Featured Home (TOP)

Recent Comments

Saturday, June 27, 2015

Unknown

இஸ்வா அமைப்பின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

( முஹம்மட் ஜெலீல், நிந்தவூர் )


இஸ்லாமிய சமூக நலன்புரி மறுமலர்ச்சி (இஸ்வா) அமைப்பின் ஏற்பாட்டில் அதன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஜனாஸா வாகண நிதி சேகரிப்பில் இணைந்து செயற்பட்ட கழகங்கள், சமூக சேவை உறுப்பினர்களுக்கான இப்தார் நிகழ்ச்சி 2015—06-26ம் திகதி இஸ்வா காரியாலயத்தில் நடைபெற்றது.




Read More
Unknown

அல்-மினா விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவும் “இப்தார்” நிகழ்வும்.

( முஹம்மட் ஜெலீல், நிந்தவூர் )

நிந்தவூர் -9 அல்- மினா விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான பொதுச் சபைக் கூட்டம் 2015-06-26ம் திகதி வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணியளவில், நிந்தவூர் அல்- மினா வித்தியாலயம் மண்டபத்தில், நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகஸ்தர் (S.O) ஜனாப் எஸ்.எல். தாஜுத்தீன் அவர்களின் தலமையில் இடம் பெற்றது,

மேலும் இக்கூட்டத்தில் கிராம அதிகாரி ஜனாப் எ. ஆர்.எம். வஸீம் அவர்களும், மற்றும் கழக உருப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள்.

கழகத்தின் தலைவராக: கே.எம். சாபீர் அவர்களும் (R.D.S. தலைவர்),
பொருளார்: எம்.எம். பாரிஸ் அவர்களும்,                      
செயலாளர்: எ.எம். இஜாஸ் அவர்களும்,
அணியின் முகாமையாளர்: முஹம்மட் றபீக் அவர்களும்
அணியின் தவிசாளராக: ஜெ.எ. றியாஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்த்து அல்-மினா விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வும் இடம் பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜனாப் எம்.எ.எம். தாஹிர் அவர்களும், எதிர்க் கட்சித் தலைவர் யு.எல். சுலைமாலெப்பை அவர்களும், கௌரவ அதிதிகளாக ஜனாப் எம்.எல்.எம். நிகார்த்தீன் (அதிபர்) அவர்களும் ,யு.எல்.எம். சாஜித் (ஆசிரியர்), மற்றும் கழகத்தின் உறுப்பினர், போசகர்கள், ஆலோசகர்கள் என எராளமானோர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் மார்க்க சொற்பொழிவு பயான் உரை எம்.எஸ். அப்துல் ஹாதி (மௌலவி) அவர்களால் நிகழ்த்தப்பட்டு இந் நிகழ்வு சிறப்புடன் நிறைவுபெற்றது.







Read More
Unknown

ஞான­சாரவை கைது செய்ய அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை

நாட்டில் வாழும் சிறு­பான்மை இனத்த­வர்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட ­விழ்த்து விட்டு வேடிக்கை பார்ப்­ப­தற்கு அர­சாங்­கத்­திற்கு அரு­க­தை­யில்லை. ஆகை யால், தொடர்ச்­சி­யாக முஸ்­லிம்­களின் வண க்க வழி­பா­டு­க­ளுக்கு இடை­யூறு விளை­விக்கும் வகையில் செயற்­படும் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்தார்.

