Featured Home (TOP)

Recent Comments

Friday, July 31, 2015

avathani Media Network

முஸ்லிம் வர்த்தகரை கொன்று கொள்ளையிட்டோர் சிக்கினர் -ஒருவர் கைது; நால்வர் தப்பியோட்டம்

மினு­வாங்­கொடை நகரில் கடந்த ரமழான் மாதத்தில் நோன்பு துறக்கும் போது முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வரைக் கொலை செய்­து­விட்டு அவ­ரது நகைக் கடையை கொள்­ளை­ய­டித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­தாக கரு­தப்­படும் கொள்ளைக் கோஷ்­டி­யொன்று சீதுவை பகு­தியில் உள்ள கட்­டு­நாயக்க -,கொழும்பு அதி­வேக பாதை நுழை­வா­யி­லுக்கு அருகில் வைத்து தம்மை சோதனை செய்ய வந்த பொலிஸார் இரு­வரைத் தாக்­கி­விட்டு அவர்­களின் மோட்டார் சைக்­கிள்­களில் தப்பிச் சென்­றுள்­ளனர்.

இச்­சம்­பவம் நேற்று முன் தினம் இரவு இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய கொள்ளைக் கோஷ்­டியைச் சேர்ந்த ஒருவர் பிர­தே­சத்தின் ஓடை ஒன்றின் அருகே ஒளிந்­தி­ருந்த போது விஷேட தேடுதல் வேட்­டையில் ஈடு­பட்ட பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் அன்­றி­ரவே கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

 நேற்று முன் தினம் கட்­டு­நா­யக்க - கொழும்பு  அதி­வேகப் பாதையின் சீதுவை நுழை­வா­யிலை அண்­மித்த பகு­தியில் கார் ஒன்று சந்­தே­கத்­துக்கு இட­மான முறையில் நிறுத்­தப்­பட்­டுள்­ளதை அப்­பி­ர­தே­சத்தால் இரு மோட்டார் சைக்­கிள்­களில் சென்ற பொலிஸார் அவ­தா­னித்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து அந்த இடத்­துக்கு சென்­றுள்ள பொலிசார் அங்­கி­ருந்த ஐவ­ரி­னதும் தேசிய அடை­யாள அட்­டை­களை சோத­னைக்­காக கோரி­யுள்­ளனர்.

இதன் போது அந்த ஐவரும் சேர்ந்து அவ்­விரு பொலி­ஸா­ரையும் பொல்­லு­களால் தாக்­கி­யுள்­ள­துடன் காருக்குள் இருந்து இரு துப்­பாக்­கி­க­ளையும் எடுத்து அவ்­வி­ரு­வ­ரையும் அச்­சு­றுத்தி விட்டு பொலிஸார் இரு­வரும் வந்த இரு மோட்டார் சைக்­கிள்­க­ளையும் எடுத்­துக்­கொண்டு தப்பிச் சென்­றுள்­ளனர்.

இந் நிலையில் சம்­பவம் தொடர்பில் சீதுவை பொலிஸ் நிலை­யத்­துக்கு தகவல் வழங்­கப்­ப­டவே ஸ்தலம் விரைந்த பொலிஸார் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் துணை­யுடன் விஷேட விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­தனர். இதன் போது பிர­தே­சத்தின் ஓடைப் பகுதி ஒன்றின் அருகே மறைந்­தி­ருந்த சந்­தேக நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்டார்.

இந் நிலையில் ஏனைய சந்­தேக நபர்­களைக் கைது செய்­வதன் பொருட்டு விஷேட விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அந்த ஐவரும் கொள்­ளையில் ஈடு­ப­டவே கார் ஒன்றை வாட­கைக்கு பெற்று அதன் இலக்கத் தகட்டை மாற்றிக் கொண்­டி­ருந்­துள்­ள­மையும் இதன் போதே சிவில் உடையில் இருந்த பொலிஸார் சந்­தேகம் கொண்டு அது தொடர்பில் சோதனை செய்ய சென்ற போது சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ளது.

சந்­தேக நபர்கள் தப்பிச் சென்ற இரு பொலி­ஸா­ருக்கு சொந்­த­மான மோட்டார் சைக்­கிள்­களும் மினு­வாங்­கொடை பிர­தே­சத்தில் கைவி­டப்­பட்ட நிலையில் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளன.

மேல­திக விசா­ர­ணை­களில் இந்த கொள்ளைக் கும்­ப­லா­னது வாக­னங்­களை வாட­கைக்கு பெற்று இலக்கத் தக­டு­களை மாற்றி பல கொள்­ளை­களில் ஈடு­பட்­டுள்­ள­மையும் அண்­மையில் மினு­வாங்­கொ­டையில் நோன்பு துறக்கும் போது நகைக் கடை உரிமையாளரை சுட்டுக்கொன்று விட்டு கொள்ளையிட்ட சம்பவமும் இவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
vidivelli

Read More
avathani Media Network

இஸ்மாயில் சட்டத்துக்கு முரணாக போட்டி - மேன் முறையீட்டு நீதிமன்றில் நேற்று ரீட் மனு தாக்கல்

திகா­ம­டுல்ல தேர்தல் மாவட்­டத்தில் இம்­முறை பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கு­ரிய சட்ட ரீதி­யான தகை­மையை தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக முன்னாள் உப­வேந்தர் கலா­நிதி எஸ்.எம்.எம். இஸ்­மாயில் கொண்­டி­ருக்­க­வில்லை எனக் குறிப்­பிட்டு நேற்று மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் ரீட் மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.


