நைஜீரியாவின் வடகிழக்கு பிரதேசமான போர்னோ பிரதேசத்தில் (Borno state) பொஹோ ஹாரம் குழுவினர் என சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட இரு வேறு தாக்குதல்களில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக நேற்று (02) வியாழக்கிழமை இராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பாதிக்கப்பட்ட சாட்சிகளின் தகவலின் படி முதற்கட்ட தாக்குதலாக ரமழான் நோன்பினை கடைப்பிடித்த மக்கள் குறிப்பாக ஆண்கள் நோன்பினை துறக்கும் நிகழ்வில் மாலை பள்ளிவாசலில் இறை வணக்கத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போதும் அதனை தொடர்ந்து பெண்கள் வீடுகளில் சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளையிலும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தாக்குதலாக நகரத்துக்கு அண்மையிலுள்ள மொங்குனா பிரதேசத்தில் உட்பிரவேசித்த தீவிரவாதிகள் ஆண்கள் பெண்களை இரு வேறு நிரலாக பிரிந்து நிற்கச் செய்து தாக்குதலை நடத்தியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.