முன்னாள் ஆட்­சியின் போதே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­முறை கட்­ட­விழ்த்து விடப்­பட்­ட­தாக கூறி ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய முஸ்­லிம்­க­ளுக்கு, இறு­தியில் ஏமாற்­றமே பதி­லாக கிடைத்­துள்­ளது. என வே நாட்டின் நல­னுக்­காக மஹிந்த ராஜ­ப­க்ஷவை மீளவும் பிர­த­ம­ராக்க வேண்டும் எனவும் அவர் வேண்­டினார்.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் கேச­ரிக்கு கருத்து தெரி­விக்­கையில்,

இலங்­கையில் பிரித்­தா­னி­யர்­களின் ஆட்­சிக்­கா­லத்தின் போது சோல்­பரி யாப்பில் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்­கான விசேட ஏற்­பா­டுகள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­தன. இதன்­பி­ர­காரம் குறித்த யாப்பின் 29ஆவது உறுப்­பு­ரையில் சிறு­பான்மை இனத்­த­வர்­க ­ளுக்கு எதி­ரான மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை வாக்­கு­க­ளினால் எந்­த­வொரு சட்­டத்­தையும் நிறை­வேற்ற முடி­யாது என்ற உரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

எனினும் குறித்த சட்டம் 1972ஆம்ஆண்டு முத­லா­வது குடி­ய­ரசு யாப்பில் முழு­மை­யாக இல்­லாமல் செய்­யப்­பட்டு, சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டது. இதன்­பின்பு 1978ஆம் ஆண்டின் இர ண்­டா­வது குடி­ய­ரசு யாப்பில் சிறு­பான்மை இனத்­த­வர்­களின் பாது­காப்பை கருத்திற் கொண்டு விசேட ஏற்­பா­டுகள் கொண்டு வர ப்­பட்­டன. இந்­நி­லையில் தற்­போது பொது பல சேனா என்ற இன­வாத அமைப்பு தொடர்ந்தும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யாக வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்து வரு­கி­றது. ஹலால் சின்­னத்தை தடை செய்­ய­கோரும் பொது­பல­சேனா அமைப்பின் செயற்­பா­டுகள், மீளவும் ஹலால் சின்­னத்­திற்கு எதி­ராக திசை­தி­ரும்­பி­யுள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போதே முஸ்லிம்களுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­ப­டு­ வ­தா­கவும், குறித்த ஆட்­சியை உட­ன­டி ­யாக மாற்­றி­ய­மைக்க வேண்டும் எனவும் சமூ­கத்­த­வர்­க­ளி­டையே விழிப்­பு­ணர்­வு­களை செய்து, முஸ்­லிம்­களின் ஆத­ர­வுடன் மஹிந்தவின் ஆட்­சியை தோற்­க­டித்­தனர்.

இருந்த போதிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக எந்­த­வொரு அநி­யா­யமும் இனி­மேலும் இடம்­பெ­றாது என்று நம்­பி­ய­வர்­களின் மன தில் எதிர்­பா­ராத வித­மாக நல்­லாட்­சி­யிலும் இன­வாதம் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள் ளது. மரக்­கி­ளை­யி­லுள்ள இரண்டு சிட்­டுக்­கு­ரு­விக்கு ஆசைப்­பட்டு பிடிக்க போய், கையி­லி­ருந்த ஒரு சிட்­டுக்­கு­ரு­வி­யையும் கைவிட்ட நிலை­மைக்கு முஸ்­லிம்­களின் நிலைமை காணப்­ப­டு­கி­றது. இது தொடர் பில் அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் கருத்தும் பாராட்­டத்­தக்­கது.

எவ்­வா­றா­யினும் முஸ்­லிம்கள் நம்­பி க்கை கொண்ட நல்­லாட்­சியில் இன­வாத செயற்­பா­டுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மஹிந்த ராஜபக் ஷவை மீளவும் பிரதமராக ஆட்சியில் அமர்த்த வேண்டும். அதன்பின்னரே நாட்டின் சமாதானம் ஏற் படுத்தப்படும்.

