Featured Home (TOP)

Recent Comments

Monday, July 27, 2015

Unknown

ஐ.எஸ்.அமைப்பில் இலங்கை உறுப்பினர் - முஸ்லிம் மக்களின் நிலைப்பாட்டுக்கு பெரும்பான்மை ஊடகங்கள் பாராட்டு

சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­பான ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்­பிலும் அத­னுடன் இணைந்து செயற்­பட்ட இலங்­கையைச் சேர்ந்த நபர் தொடர்­பிலும் முஸ்லிம் அமைப்­புகள் தமது நிலைப்­பாட்டை உட­ன­டி­யாக வெளி­யிட்­டமை குறித்து சிங்­கள ஊட­கங்கள் பாராட்டுத் தெரி­வித்­துள்­ளன. 


சிரி­யாவில் போராடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் இணைந்து செயற்­பட்­ட­வேளை அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­டுப்­ப­டை­களின் வான் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட இலங்­கையைச் சேர்ந்த முஸ்லிம் இளை­ஞ­ரான நிலாம் முஹ்சின் என்­பவர் தொடர்பில் கடந்த வாரம் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தலை­மையில் 11 முஸ்லிம் அமைப்­புகள் இணைந்து கூட்டுப் பிர­க­டனம் ஒன்­றினை வெளி­யிட்­டி­ருந்­தன.



 அதில் குறித்த நபரின் செயற்­பாட்டை தாம் வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தா­கவும் ஐ.எஸ். அமைப்பு இஸ்­லாத்­துக்கு முர­ணான அமைப்பு என்றும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.



அதே­போன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­தி­ருந்­தது. அதில் இந்த சம்­பவம் தொடர்பில் தாம் கவ­லை­ய­டை­வ­தோடு இத­னுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை சட்­டத்தின் முன்­நி­றுத்தி தண்­டனை வழங்­கு­மாறும் அதற்குத் தேவை­யான ஒத்­து­ழைப்­பு­களை தர தயா­ரா­க­வி­ருப்­ப­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.



இந்­நி­லை­யி­லேயே முஸ்லிம் அமைப்­புகள் சர்­வ­தேச தீவி­ர­வாதம் தொடர்பில் உட­ன­டி­யாக தமது நிலைப்­பாட்டை முன்­வைத்­த­மைக்கு சிங்­கள பத்­தி­ரி­கை­களும் இணை­ய­த­ளங்­களும் வர­வேற்­பையும் பாராட்­டையும் தெரி­வித்­துள்­ளன.



இது தொடர்பில் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை வெளி­யான 'லங்­கா­தீப' பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் தலை­யங்­கத்தில், இலங்­கையைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் பயங்­க­ர­வாத இயக்கம் ஒன்றில் இணைந்து செயற்­பட்டார் என்­ப­தற்­காக முழு இலங்கை முஸ்­லிம்­க­ளையும் சந்­தேகக் கண் கொண்டு பார்ப்­பதை பெரும்­பான்மை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.



இதே­வேளை இந்த விவ­காரம் தொடர்பில் பொது பல சேனா அமைப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்­ளது. அதில் விடு­தலைப் புலி­களை விட இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் ஆபத்­தா­னது எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.



அவ்­வ­மைப்பின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி டிலன்த விதா­னகே கையொப்­ப­மிட்டு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் இலங்­கையில் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு எடுக்க வேண்­டிய 25 விட­யங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. 



இஸ்லாமிய தீவிரவாதத்தை வெல்வது புலிகளை வெல்வதை விடக் கடினமாயினும் அதனை வெல்லும்பட்சத்திலேயே மக்களுக்கும் நாட்டுக்கும் வரலாற்று ரீதியிலான வெற்றி கிடைத்ததாக அர்த்தப்படும் எனவும் அக் கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Read More
Unknown

