Featured Home (TOP)

Recent Comments

Thursday, July 2, 2015

Unknown

பொதுத்தேர்தல் தொடர்பான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இளைஞர் பிரிவின் கலந்துரையாடல்

(ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த இல்லாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன அதனுடைய தெரிவாக அமையும் என்றும் மேலும், இன்னும் சில நாட்களில் தங்களுடைய இறுதியான நிலைப்பாட்டை எட்ட இருப்பதாக NFGGயின் தேசிய இளைஞர் கவுன்சிலின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் தெரிவித்தார்.
NFGGயின் தேசிய இளைஞர் கவுன்சிலின் ஏற்பாட்டில் எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பான கலந்துரையாடலும் இப்தார் வைபவமும் NFGGயின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது பொதுத்தேர்தலில் கட்சியின் செயற்பாடுகள், தேசிய இளைஞர் கவுன்சிலின் பங்களிப்பு என்பன குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின், NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத், தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ், பிரச்சார செயலாளர் சிறாஜ் மஸ்ஹூர், NFGGயின் தேசிய இளைஞர் கவுன்சிலின் தலைவர் சட்ட மாணவன் நௌஷாட் மஹ்ரூப், இளைஞர் கவுன்சிலின் இடைக் கால செயலாளர் நளீர் (இஸ்லாஹி), இளைஞர் கவுன்சிலின் உறுப்பினர்களான சப்ராஸ், பஹீம் ஹனீபா, அர்க்கம் முனீர் உட்பட இன்னும் பல முக்கிய அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.







Read More
Unknown

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டு குடிக்கக்கூடாது - இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் ஆய்வுகள் ..!

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் சொல்வார்கள்.  அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா?


ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம்.


இங்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதற்கும், மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் நின்று கொண்டே அல்லது நடந்து கொண்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து குடியுங்கள்.


இரைப்பை குடல் பாதை பாதிப்பு !


நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.


சிறுநீரக பாதிப்பு தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.


ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.


ஆர்த்ரிடிஸ் சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்படவழிவகுத்துவிடும்.


நரம்புகள் டென்சன் ஆகும்!


பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும்.


அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.


குறிப்பு உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும்.


காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். * மதிய உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும். * இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும். * முக்கியமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் சிறிது குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பது நமது உடலுக்கு சிறந்ததாகும்.


-நன்றி-முகநூல்
(ஜுனைட்.எம்.பஹ்த்)
Read More
Unknown

நிந்தவூர்"இஸ்வா"அமைப்பினால் ஏழைகளுக்கான இரண்டாம் கட்ட உணவுப் பொதி வழங்கல்

(முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்)

இஸ்லாமிய சமூக நலன்புரி மறுமலர்ச்சி (இஸ்வா) அமைப்பினால் 02-07-2015, இன்று இரண்டாங் கட்டமாக 150, ஏழைக் குடும்பங்களுக்கு 10 கிலே, அரிசி மற்றும் பேரீச்சம்பழங்கள் வழங்கப்படது.
மேலும் இந் நிகழ்வில் இஸ்வா அமைப்பின் தலைவர் எச். அஜிமல் மௌலவி அவர்களினால் மார்க்க சொற்பொழிவு பயான் உரையும் நிகழ்த்தப்பட்டது.







Read More
Unknown

மஹிந்த வந்தால் நானும் வருவேன் – சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு!

Chanrikaஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என அவரது செயலாளர் பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கட்டாயம் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார் என அவர் அத தெரணவிடம் கூறினார். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு பிரதமர் வேட்பாளர் கேட்கும் உரிமை உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Read More