இந்நிலையில் முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளுக்கு தடையாக காணப்படும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடன டியாக கைது செய்ய வேண்டும் என்று கோ ரினார்.

theindependent.lk
Read More
Unknown

ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் திறப்பு விழாவில் ஆற்றப்பட்ட உரைகள் ஓடியோ வடிவில் இணைப்பு-



ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் திறப்பு விழாவில் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷடன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சுபைர்,கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் றிஸ்வி (மஜீதி) ஆகியோர் ஆற்றிய உரைகள் இத்துடன் ஒடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

(ஓலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான்)


mp-03









Read More
Unknown

கர்பலா பாலமுனை வீதி புரனமைப்பு வேலைகளுக்கான ஆரம் நிகழ்வு

(எம்.எச்.எம்.அன்வர்)

மிக நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் காணப்பட்ட கர்பலா பாலமுனை வீதி இன்று அதன்  புணர்நிருமானப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன

ஐக்கிய தேசிய கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் எச் எம் எம் முஸ்தபாவின் அயராத முயற்சியினாலும் தேசிய ஐக்கிய முன்னணியின் பங்குபற்றுதலுடனும் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வுக்கு  ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித்தலைவருமான தயா கமகே விஷேட அதிதியாக கலந்துகொண்டார்

ஐக்கிய தேசிய கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் எச் எம் எம் முஸ்தபா தனதுரையில்

2050 மீட்டர் நீளமான இவ்வீதியானது கர்பலா தொடக்கம் பாலமுனை சந்தி வரையிலும் செப்பனிடப்பட்டு பாலமுனையில் வாழும் உறவுகள் மற்றும் அவ்வீதியால் பயணிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள பாதையாக புணரமைப்புச் செய்யப்படவுள்ளதுடன் இதற்கு 5 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் இந்நிகழ்வுக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் சிறப்பாக இடம்பெற வாழ்த்து தெரிவித்துள்ள அதே வேளை இதற்காக ஒரு செப்புச்சதமேனும் கொன்ட்ரக்காரர்களிடம் பெறவில்லை எனத்தெரிவித்தார்

மேலும் இப்பகுதி மக்களின் நன்மை கருதி கர்பலாவில் 100 வீடுகளை கட்ட எண்ணியுள்ளதாகவும் இதற்கு சஜித் முஸ்தபா புரம் என பெயர் வைக்கவுள்ளதாகவும் தனதுரையில் தெரிவித்தார்
மேற்படி நிகழ்வுக்கு தேசிய ஐக்கிய முன்னணியின் தவிசாளரும் பொறியியலாளருமான எம் எம் அப்துர்ரஹ்மான் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்று பொறியியலாளர் சசி நந்தன் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்








Read More
Unknown

பாலியல் பலாத்காரமும், தண்டணையும்- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இன்று எமது நாட்டில் சிறுவர்கள் பலத்த சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தொல்லை தருகின்ற தொலைக்காட்;சியில் குடும்பத்தினருடன்; மூழ்கிப்போய்விடுகின்றனர்.
கற்பனையில் எழுதப்பட்ட தொடர் நாடகங்களைப் பார்த்து நிஜவாழ்க்கையில் நிகழ்த்திப் பார்க்க நினைக்கின்றனர்.

நவீன தொழில்நுட்ப சாதனங்களை உபயோகித்து வயதுக்குப் பொருத்தமில்லாத  காட்சிகளைப் பார்த்து அதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  சிறுவர் பாலியல் தொந்தரவுகள், பாலியல் பலாத்காரங்கள், இளவயசுக் காதல் விவகாரங்களினால் மீண்டு வர முடியாத இளம் யுவதிகள், அன்பைப் பயன்படுத்தி எழுதிய கடிதங்கள், குறுஞ் செய்திகள், தொலைபேசி உரையாடல்கள் இன்று சாட்சியாக   பொலிஸ் நிலையங்களிலும்;, ஏனைய சமூக மட்டத்திலும் பதிவு செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டாலும், அவைகள் நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படுகின்ற நிலை இன்று காணப்படுகிறது.
பெற்றோர்கள் கடினமாக உழைத்து பிள்ளைகளை காப்பாற்ற  வேண்டும் என்ற கட்டாய தேவைக்கு ஆளாகுகின்றனர். 

