Featured Home (TOP)

Recent Comments

Thursday, July 16, 2015

Unknown

திரு­டர்­க­ளுடன் மஹிந்த மீண்டும் போட்­டி­யி­டு­கின்றார் : அஸாத்சாலி

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்யப் போவது மோச­டிக்­கா­ரர்­க­ளையா? அல்­லது நேர்­மை­யான திற­மை­யா­ன­வர்­க­ளையா? என்­பதை மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும். 

திரு­டர்­க­ளுக்கும் மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கா­த­மைக்கு மன்­னிப்பு கோரிய மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அவர்­க­ளு­டனே தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் மத்­திய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்தார்.

அதி­கா­ரத்தைப் பகிர்ந்து ஐக்­கி­யப்­படும் இயக்கம் ஏற்­பாடு செய்­தி­ருந்த செய்­தி­யாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம் பெற்­றது. இதன் போது கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,
எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஊழல், மோச­டிக்­கா­ரர்கள் மற்றும் போதைப் பொரு­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களின் பெயர்கள் சுதந்­திரக் கட்சி வேட்பு மனுவில் இடம்­பெ­றாது என ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார். என்­றாலும் தற்­போது அப்­ப­டி­யா­ன­வர்கள் எவ்­வாறு இடம் பெற்­றார்கள் என்­பதை ஜனா­தி­பதி நாட்டு மக்­க­ளுக்குத் தெளி­வாகக் கூறி­யுள்ளார்.
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் சுசில் பிரேம் ஜயந்­தவை அச்­சு­றுத்­தியே மஹிந்த ராஜபக்ஷ உட்­பட மோச­டிக்­கா­ரர்­களின் பெயர்கள் வேட்­பு­ம­னுவில் இடம்­பெற்­றுள்­ளன. சுசில் பிரேம்­ஜ­யந்­தவும் தன்­னு­டைய குற்­றங்­களை மறைத்துக் கொள்­வ­தற்கு அதற்கு அனு­ம­தித்­துள்ளார்.
மேலும் மஹிந்த ராஜபக் ஷ தனது மோச­டி­களை மறைப்­ப­தற்கும் தனக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கும் போது பாரா­ளு­மன்றச் சிறப்­பு­ரி­மையைப் பயன்­ப­டுத்­தவும் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார்.
அவர் பாரா­ளு­மன்றம் சென்­றாலும் கூடி­ய­காலம் இருக்க முடி­யாது. அவ­ருக்கு எதி­ராக பாரிய குற்றச் சாட்­டுக்கள் இருக்­கின்­றன. அவை விசா­ரிக்­கப்­படும் பட்­சத்தில் அவர் சிறைச்­சா­லைக்கு செல்வார்.
இந்த நாட்டை ஆட்­சி­பு­ரிந்த சகல ஜனா­தி­ப­தி­க­ளுக்கும் குற்­றச்­சாட்­டுக்கள் கூறப்­பட்­டன. என்­றாலும், அவர்­க­ளது குடும்­பங்கள் மீது குற்­றச்­சாட்­டுக்கள் இருக்­க­வில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ மீதும் அவர் குடும்­பத்­தினர் மீதும் பாரிய குற்­றச்­சாட்­டுக்கள் இருக்­கின்­றன.
கடந்த காலத்தில் ஊழல், மோச­டி­களில் தொடர்­பு­பட்­ட­வர்கள் அனை­வரும் களமிறங்­கி­யுள்­ளனர். இதனை சிறந்­த­தொரு சந்­தர்ப்­ப­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் நல்­ல­தொரு பாடத்தைக் கற்­பிக்க வேண்டும். அத்­துடன் இவர்­க­ளுக்கு துணை­யாக இருந்த சுசில் பிரேம் ஜயந்­த­வுக்கும் கொழும்பு மாவட்ட மக்கள் பாடம் கற்­பிக்க வேண்டும்.
மேலும் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி இலங்கைப் போக்­கு­வ­ரத்துச் சபைக்கு சொந்­த­மான பஸ்­களை பயன்­ப­டுத்­தி­ய­மைக்­காக கொடுக்க இருந்த கடன்­களை செலுத்­தி­ய­தாக அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா அண்­மையில் கூறி­யுள்ளார். ஆனால் இது­வரை கடன்­களை செலுத்தவில்லை. முடியுமானால் அதற்குரிய பற்றுச் சீட்டுக்களுடன் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும்.
எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வது ஊழல், மோசடிக்காரர்களையா அல்லது நேர்மையானவர்களையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

virakesary.lk
Read More
Unknown

முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி - படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான், ஜுனைட்.எம்.பஹ்த்)

