Featured Home (TOP)

Recent Comments

Friday, July 3, 2015

Unknown

பொஹோ ஹாரத்தின் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் வடகிழக்கு பிரதேசமான போர்னோ பிரதேசத்தில் (Borno state) பொஹோ ஹாரம் குழுவினர் என சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட இரு வேறு தாக்குதல்களில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக நேற்று (02) வியாழக்கிழமை இராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பாதிக்கப்பட்ட சாட்சிகளின் தகவலின் படி முதற்கட்ட  தாக்குதலாக ரமழான் நோன்பினை கடைப்பிடித்த மக்கள் குறிப்பாக ஆண்கள் நோன்பினை துறக்கும் நிகழ்வில் மாலை பள்ளிவாசலில் இறை வணக்கத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போதும் அதனை தொடர்ந்து பெண்கள் வீடுகளில் சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளையிலும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட தாக்குதலாக நகரத்துக்கு அண்மையிலுள்ள மொங்குனா பிரதேசத்தில் உட்பிரவேசித்த தீவிரவாதிகள் ஆண்கள் பெண்களை இரு வேறு நிரலாக பிரிந்து நிற்கச் செய்து தாக்குதலை நடத்தியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More
Unknown

ரணில் புலிகளுக்கு சார்பானவர் - முபாறக் அப்துல் மஜீத்

யுத்தத்தை வென்று புலிகளை தோற்கடித்து வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு
சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தும் தமது
கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்காமையே பொதுபல சேனா விடயத்தில் மஹிந்த
ராஜபக்ஷ மௌனமாக இருந்ததற்கான பிரதான
காணமாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற தேர்தல் சம்பந்தமான ஆய்வின் போதே இவ்வாறு அவர்
குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது
கிழக்கு மக்களில் 80 வீதமானேர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்
பேச்சைக்கேட்டு ரணில்
விக்ரமசிங்கவுக்கே வாக்களித்தனர். அவர் புலிகளுக்கு சார்பானவர் என்பதை
நன்கு தெரிந்திருந்தும் முஸ்லிம்கள் அவருக்கே
வாக்களித்தனர்.

பின்னர் 2008ல் கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட்டு கிழக்கு
முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற
படுபயங்கரத்திலிருந்து மஹிந்த
ராஜபக்ஷவினால் காப்பாற்றப்பட்ட போதும் மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தததை விட புலிகளுக்கு ஆதரவான ஐ தே கவுடன்
ஒட்டியிருந்த முஸ்லிம் காங்கிரசுக்கே
பெருவாரியான வாக்குகளை முஸ்லிம்கள் அளித்தமை மஹிந்த ராஜபக்ஷ போன்ற பல
சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில்
முஸ்லிம்கள் மீதான வெறுப்பு ஏற்பட பிரதான காரணமாகும். இதன் காரணமாகவே
முஸ்லிம்களுக்கு நான் தங்கத்தை கொடுத்தாலும் அவர்கள் எமக்கு வாக்களிக்க
மாட்டார்கள் என மஹிந்த அடிக்கடி சொல்லக்கூடியவராக இருந்தார்.

இதன் பின் 2009ம் ஆண்டு புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டு முழு
வடக்கும், கிழக்கும், முழு நாடும் சுதந்திரம் பெற்றது.

இதன் காரணமாக முஸ்லிம் மக்களே பெரு நன்மையை அடைந்தனர். வடக்கில்
முஸ்லிம்கள் மீள குடியேற ஆரம்பித்தனர்.

கிழக்கு முஸ்லிம்கள் அச்சமின்றி அனைத்து இடங்களுக்கும் செல்லும்
சுதந்திரம் ஏற்பட்டது. கொழும்பு முஸ்லிம்கள் கூட குண்டு
வெடிப்புகளிலிருந்து பாதுகாப்பு
பெற்றார்கள்.

இந்த நிலையில் 2010 ஜனாதிபதி தேர்தலின் போது இம்முறை முஸ்லிம்கள் கணிசமாக
மிக அதிகமாக மஹிந்த ராஜபக்சவுக்கே வாக்களிப்பர் என எதிர்
பார்க்கப்பட்டது.