அது மட்டுமன்றி, குடும்பச் சுமைகளை சுமக்கின்ற தாய்மார்கள் வேலைக்கு செல்லும் போது ஏற்படும் விபரீதங்கள் பற்றியும், சமுகத்தில் உள்ளவர்களின் வறுமை, கல்வியறிவின்மை போன்ற காரணங்களினால் பெற்றோர்கள் அறியாத வகையில், சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இவ்வாறான செயல்கள் மூலமாக சிறுவர்கள் உடல், உள ரீதியான வேதனைகளை அடைகின்றனர்.

எம்மில் அனேகமானவர்களுக்கு பாலியல்  தொந்தரவானது இலங்கைச் சட்டத்தில் குற்றம் என எழுதப்பட்டுள்ள விடயம் என்னவென்பது தெரியாது என்றே கூற வேண்டும். இது பற்றி 1995ம் ஆண்டின் 22ம் இலக்க தண்டணை சட்டக் கோவை சட்டத்தின்படி, இக்குற்றம் பற்றி வறையறை செய்யப்பட்டு;ள்ளது.

ஒரு சிறுவரை பாலியல் தொல்லைக்கு உட்படுத்துவது, ஒருவரைத் துன்புறுத்தும் செயலாக சட்டம் கருதுகிறது. ஒரு பிள்ளையை சொற்களின் மூலமாக அல்லது வேறொரு விதத்தில் பாலியல் இம்சைக்குள்ளாக்குதல் குற்றம் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளது. இக்குற்றத்திற்கான தண்டணையானது, பத்து வருட சிறைத் தண்டணையும்,  தண்டப்பணத்துடன் அல்லது தண்டப் பணம் இன்றி மேலும் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தமானது என கருதும் நட்டஈட்டினை கொடுக்கும்;படி நீதிபதி கட்டளையிட வாய்ப்புண்டு.
 
 
 
வழக்கு

ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்யும் குடும்பத்தில் முதல் மகளாகப் பிறந்த சிறுமிக்கு பதினொரு வயது.  வறுமையின் காரணமாக தனது படிப்பை ஐந்தாம் வகுப்புடன் நிறுத்திக் கொண்டாள். 
36 வயதுடைய தாயுடன் ஊரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்தாள்.
அச்சமயம் சிறுமியின்; தாய், அதே இடத்தில் பணிபுரியும் இளைஞன் ஒருவனை, தன்னைவிட பதினாறு வயது குறைந்த நபருடன் காதல் தொடர்பை பேணி வந்தாள். பணிபுரியும் இடத்தில் மட்டுமன்றி வீட்டிற்குள்ளும் அவர்களது காதல் தொடர்ந்தது. வீட்டிற்கு வந்து செல்லும் இளைஞன், சிறுமியை அடிக்கடி காணக் கிடைத்தது. இவ்வாறு சில நாட்கள் செல்ல, ஒருநாள் தான்கூறுவதை எழுதுமாறு தாய், சிறுமியிடம்; தெரிவித்துள்ளார்.

'இளைஞனை சிறுமி காதலிப்பதாகவே' அந்தக் கடிதத்தின் சாரம்சம் இருந்தது.

இவ்வாறு சிறுமியினால் எழுதப்பட்ட கடிதங்களை தாய் இளைஞனிடம் வழங்கி, சிறுமி அவரைக் காதலிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

கடிதங்களால் கவரப்பட்ட இளைஞன், சிறுமி மீது, காம வசப்பட்டான். ஒரு நாள் வீட்டுக்குள் பிரவேசித்த இளைஞன், சிறுமியை அவரது தாய் பார்த்திருக்க பாலியல் வல்லுறவு புரிந்துள்ளான். இச்சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தன.

அச்சமடைந்த சிறுமி, வீட்டில் இருந்து தப்பிச் சென்று உறவினர் ஒருவரிடம் சம்பவங்களை விபரிக்க, பொலிசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர். எனினும் அச்சமயத்தில் சிறுமி கருவுற்று இருந்தாள். தான் செய்யாத குற்றத்திற்காக சிறுமி ஒரு குழந்தையுடன் சமுகத்தில் தனிமைப்படும் நிலை ஏற்பட்டு;ள்ளது.