திருகோணமலை மாவட்டம் சேருநுவர பகுதியில் 16 வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் கொல்லப்பட்டு மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம்  மற்றும் மணல் வியாபாரியான எம்.கலீல் (48) ஆகியோரே மரணமடைந்துள்ளனர்.

காத்தான்குடியிலிருந்து வியாழக்கிழமை காலை வேன் ஒன்றில் கிண்ணியாவுக்குச் சென்று கொண்டிருந்த போது சேருநுவர எனும் பிரசேத்தில் வைத்து இவர்கள் பயணித்த வேன் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

படுகாமடைந்த மூவரும் அருகிலிருந்த சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வாகன சாரதி எம். கலீல் (48) என்பவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

ஏனைய இருவரையும் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு வைத்து காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம் (வயது 52) உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த முஹம்மது புகாரி (வயது 53) தொடர்ந்தும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்துச் சம்பவம் பற்றி நேருநுவர பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தூக்க மயக்கத்திலேயே இந்த வாகன விபத்து சம்பவித்ததாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் கூறினர்.

குறித்த விபத்தில் மரணமடைந்ந முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ். சலீம் காத்தான்குடி நூரி புத்தக நிலையம் மற்றும் நூரி டெக்டைல்ஸ் ஆகிய வர்த்தக ஸ்தாபனங்களில் உரிமையாளரும்,சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








Read More
Unknown

"இருண்ட யகத்திற்குள் இலங்கையை மீண்டும் தள்ளி விடுவதனை அனுமதிக்க முடியாது": பொறியியலாளர் அப்துர்ரஹ்மான்

(ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)