இந்திய ஏவுகணை நாயகன் விஞ்ஞானி அப்துல் கலாம் காலமானார்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாரடைப்பால் காலமானர்
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத்  தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த அப்துல் கலாம் பெத்தானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்க தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை  அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானர். இந்த தகவலை பிடிஐ தெரிவித்துள்ளது.
84 வயதான அப்துல் கலாம் தமிழ்நாட்டின் ராமேஷ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். 2002- 2007 வரை இந்தியாவில் 11 வது குடியரசு தலைவராக அவர்  இருந்தார். பொக்ரான் அணுகுண்டு சோதனையின் போது பிரதமரின் தலமை அறிவியல் ஆலோசகராக அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15,1931- சூலை 27, 2015) பொதுவாகடாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில்உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
ஜனாதிபதியாக பதவி ஏற்குமுன், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் 
அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் – II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.
கலாம், இந்தியாவின் முக்கிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது, பாட்னா , அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றுவதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்பு பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார். அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, “நான் என்ன தர முடியும்” என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.
ttnnews
Read More
Unknown

SLM - NFGG இணைந்து நடாத்திய பாலமுனை தேர்தல் பிரச்சாரக் கூட்டம். - படங்கள்

(NFGG ஊடகப்பிரிவு)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியன இணைந்து நடாத்திய பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான 3வது பிரச்சாரக் கூட்டம் நேற்று பாலமுனையில் இடம்பெற்றது.
NFGGயின் பலாமுனைப் பிரதேச செயற்குழு உறுப்பினர் சகோ, சியாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி), பிராந்திய தலைமைத்துவசபை உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான AGM.ஹாறூன் மற்றும் பிராந்திய செயற்குழு உறுப்பினர்கள் உட்பட அல்ஹாஜ் மர்சூக அஹமத் லெப்பை, இல்மி அஹமத் லெப்பை உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்தியகுழு உறுப்பினர்கள், ஐ.தே.கவின் காத்தான்குடி அமைப்பாளர் அல்ஹாஜ் HMM.முஸ்தபா (ஜே.பி), ஐ.தே.கவின் மத்திய குழு செயலாளர் ALA.கையூம் (BA) மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 5ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறூக், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி) ஆகியோர் விஷேட உரையாற்றினார்கள்.

























Read More
Unknown

காத்தான்குடி பொலீஸாரின் பாரபட்சமான நடவடிக்கையைக் கட்டுப்படுத்துமாறு ஊழல் மோசடி ஒழிப்பு நிறுவனத்திடம் புவி முறைப்பாடு

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பிரச்சாரம் செய்வதற்கான நேரங்களை ஒதுக்குவதில் காத்தான்குடி பொலிஸார் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்களாலும், அரசியல் பிரமுகர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டப்படுகின்றது.

இதுதொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் குறித்து அநீதிக்கும், அக்கிரமங்களுக்கும் எதிராகக் குரல் கொடுத்து வரும் காத்தான்குடியின் கிழம் ஊடகவியலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலக அதிகாரியிடம் இன்று (27) காலை தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்தார்.

நேற்று (26.07.2015) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் ஐ.ம.சு.முன்னணி, ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீ.ல.மு.கா என்ற மூன்று பிரதான அரசியற் கட்சிகளினது தேர்தல் பிரச்சாரக்கூட்டங்கள் நடைபெற்றன.

இதில் ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.மு.கா ஆகிய கட்சிகளின் கூட்டங்கள் இரவு 10:30 மணியுடன் காத்தான்குடிப் பொலீசாரின் நேர வரையறைக்கமைவாக நிறுத்தப்பட்ட போதிலும், நல்லாட்சி அரசாங்கத்தை நிறுவியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையிலான ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மாத்திரம் இரவு 11:15 மணியையும் தாண்டி நடைபெற்றதாக புவி.எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இரவு 10:30 மணியைக் கடந்த பின்னரும் பிரதேசத்தில் ஒலிபெருக்கிச் சத்தம் ஓங்கியொலிப்பதனால் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவ மாணவிகளும், வீடுகளில் இருதய மற்றும் மார்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாகவும் அவர் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலீசார் முன்னர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும், ஐ.ம.சு.கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தபோது நடாத்தப்பட்ட தேர்தல்களின்போது ஆளுந்தரப்பினருக்கு பக்கச் சார்பாக செயற்பட்டது போன்றே தற்போது மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஐ.ம.சு.கூட்டணிக்கும், நாட்டிற்கும் தலைவராகிய பின்னரும் பாரபட்சமாகச் செயற்பட்டு வருவதாகவும், இதுகுறித்து ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காகப் பாடுபட்டுவரும் தங்களின் நிறுவனம் தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் போன்றோருடன் தொடர்பு கொண்டு கட்சிகளுக்கிடையில் பாரபட்சம் காட்டாது நேரத்தை மட்டுப்படுத்தி பிரதேசத்தின் அமைதி மற்றும் மணவர்கள், நோயாளிகளின் நலன்களில் அக்கறையுடன் செயற்படுவதற்கு காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை அவசரமாக அறிவுறுத்துமாறும் புவி. றஹ்மதுழ்ழாஹ் தனது முறைப்பாட்டில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read More
Unknown