ஆனாலும் முஸ்லிம்களில் 75 வீதமானோர் மு.காவின் மடத்தனமான பேச்சைக்கேட்டு
சரத் பொன்சேகாவுக்கே வாக்களித்தனர். இத்தகைய முஸ்லிம்களின் நன்றி கெட்ட
செயற்பாடே மஹிந்த ராஜபக்ஷவிடமும், ஸ்ரீலங்கா
சுதந்திர கட்சி சிங்கள தலைவர்களிடமும் முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயத்தை
ஏற்படுத்தியது. இத்தகைய சந்தர்ப்பங்களில் உலமா கட்சி போன்ற சிறு கட்சிகள்
மஹிந்தவுடன் இணைந்திருந்தாலும் பெரு வாரியான முஸ்லிம்கள்
மஹிந்தவுக்கெதிராக
வாக்களித்ததால் எம்மைப்போன்ற சிறு
கட்சிகளின் கோரிக்கைகளைக்கூட
புறந்தள்ளும் நிலை ஏற்பட்டது.

இத்தகைய மனோ நிலையின் காரணமாகவே 2012ம் ஆண்டு பொதுபல சேனா முஸ்லிம்களுக்
கெதிராக களமிறங்கிய போது
அதனைக்கண்டும் காணாதவராக இருக்கும் நிலைக்கு மஹிந்த ராஜபக்ஷ
தள்ளப்பட்டார் என்பதே எனது அபிப்பிராயம். பொதுவாக
அவரும் ஒரு மனிதன் என்ற வகையில் ஒரு சமூகத்துக்காக முழுமையாக உதவி
செய்தும் அந்த சமூகம் தன்னை ஒரேயடியாக புறக்கணித்தால் எந்த மனிதனுக்கும்
அது உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிலிருந்து மஹிந்த விதி விலக்கு என யாரும் வாதிட முடியாது.
இப்போது இந்த தேர்தலிலும் முஸ்லிம்கள் அதே வரலாற்றுத்தவறை செய்கின்றனர்.

அதாவது, மஹிந்த வேண்டாம் மைத்திரியே வேண்டும் என கடந்த தேர்தலில் 95 வீதமான
முஸ்லிம்கள் மைத்திரிக்கு வாக்களித்தனர்.

ஆனால் இந்த பொது தேர்தலில் கிழக்கு உட்பட ஏனைய முஸ்லிம்கள் மைத்திரி
தலைமையிலான கூட்டணியை நிராகரித்து
விட்டு முஸ்லிம் காங்கிரஸ், மக்கள்
காங்கிரஸ், ஐ தே கட்சி போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்கும் பட்சத்தில் நாளை
மைத்திரியும் இத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகி முஸ்லிம்கள் நன்றி
கெட்டவர்கள் என சிந்திக்கும் நிலை ஏற்படலாம். இதனை அவர்
சிந்திக்காவிட்டாலும் அவரோடு உள்ள
சுதந்திர கட்சி மீது பாசம் கொண்ட சிங்கள தலைவர்கள் அவருக்கு இந்த
எண்ணத்தை தோற்றுவிக்கலாம்.

ஆகவே முஸ்லிம்கள் கடந்த காலங்களைப்போல் தொடர்ந்தும் தவறிழைத்து தமது தலையில்
தாமே மண் அள்ளிப்போடுபவர்களாக இல்லாது அறிவப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்
என்பதை பொறுப்பு வாய்ந்த உலமாக்கள் தலைமையிலான கட்சி என்ற வகையில் சொல்லி
வைக்கிறோம்.

(ஜுனைட்.எம்.பஹ்த்)யுத்தத்தை வென்று புலிகளை தோற்கடித்து வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு

(ஜுனைட்.எம்.பஹ்த்)
Read More
Unknown

மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல் நட்டி வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை நாட்டிலுள்ள அறபு மதரஸாக்களில் இருந்து பட்டம் பெற்று வெளியேறும்  உலமாக்கள் சமூகத்தில் கௌரவமாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு வழிசமைத்துக் கொடுப்பதை முக்கிய நோக்காக கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் ,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி தற்காலிகமாக காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்டு ஒராண்டு பூர்த்தியடைந்துள்ள நிலையில் இப் பல்கலைக்கழகக் கல்லூரியின் நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 01-07-2015 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
 
மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் இஸ்லாமிய பீடத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற தென் கிழக்கு பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்க் ஏ.பீ.எம்.அலியார் ரியாதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆளுநர் சபை தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் சேகு அலி,பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர்கள்,பள்ளிவாயல்களின் பிரதம நப்பிக்கையாளர்கள்,சமூக,சமய நிறுவனங்களின் தலைவர்கள், உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள், மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் விரிவுரையாளர்கள் உட்பட அதன் மாணவர்கள்,பெரும் திரளான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
இங்கு நிகழ்வின் சிறப்புரையை அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் ஹாஷிம் சூரி நிகழ்த்தினார்.
 