மேற்படி சம்பவத்திற்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அத்தீர்ப்பின்படி, 11 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றத்திற்காக, 20 வயதான இளைஞனுக்கு 10 ஆண்டுகள் கடுழிய சிறை தண்டனையும், 10 ஆயிரம் ருபாய் தண்டப் பணமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ருபாய் 50 ஆயிரம் நட்டஈடாக பணம் கொடு;க்கப்பட வேண்டும் எனவும், இளைஞனை இந்தக் குற்றம் புரிய உதவிய 36 வயதான பிள்ளையின் தாய்க்கும் அதே தண்டனை விதிக்கப்பட்டது.

எனவே சிறுவர்களுக்கு எதிராக புரியப்படும் குற்றங்கள் அனைத்தும் நீதிமன்றம் மூலம் நியாயத் தீர்ப்பு வழங்குவதன் மூலமே, மக்கள் மத்தியில் நம்பிக்கையினை கட்டியெழுப்ப முடியும் என்பதை மேற்படி சம்பவம் எடுத்துரைக்கிறது.

Read More
Unknown

இன்று தன்னுடைய தனிப்பட்ட நாடாளுமன்ற கதிரைக்கு ஆப்பு வந்து விடும் என்கின்ற அச்சத்தில் ஹக்கீம் இன்று உளறிக்கொண்டிருக்கின்றார்.


(அரிஸ்) 

ரவூப் ஹக்கீம் ஒன்றும் நமக்கு நபி அல்ல, அவர் சாதரண மனிதர் தான் ஆனால் இன்று முகப் புத்தகத்தில் சில  நண்பர்கள் சொல்லுகின்றார்கள் ரவூப் ஹக்கீமுக்காக போராளிகள் தங்கள் உயிரையும் விடுவார்கள் என்று . 

நான் கேட்கின்றேன் ஹக்கீம் என்ன செய்தார் ? இவர்கள் இவ்வாறு சிந்திபதற்கு இவர் சமூகத்துக்கு செய்த சாதனை தான் என்ன ? ஹக்கீம் அவர்களுக்காக முகப்புத்தக நீதி மன்றில் வாதட வருகின்ற சகோதரர்கள் இதற்க்கு பதில் சொல்லுங்கள் .

ரவுப் ஹக்கீம் அவர்கள் சட்ட முதுமாணி , ஒரு கட்சியின் தேசிய தலைவர் என்று தன்னை மார் தட்டும் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்ரியை ஆதரிக்கச் செல்லும் முன் ஏன் மைத்ரியின் தேர்தல் விஞ்சாபனத்தில் தெளிவாக குறிப்பிடபட்டிருந்த தொகுதிவாரி தேர்தல் முறையை அவரின் விழிகள் விசாலமாக விசாரணை செய்யமால் போனது துரதிஸ்ட்டம் தான் .  

ஹக்கீம் அவர்கள் எப்போது அமைச்சரவையில் காலடி வைத்தாரோ அன்றிலிருந்து அவருக்கு இந் நாட்டு  ஜனாதிபதிகளுடன் முரண்பட்ட வரலாறுகளே அதிகம் சந்திர்க்கா அம்மையாருடன் முரண்பாட்டார் அதன் காரணாமாக அவரை சந்திரிக்கா அமைச்சரவையில் இருந்து நீக்கினார் , அது போன்று மகிந்த அரசில் இரண்டு தடவைகள் முரண்பட்டு வெளியேறி மீண்டும் அமைச்சரவையில் வந்து அமர்ந்தார். 

எங்கே சென்றாலும் எந்த தலைவர்களுடனும் ஒத்துழைக்கா  தன்மையை கொண்டுள்ள நயவஞ்சக அரசியலை செய்யும் தலைவராக ஹக்கீமை பெரும்பான்மை இன மக்கள் பார்கின்றார்கள் . இதன் காரணமாக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தலை குனிகின்றார்கள்.