பிர­த­ம­ராக்­க­மாட்டேன் என்று ஜனா­தி­பதி கூறி­யுள்ள நிலையில் மஹிந்­த­வினால் வெற்­றி­பெற முடி­யுமா?

மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக்­கு­வ­தில்லை என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். குரு­நா­கலில் போட்­டியி­ டு­ப­வர்கள் எவரும் அவ­ருக்கு ஆத­ரவு வழங்கத் தயா­ரா­கவும் இல்லை. அவ்­வா­றா யின் மஹிந்த எவ்­வாறு வெற்றி பெறு­வது? கட்­சியின் தலைவர் மஹிந்தவை பிரதமராக்கமாட்டேன் எனக் கூறியுள்ள நிலையில் மஹிந்த எப்­படி தேர்தலில் வெற்றிபெறப்­போ­கின்றார்? என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேள்­வி­யெ­ழுப்­பினார்.
நாங்கள் புதிய பாதையை நோக்கிப் பய­ணிக்­கின்றோம். புதிய சமூ­கத்தை கட்டி எழுப்­பு­வ­தற்குப் புறப்­பட்­டுள்ளோம். நாட்டை முன்­னேற்­றி பொது மக்­க­ளு­டைய கையில் பணபுழக்­கத்தை ஏற்­ப­ டுத்­தி ஊழலை ஒழித்து நல்­லாட்­சியை தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்­ல­வுள்ளோம். இதற்­காக ஐக்­கிய தேசிய கட்­சியை வெற்­றி­பெறச் செய்­யுங்கள் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
குரு­ணாகல் மாவட்­டத்தில் மாவத்­த­கம தேர்தல் தொகு­தியில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். மாவத்­த­கம சாமோ­தய விளை­யாட்டு மைதா­னத்தில் இந்த கூட்டம் நடை­பெற்­றது.
அவர் தொடர்ந்து பேசு­கையில்,
நாங்கள் எல்­லோரும் சேர்ந்து ஜன­வரி எட்டாம் திகதி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை தோற்­க­டித்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெற்­றி­பெறச் செய்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­தினோம். உலகம் ஆச்­ச­ரி­யப்­ப­டு­ம­ள­வுக்கு உலக சம்­பி­ர தாய முறை­க­ளையும் உடைத்து இலங்கை சம்­பி­ர­தாய முறை­க­ளை யும் மீறி குரு­ணா­கலுக்கு மஹிந்த ராஜ­பக் ஷ தேர்­தலில் போட்டி போட வந்­துள்ளார்.
ஜன­வரி எட்டாம் திகதி தோல்­வி­யுற்­றதைப் போல் மீண்டும் தோல்­வி­யடைபய் போகின்றார். அவ­ருக்கு தற்­போது வாக்­குகள் இல்லை. அவர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யிலும் இல்லை. அவ­ருக்கு தலை­மைத்­துவம் வழங்க வேண்­டிய பொறுப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவின் கையி­லுள்­ளது. அவர் கட்­சியின் தலைவர். அவரை பிர­த­ம­ராக்­கு­வ­தில்லை என்று ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். குரு ணா­கலில் போட்­டி­யி­டு­ப­வர்கள் எவ ரும் அவ­ருக்கு ஆத­ரவு வழங்கத் தயார் இல்லை. அவ்­வா­றாயின் அவர் எவ்­வாறு வெற்றி பெறு­வது? கட்­சியின் தலைவர் பிர­தமர் ஆக்­க­மாட்டேன் எனக் கூறினால் அவர் எப்­படி தேர்லில் வெற்றி பெறப்­போ­கின்றார்?