இதன் போது அதிதிகளினால் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.
 
மேற்படி மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் நிரந்தரக் கட்டிடம் கட்டுவதற்கு 100 ஏக்கர் காணி தேவையாகவுள்ளதாகவும் இதில் முதற்கட்டமாக 50 ஏக்கர் காணியை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் குறித்த 50 ஏக்கரை அபிவிருத்தி செய்கின்ற பொழுது மிகுதியான 50 ஏக்கரை அரசாங்கம் தருவார்கள் எனவும் இது தொடர்பில் தொடர்ச்சியாக பேசி வருவதாகவும் முதற்கட்டமாக இந்த பல்கலைக்கழகக் கல்லூரி வளாகம் 100 ஏக்கர் காணியில் அமைய இருப்பதாகவும் இதற்கான நிதி உதவியினை ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனம் சவூதி அரேபிய நாட்டிலுள்ள தொண்டு நிறுவனங்களோடு இணைந்து இந்தப் பணியை நாங்கள் செய்வதாகவும்,இந்த பல்கலைக்கழகக் கல்லூரியின் நிரந்தரக் கட்டிடத்தில் முதற்கட்டமாக 3000 மாணவர்கள் தங்கி கல்வி கட்பதற்கு அமையவுள்ளதோடு இந்த பல்கலைக்கழகக் கல்லூரி வளாகம் அமைவுள்ள 100 ஏக்கர்  காணியில் 7000ஆண் மாணவர்களும் 3000 பெண் மாணவிகளும்  ,450 போராசிரியர்கள் ,ஊழியர்கள் தங்கி இருந்து தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அமையவுள்ள குறித்த பல்கலைக்கழகக் கல்லூரியின் நிரந்தரக் கட்டிடத்திற்கு 680 கோடி ரூபாவை முதற்கட்ட நிதியாக ஒதுக்கியுள்ளதாகவும் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆளுநர் சபை தலைவர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

Read More
Unknown

மட்டு.போதனா வைத்தியசாலை குழு உறுப்பினராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கான் நியமனம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழு (hospital committee)உறுப்பினராக சிரேஷ்ட ஊடகவியலாளரும் சாஹித்ய மண்டல விருது பெற்ற கவிஞரும் பன்னூலாசிரியருமான ரீ.எல்.ஜவ்பர்கான் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
2017.04.27வரை இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி பிரதம அமைப்பாளர் டி.எம்.சநதிரபாலவின் சிபாரிசின் பேரில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 
கடந்த 1984ம் ஆண்டு முதல் எழுத்து மற்றும் ஊடகத்துறையில் ஈடுபட்டுவரும் ஜவ்பர்கான் 2000ம் ஆண்டு அவரது மௌனதேசம் என்ற கவிதை நூலிற்கான தேசிய அரச சாஹித்திய மண்டல விருது பெற்றவர் என்பது குறிப்பி;டத்தக்கது.
 
இதுவரை 7 நூல்களையும் ஒரு காவியத்தையும் எழுதியுள்ள இவர் ஆயிரக்கணக்கான கவிதைதகள் மற்றும் சிறுகதைகள் உட்பட பல  படைப்புகளை ஈழுத்து இலக்கிய உலகிற்கு தந்துள்ளார். முழுநேர ஊடகவியலாளரான இவர் அரசியல் செயற்பாட்டாளருமாவார்.
Read More
Unknown

இரானுவப் படை வீரர்களினால் இரத்த தானம்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
மட்டக்களப்பு போதானா வைத்தியாசாலையில் நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் முகமாக மட்டக்களப்பு 231 இரானுவப்படை கட்டளைத் தலைமையகத்தினால் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டது.
 
அண்மையில் நடைபெற்ற  இந்த இரத்ததான முகாமில், இரானுவ அதிகாரிகள் மற்றும் படைவீரர்களினால் மட்டக்களப்பு போதானா வைத்தியாசாலையினருக்கு இரத்த தானம் வழங்கப்பட்டது.
 
231 இரானுவப்படை கட்டளைத் தலைமையகத்தின் உயர் அதிகாரியான மேஜர் எல்.பி.எஸ்.யு.கே. லியனகெதர மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தான பிரிவின் வைத்தியர் எச்.டப்ளியூ.ஏ.ஐ.கருணாசேன ஆகியோரின் தலைமையிலும் இந்த இரத்தான முகாமில் கலந்து கொண்டனர்.
 
இதன் போது, மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் தாதிமார்களின் ஒத்துளைப்போடு இடம் பெற்றதுடன் அவ்வாறே இரானுவப்படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Read More