"எதிர்வரும் பொதுத்தேர்தலை, கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்றே, இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்ற ஒரு முக்கியமான தேர்தலாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கருதுகின்றது. இப்பொதுத்தேர்தலின் மூலம் அமையப்போகின்ற பாராளுமன்றமானது, இந்த நாடு மீண்டும் அராஜகத்தில் பயணிக்கப்போகின்றதா? அல்லது நல்லாட்சியில் பயணிக்கப்போகின்றதா? என்பதை தீர்மானிக்கப்பதாக அமையும்" என மட்டக்களப்பு மாவட்ட மு.கா - ந.தே.மு கூட்டணி வேட்பாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்தார். 
பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுவினை தாக்கல் செய்த பின்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் நடாத்தப்பட்ட முதலாவது பத்திரிகையாளர் மாநாட்டின் போதே (14.07.2015) அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"நாட்டில் சுமார் கடந்த 5 வருடகாலமாக நிலவிவந்த அராஜக ஆட்சியினை மக்கள் ஒன்றாக இணைந்து, மிகுந்த தியாகங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் கடந்த ஜனவரி 8ம் திகதி முடிவிற்கு கொண்டு வந்தனர். அன்று ஒரு புதிய இலங்கை, ஒரு நம்பிக்கையான புதிய எதிர்காலம் நம் கண்முன்னே தெரிந்தது. அந்த நம்பிக்கையினை வலுப்படுத்தும் முகமாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியும், ஆட்சியமைத்த புதிய அரசாங்கமும் 100 நாள் வேலைத்திட்டமொன்றினை கொண்டு வந்து, இந்த நாட்டில் நல்லாட்சியினை ஸ்திரப்படுத்தக்கூடிய, அதனை சட்டமாகக் கொண்டு வரக்கூடிய பல வேலைத்திட்டங்களையும் முன்வைத்தனர். ஆனால் மக்கள் நலன்சார்ந்து முன்வைக்கப்பட்ட அத்திட்டங்களில் கனிசமானவற்றை அவர்களால் நிறை வேற்ற முடியவில்லை. இதற்கான மிகப்பிரதானமான காரணம் நல்லாட்சிக்கான ஒரு பாராளுமன்றம் இந்த நாட்டில் இருக்கவில்லை என்பதாகும் .மக்கள் நலனுக்காக ஜனாதிபதியும,; ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டணியும் பல வேலைத்திட்டங்களை முன்வைத்தனர். இருந்தாலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளே மக்கள் நலனுக்கு எதிராக தொழிற்பட்டனர். மக்கள் ஆணை மூலம் நல்லாட்சிகென உருவாக்கப்பட்ட பாராளுமன்றத்தினைத் தோற்கடித்து, அவ்வரசாங்கத்தினை அகற்றுவதற்கான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை மக்கள் பிரதிநிதிகளே கையெழுத்திட்டு வழங்கிய துரதிஸ்டவசமான வரலாற்று நிகழ்வுகளையும், அப்பாராளுமன்றத்தில் 19ம் திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்துவதில் ஏற்பட்ட இழுத்தடிப்புகளையும் நாம் கண்டோம்.
இவ்வாறு கடந்த 6 மாதகாலமாக மிக இறுக்கமான சூழலில் நடைபெற்று வந்த பாராளுமன்றம், வேறு வழியின்றி இன்று அரசாங்கத்தினால் கலைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இக்கலைப்பின் மூலமாக எது எதிர்பார்க்கப்படுகின்றது என்பதுதான் இங்குள்ள முக்கியமான விடயாமாகும். தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் அடிவருடிகளாக இருந்தவர்களை மீண்டும் தெரிவு செய்வதற்காக இப்பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கின்றதா? அல்லது பாராளுமன்றத்திலுள்ள மக்கள் விரோத, தேச விரோத நபர்களை அங்கிருந்து விரட்டி ஒர் புதிய நல்லாட்சிக்கு வலு சேர்க்கின்ற பாராளுமன்றத்தை உருவாக்குவதற்காக பாராளுமன்றம் கலைக்கப் பட்டிருக்கின்றதா? ..நல்லாட்சிக்கு வலு சேர்க்கக்கூடிய பாராளுமன்றத்தை உருவாக்குவதற்காகவே அது கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த வகையில் இப்பொதுத் தேர்தலில் பல கட்சிகள் இருந்தாலும், பிரதானமாக இரண்டு அணிகளே உள்ளன. ஓன்று மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்து, நல்லாட்சிக்கான ஜனாதிபதியாக மைத்திரி அவர்களைப் பதவியில் அமர்த்திய ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஒரு பெரிய கூட்டணி. இவ்வணி நல்லாட்சியினை வலுப்படுத்தக்கூடிய பாராளுமன்றத்தினை அமைப்பதற்கான மக்கள் ஆணையினைக்கேட்டு களத்திலே நிற்கிறார்கள்.இன்னுமொரு கூட்டணி 62 இலட்சம் மக்கள் எந்த ஜனாதிபதியைத் தோற்கடித்து, வீட்டுக்கு அனுப்பியிருந்தார்களோ, அந்த ஜனாதிபதியை மீண்டும் இந்த பதவிக்கு கொண்டு வந்து, நல்லாட்சியினை இல்லாதொழிப்பதற்காக பாடுபடுகின்ற ஒரு அணி. இவர்கள்தான் இம்முறை மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் தலைமையில் வெற்றிலைச் சின்னத்திலே போட்டியிடுகிறார்கள்.
எனவே இங்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயம்தான், ஜனவரி 8ம் திகதி மிகுந்த தியாகங்கங்களுக்கு மத்தியில், பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாம் உருவாக்கிய அந்த மாற்றத்தை நாம் முன்கொண்டு செல்லப்போகின்றோமா? அதனை மீண்டும் ஸ்திரப்படுத்தப்போகின்றோமா? அல்லது அதற்கு முந்திய 5 வருட காலத்தில் நாம் சந்தித்த இருண்ட ஆட்சியை, மக்கள், சமூக, தேசவிரோத ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கு ஆதரவளிக்கப் போகின்றோமா என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்."
Read More