மஹிந்த ராஜ­பக் ஷ தலைகீழாய் நின்றாலும் இந்தப் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெல்ல முடி­யாது. ஜன­வரி எட்டாம் திக­தியை விட குறைந்­த­ளவு தான் கிடைக்கப் போகி­றது. எதற்கு வாக்­கு­களை வீண் விரயம் செய்ய வேண்டும். மக்­க­ளுக்கு தேவை­யாக மக்­க­ளு­டைய எதிர்­கா­லமே உள்­ளது.
இந்த நாடு உங்­க­ளு­டைய நாடாகும் என நினைத்துக் கொள்­ளுங்கள். அன்று வாக்­க­ளித்­த­வர்கள் கூட இனிமேல் மஹிந்­த­வுக்கு வாக்­க­ளிக்க மாட்­டார்கள். எரி­பொ­ருள்­களின் விலையைக் குறைக்க முடி­யாது என்று அன்று கூறி­னார்கள். நாங்கள் எரி­பொ­ருள்­களின் விலை­களைக் குறைத்தோம். அரச உத்­தி­யோ­கஸ்­தர்­க­ளுக்கு சம்­பள உயர்வு அதி­க­ரிப்போம் எனக் கூறினோம். அவர்­க­ளு­டைய சம்­ப­ளத்­தையும் அதி­க­ரித்தோம். இதுபோல் எங்­க­ளு­டைய வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. இதனை உணர்ந்த மக்கள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வாக்­க­ளிப்­ப­தற்கு தயா­ரா­கிக விட்­டார்கள். நாங்கள் 100 நாள் வேலைத் திட்­டத்தின் கீழ் ஆறு மாதங்­களில் இவ்­வ­ளவு அளப்­ப­ரிய சேவை­களை எங்­களால் செய்ய முடியும் எனில் நாங்கள் வெற்­றி­பெறும் பட்­சத்தில் எத்­த­னையோ அபி­விருத்தி வேலை­களைச் செய்ய முடியும்.
பாட­சாலை விட்டு வெளி­யேறும் அவர்­க­ளுக்கு தொழில் அவ­சி­ய­மாகும். 10 இலட்சம் பேர்­க­ளுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கத் திட்­ட­மிட்­டுள்ளோம். 5 ஆண்­டு­களில் இதனை நடை­மு­றைப்­ப­டுத்திக் காட்­டுவோம்.
இதனை இலங்­கை­யினால் மட்டும் தனியே செய்ய முடி­யாது. வெளிநாட்­ட­வர்­களின் உதவி தேவை, அந்த நாட்­ட­வர்­க­ளு­டைய அனைத்து வகை­யி­லான மூல வளங்­களும் கொண்டு நமது இளை­ஞர்­க­ளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த வகை­யி­லேயே கணி­ச­மா­னளவு எமது நாட்டு இளை­ஞர்­க­ளுக்கு தொழில் வழங்க திட்­ட­மிட்­டுள்ளோம்.
100 நாள் வேலைத் திட்­டத்தின் கீழ் குளி­யாப்­பிட்­டி­யவில் கார் உற்­பத்தி கைத்­தொழில் நிலை­யத்தை அமைத்து கார்கள் உற்­பத்தி செய்­வ­தற்­கான வேலைகள் திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
சீன நிறு­வனம் வந்து மீண்டும் அம்­பாந்­தோட்­டை­யி­லுள்ள துறை­மு­கத்தை மீளத் திருத்­தி­ய­மைத்து செயற்­ப­டுத்­து­வத்­கான வேலைகள் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வருகின்றன. எமது நாடு நான்கு ஐந்து ஆண்டுகள் செல்லும் போது எமது நாட்டிலிருந்து ஆடைகளை விட கார் உற்பத்தி, ஏற்றுமதி அதி கரிக்கப்பட்டிருக்கும்.
கல்வியிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகின்றோம். க.பொ. த.சாதாண தரத்தில் சித்தியடைய வில்லை என்றால் படிப்பை இடை நடுவில் விடத் தேவையில்லை. அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவுள் ளோம். விளையாட்டுத்துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம் என் றார்.
Read More
Unknown

சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள மு.கா. வேட்பாளர் ஷிப்லி பாறூக்கின் தேர்தல் சுவரொட்டிகள்

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், தனது பிரச்சார மேடைகளில் நல்லாட்சி குறித்து மணிக்கணக்கில் உரையாற்றி வருகின்ற அதேசமயம், அவரது தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் காத்தான்குடிப் பிரதேசத்தில் சட்டத்திற்கு புறம்பான வகையில் பரவலாக ஒட்டப்பட்டிருப்பதாக நல்லாட்சியை விரும்பும் வாக்காளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது விடயத்தில் காத்தான்குடிப் பொலீசாரும், தேர்தல் திணைக்கள அதிகாரிகளும் கண்மூடித்தனமாக இருக்காமல் துரிதமாக செயற்பாட்டில் இறங்கி இச்சுவரொட்டிகளை அழிக்கதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வரியிறுப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

முன்னதாக, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் இறுதித் தினத்திற்கு முன்னிரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐ.ம.சு.கூட்டமைப்பு வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் அவரது தேர்தல் விளம்பரச் சுவரொட்டிகளை இரவோடிரவாக ஒட்டி மட்டக்களப்பு மாநகரம் உட்பட பல்வேறு பிரதேசங்களையும் வெகுவாக அசிங்கப்படுத்தியிருந்தார்.

எனினும் அது குறித்து ஊடகங்களும், சக வேட்பாளர்களும் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்குச் சுட்டிக்காட்டியதையடுத்து, பொலீசார் தீவிரமாகக் களத்தில் இறங்கி அவற்றை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். இதனையடுத்து அவர் புதிதாக தனது தேர்தல் விளம்பரச் சுவரொட்டிகளை ஒட்டவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

நல்லாட்சியை விரும்பி கடந்த ஜனவரி 08ம் திகதி வாக்களித்த மக்கள், அந்த நல்லாட்சியை வலுப்படுத்துவதற்காக தமது வாக்குகளைக் கேட்டு நிற்கும் வேட்பாளர்கள் நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் மதிக்கின்றவர்களா? என்பதைக் கண்டறிவதிலும் மிக விழிப்பாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More
Unknown

அவதானி வழங்கும் பத்தாயிரம் பாிசுப் போட்டி

2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்படும் வேட்பாளர்களையும் போனஸ் ஆசனம் பெறும் 
கட்சியையும் சரியாகச் சொல்லும் அதிர்ஸ்டசாலிக்கு 
அவதானி வழங்கும் பத்தாயிரம் பணவவுச்சர் ..!  
நீங்களும் ஒரு அதிர்ஸ்டசாலியாகலாம்



Read More
Unknown

தமிழர் தாய­கத்தை உரு­வாக்கும் நிலைப்பாட்டை மு.கா.வரவேற்கின்றது : ஹசன்


வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாய­கத்தை உரு­வாக்கும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல்விஞ்­ஞா­பனம் வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். இந்த நிலைப்­பாட்டை வெறும் பேச்சில் மட்டும் இல்­லாது தமிழ், முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் பேச்­சு­வார்த்தை­களின் மூலம் வென்­றெ­டுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தெரி­வித்­தது.

