்­களை அமைச்சர் ரவுர் ஹக்கீம் தெரி­விக்­கையில்,
20 ஆவது திருத்தச் சட்­டத்தை நாங்கள் எல்­லோரும் ஏக­ம­ன­தாக எதிர்ப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம் , அத்­துடன் 20 ஆவது திருத்தச் சட்­ட­மூலம் புரண ஒத்­தி­சைவு இல்­லாமல் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரித்­ததன் மூலம் எமது அடிப்­படை ஜன­நா­யக உரி­மையை பறித்­தி­ருப்­பதை நாங்கள் கண்­டிக்­கின்றோம். அர­சாங்கம் இதனை உட­ன­டி­யாக வாபஸ் பெற வேண்டும்.
இரட்டை வாக்குச் சீட்டு முறை உட்­பட எமது பல வித­மான திருத்­தங்கள் முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. எந்த அடிப்­ப­டையும் இல்­லாத ஒரு­த­லைப்­பட்­ச­மாக ஒரு சில கட்­சி­களை பாது­காக்கும் வகையில் கொண்­டு­வ­ரக்­கூ­டிய தோ்தல் திருத்­த­மா­கவே இதை நாங்கள் பார்க்­கின்றோம்.
மேலும் இது தொடர்­பாக எமது தீர்­மானம் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­சிங்­க­வுடன் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்னர் 20 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு எதி­ரான போராட்­டத்தை நாட்டு மக்கள் முன் எடுத்துச் செல்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம்.
தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ­க­ணேசன் இங்கு கருத்து தெரி­விக்­கையில்,
20 ஆவது திருத்தம் தொடர்­பாக சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சிகள் பல திருத்­தங்­களை முன்­வைத்­தன. என்­றாலும் அர­சாங்கம் எமது எந்­த­வொரு கருத்­தையும் உள்­வாங்­காமல் தான்­தோன்­றித்­த­ன­மாக அவ­ச­ர­மாக இதனை வர்த்­த­மா­னியில் பிர­சு­ரித்­ததை நாங்கள் கண்­டிக்­கின்றோம். இது சகல சிறிய கட்­சி­க­ளையும் அழித்­து­விட்டு் பெரிய இரண்டு கட்­சிகள் மாத்­திரம் நாட்டை ஆள வேண்டும் என்­ப­தற்­காக கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாகும். எனவே அர­சாங்கம் இதனை உட­ன­டி­யாக வாபஸ் பெற வேண்டும் இல்­லா­விட்டால் தேசி­ய­ரீ­தியில் சகல இன மக்­க­ளையும் ஒன்று சோ்த்து மாபெரும் ஆர்ப்­பாட்­டத்தை நாடு­பு­ரா­கவும் கொண்டு செல்வோம்.
மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­கு­மார திஸா­நா­யக்க கூறு­கையில்,
தற்­போது முன்­வைக்­கப்­பட்­டுள்ள 20 ஆவது திருத்தச் சட்­ட­மூலம் எமது நாட்டின் ஜன­நா­ய­கத்­தையோ நாட்டு மக்ளின் உரி­மை­க­ளையோ மற்றும் ோ நாட்டு மக்ளின் உரிமைகளையோ மற்றும் அரசியல் கட்சிகளின் உரிமைகளையோ பாதுகாப்பதற்கு போதுமானதாக இல்லை. வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் எந்த வகையிலும் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தமாக அமையப்போவதில்லை. சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆழமாக ஆராய்ந்து இதனை திருத்தி அமைக்க வேண்டும்.
எனவே அரசாங்கம் இந்த சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றார். தேசி­ய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத்­சாலி மற்றும் சிறி­­துங்க ஜய­சூ­ரிய ஆகி­யோரும் இங்கு கருத்து தெரி­வித்­த­னர்.

Read More
Unknown

"20 இற்கு பின்­னரே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டும்''

இரு­ப­தா­வது திருத்தம் நிறை­வேற்­றப்­பட்ட பின்­னரே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும். 20 ஆவது திருத்­தத்­தில் 237 ஆசன முறை­மைக்கு ஐ.தே.க.வும் அமைச்­ச­ர­வையில் இணக்­கத்தை தெரி­வித்துள்­ள­து என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வி­த்­தார்.

கொழும்பில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன,இரு­ப­தா­வது திருத்தம் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
இனி இது தொடர்பில் எதிர்ப்­புக்கள் இருக்­கு­மாயின் உயர் நீதி­மன்­றத்தில் எதிர்ப்­புக்­களை இரண்டு வாரங்­க­ளுக்குள் தாக்கல் செய்­யலாம்.அதன் பின்னர் இரு­ப­தா­வது திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் முன் வைக்­கப்­பட்டு விவாதம் நடத்­தப்­பட்டு நிறை­வேற்­றப்­படும்.
Read More
Unknown

தம்புள்ள பள்ளிவாசல் அதே இடத்தில் தான் இருக்க வேண்டும் – உலமா கட்சித் தலைவர்


தம்புள்ள பள்ளி சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு அக்கட்சியின் தவிசாளர் கடிதம் எழுதுவதன் மூலம் அக்கட்சி கோமாளிகளின் கூடாரம் என்பதை காட்டுகிறது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.

தம்புள்ள பள்ளி விவகாரத்தை உடனடியாக தீர்த்து வைக்கும்படி நகர அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் தனது தலைவருக்கு தவிசாளர் பசீர் சேகு தாவுத் நேரடியாக சொல்ல வழி தெரியாது கடிதம் எழுதியிருப்பதன் மூலம் அக்கட்சியின் அதியுயர் உறுப்பினர்கள் கூட ஒருவரை ஒருவர்
சந்திக்க முடியாமல் தூரத்தில் இருந்து கொண்டு கடிதம் எழுதும் பகிடித்தனமான அரசியலை மு. கா செய்கிறது.
Read More