இன்று தன்னுடைய தனிப்பட்ட நாடாளுமன்ற கதிரைக்கு ஆப்பு வந்து விடும் என்கின்ற அச்சத்தில் ஹக்கீம் இன்று உளறிக்கொண்டிருக்கின்றார் . ஏனெனில் அவர் கண்டியில் போட்டி இட்டால் தோல்வியை தழுவும் கள நிலவரம் தான் அங்கு காணப்படுகின்றது. அவர் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டி இட்டால் வெற்றி ஈட்டுவார் . ஆனால் அம்பாறை மாவட்ட மக்கள் ஒன்றும் அரசியல் சித்தாந்தம் தெரியாதவர்கள் அல்ல அதனால் அங்கையும் அவரால் போட்டி போடுவது சிக்கல் நிலை தான் .
 
தன்னுடைய சுய நல அரசியல் இருப்புக்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் மீண்டும் பெருபான்மை சமூகத்திடம் மண்டியிட வைக்க வேண்டாம்
Read More
Unknown

ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகேயின் பங்குபற்றலுடன் காத்தான்குடி ஐ.தே.கட்சி அமைப்பாளர் முஸ்தபா தலைமையில் கர்பலா வீதி புனரமைப்பு வேலைகள் இன்று ஆரம்பம்!

(புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள புதிய காத்தான்குடியையும், மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள பாலமுனையையும் இணைக்கும் உள்ளக பிரதான வீதியான 'கர்பலா வீதி'யை சுமார் 24 வருடங்களுக்குப் பின்னர் 50 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யும் வேலைத்திட்டம் இன்று (26.06.2015) வெள்ளிக்கிழமை மாலை பாலமுனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேச ஐ.தே.கட்சி அமைப்பாளர் அல்ஹாஜ் எச்.எம்.எம். முஸ்தபாவின் வேண்டுகோளுக்கமைய அமைச்சரும், ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளருமான அல்ஹாஜ் கபீர் ஹாஸிம் அவர்களினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்ட இந்த வீதிப் புனரமைப்பு வேலைத்திட்டத்தினை கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயாகமகே ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் தர்மரெத்தினம், மட்டக்களப்பு பிராந்திய பிரதம பொறியியலாளர் பத்மராஜா, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் உள்ளிட்ட ஊர்ப்பிரமுகர்கள், உலமாக்கள், வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



Read More
Unknown

ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் திறந்து வைப்பு- பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு சமூகத்தின் நறுமனம் வீசும் செடி எனும் பட்டம் வழங்கி கௌரவிப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஏறாவூர் நகரில் வரலாற்று சிறப்புமிக்க ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த இறை மனைகளில் ஒன்றாக விளங்கும் ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் அதன் பாரம்பரிய கட்டமைப்பை மாற்றாமலும் மேலதிக விஸ்தரிப்புடன் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷடன் நிறுவனத்தின் நிதியுதவியுடனும் ,இப் பள்ளி நிருவாகத்தினது ஒத்துழைப்புடனும் புணர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

 
மேற்படி புணர் நிர்மாணம் செய்யப்பட்ட இப் பள்ளிவாயல் திறப்பு விழா நேற்று 25-06-2015 வியாழக்கிழமை இரவு இஷாத் தொழுகையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் தாஹிர் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷடன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு இப் பள்ளிவாயலை திறந்துவைத்தார்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு அவரின் சேவையை பாராட்டி றைஹானுல் கவ்ம் எனும் சமூகத்தின் நறுமனம் வீசும் செடி எனும் பட்டம் ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் நிருவாகத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இங்கு விஷேட மார்க்க சொற்பொழிவை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் றிஸ்வி (மஜீதி) நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சுபைர்,கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் றிஸ்வி (மஜீதி) ,முன்னாள் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் செய்னுத்தீன் உட்பட உலமாக்கள்,ஊர்பிரமுகர்கள் ,புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள்,பெரும் திரளான பொது மக்கள் என பலரும்  கலந்து  கொண்டனர்.
















Read More