இரண்டு சமூ­கத்­துக்கும் இடையில் எவ்­வித முரண்­பா­டு­களும் ஏற்­ப­டாது,


முஸ்லிம் மக்­களின் தனித்­துவம், இருப்பு, அவர்­களின் உரி­மைகள் என அனைத்து விட­யங்­க­ளிலும் சம உரிமை வழங்­கப்­ப­டு­வதும், அவர்­க­ளது நிலங்கள் பாது­காக்­கப்­ப­டு­வதும் உறுதிப் படுத்­தப்­பட வேண்டும் எனவும் முஸ்லிம் காங்­கிரஸ் தெரி­வித்­தது.
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிடப் பட்­டி­ருக்கும் வடக்கு கிழக்கு இணைந்த தமி­ழக தாயக் கோரிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் நிலைப்­பாட்­டினை வின­வி­ய­போதே அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ஹசன் அலி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,
வடக்கு, கிழக்கு இணைந்த தமி­ழக தாய­கத்தை உரு­வாக்­கு­வதே தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­கால நிலைப்­பா­டாகும். எமது எதிர்­பார்ப்பும் அது­வே­யாகும். வடக்கு, கிழக்கு இணைந்த தாய­கத்தை உரு­வாக்­கு­வது என்ற நிலைப்­பாட்டில் இருந்து நாம் ஒரு­போதும் மாற­வில்லை. ஆனால் தமிழ் பேசும் மக்கள் என்ற கட்­ட­மைப்பில் தமிழ் மக்­க­ளைப்போல் முஸ்லிம் மக்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இந்த இரண்டு சமூ­கமும் ஒன்­றி­ணைந்து வடக்­கையும் கிழக்­கையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த வேண்டும் என்­பதே நியா­ய­மான நிலைப்­பா­டாகும். குறிப்­பாக இரண்டு சமூ­கங்களுக்கும் இடையில் எவ்­வித முரண்­பா­டு­களும் ஏற்­ப­டாது, முஸ்லிம் மக்­களின் தனித்­துவம், இருப்பு, அவர்­களின் உரி­மைகள் என அனைத்து விட­யங்­க­ளிலும் சம உரிமை வழங்­கப்­ப­டு­வதும், அவர்­க­ளது நிலங்கள் பாது­காக்­கப்­ப­டு­வதும் உறுதிப் படுத்­தப்­பட வேண்டும்.
ஆனால் தமிழ் முஸ்லிம் மக்­களின் இந்த நிலை­பாட்டில் பெரும்­பான்மை அர­சியல் தலை­மை­களின் தலை­யீ­டு­களும், அவர்­க­ளது மத்­தி­யஸ்­தமும் ஏற்­பட்டு வரு­கின்­றது. தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வைக்­கான இவர்கள் தலை­யி­டு­வது முழு­மை­யான அர­சியல் சுய­ந­லத்­துக்­காக மட்­டு­மே­யாகும். அதை நம்பி எமது தலை­மைகள் ஏமாந்­து­போ­வதே சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழர் தலை­மை­களும், முஸ்லிம் தலை­மை­களும் இணைக்­கப்­பட வேண்டும்.
வடக்­கையும் கிழக்­கையும் ஒன்­றி­ணைத்து தமிழர் தாய­கத்தை உரு­வாக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தயா­ராக இருக்­கின்­றமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். தமிழர் தாய­கத்தை உரு­வாக்கும் வகையில் தமிழ் தலை­மை­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த முஸ்லிம் தலை­மைகள் தயா­ரா­கவே உள்­ளது. தமிழ் மக்­களை முழு­மை­யாக பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முக்­கிய தமிழ் கட்­சி­களும், முஸ்லிம் மக்­களை முழு­மை­யாக பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முக்­கிய முஸ்லிம் கட்­சி­களும் இணைந்து பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ராக வேண்டும். நிரந்­தரத் தீர்­வொன்றை பெற்­றுக்­கொள்ளும் வகையில் பேச்­சு­வார்த்­தைக்கு செல்ல வேண்டும்.
அதேபோல் வடக்­கையும் கிழக்­கையும் ஒன்­றி­னைத்து தமிழர் தாய­கத்தை உரு­வாக்­கு­வ­தென்­பது சாதா­ரண விடயம் அல்ல. தமிழ் முஸ்லிம் மக்கள் மத்­தியில் விட்­டுக்­கொ­டுப்­பையும் சுய உரிமைகளையும் பலப்படுத்துவதுடன் விட்டுக்கொடுப்பு அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழ், முஸ்லிம் அரசியல் நடவடிக்கைகளை சமமாக அனுபவிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் அதுவே சாதகமான தீர்வை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார்.
virakesary.lk

Read More