சம்­மாந்­து­றையைச் சேர்ந்த சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.முஸ்­தபா என்­பவர் சார்பில் சட்­டத்­த­ரணி ஆனந்த குல­வன்­ச­வினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த மனுவில் தேர்தல் ஆணை­யாளர், தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழக பதி­வாளர், கலா­நிதி எஸ்.எம்.எம்.இஸ்­மாயில், சட்­டமா அதிபர் ஆகியோர் பிர­தி­வா­தி­க­ளாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.

அர­சியல் யாப்பின் படியும் பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் விதி­களின் படியும் தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழக முன்னாள் உப­வேந்தர் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான தகை­மையைக் கொண்­டி­ருக்­க­வில்லை எனும் வாதத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டே இந்த மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

கலா­நிதி எஸ்.எம்.எம். இஸ்­மாயில் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­ன­ராக தனது பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­தி­ருக்க வேண்டும்.

அவ்­வா­றன்றி அவர் விடு­முறை எடுத்­து­விட்டே தேர்­தலில் போட்­டி­யி­டு­கிறார்.

இது சட்­டத்­துக்கு முர­ணா­ன­தாகும். அந்த வகையில் அவர் போட்­டி­யி­டு­வதை சட்­டத்­துக்கு முர­ணா­னது எனப் பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறும் அவர் தேர்­தலில் வெற்றி பெற்­றாலும் பாரா­ளு­மன்றம் செல்­வ­தற்கு தகுதி பெற­மாட்டார் என்­பதைப் பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறும் இந்த மனுவில் மேலும் கோரப்­பட்­டுள்­ளது.

தென் கிழக்குப் பல்­க­லைக்­க­ழக முன்னாள் உப­வேந்தர் கலா­நிதி எஸ்.எம்.எம்.இஸ்­மாயில் இம் முறை பொதுத் தேர்­தலில் திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்­பாக போட்­டி­யி­டு­கிறார்.

கடந்த திங்­கட்­கி­ழமை  சம்­மாந்­து­றையில் நடை­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், முன்னாள் உப­வேந்தர் தேர்­தலில் வெற்­றி­யீட்­டி­னாலும் அவரால் சட்ட ரீதி­யாகப் பாரா­ளு­மன்றம் செல்ல முடியாது என்றும் அவர் பாராளுமன்றம் சென்றால் காதை அறுத்துத் தருவேன் என்றும் சவால் விட்டிருந்தார்.

இந் நிலையிலேயே நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

எமது ஆதரவாளர்களை தாக்கிய பயங்கரவாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்; ரவி கருணாநாயக்க

எம்மை இலக்கு வைக்க முடியும். ஆனால் நாட்டை இலக்கு வைக்க முடியாது. எமது ஆதரவாளர்களை தாக்கிய பயங்கரவாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு  வருவோம். எமக்கு பயம் இல்லை. முன்னோக்கி செல்வோம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிதியமைச்சர் ரவி கருநாயக்க ஆதரவாளர்கள் மீது இன்று முற்பகல் 11.30 மணியளவில் இனந் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆதரவாளர்களை பார்வையிடச் சென்ற அமைச்சர் ரவி கருநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இது போன்ற பயகரமான செயல்களை செய்யும் பயங்கரவாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம். இச்சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் எமக்கு சில சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றை வைத்து விசாரணை செய்து குற்றவாளிகளை மக்கள் முன் நிறுத்துவோம் என்றார்.
Read More
avathani Media Network

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம்: கறுப்பு நிற கார் மீட்பு

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளுமெண்டல் பகுதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் கறுப்பு நிற ஹைப்ரிட் கார் ஒன்று புளுமெண்டல் பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

புளுமெண்டல் பகுதியில் உள்ள கட்டிடமொன்றின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது. எனினும் காரின் உரிமையாளர் யார் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
இலக்கத்தகடற்ற கறுப்பு நிற ஹைப்ரிட் கார் மற்றும் வெள்ளை வேன் ஆகியவற்றில் வந்த இனந்தெரியாத நபர்களே புளுமெண்டல் - பெனடிக் படசாலையின் மைதானத்துக்கு முன்னால் உள்ள பாதையில் வைத்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். 
இதில் பெண்ணொருவர் பலியானதுடன் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களின் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட  மற்றுமொரு வெள்ளை நிற வேன் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
virakesary.lk
Read More
avathani Media Network

சல்மா அமீர் ஹம்ஸா ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு

(எம்.ஐ. அப்துல் நஸார்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீட உறுப்பினரும், அக் கட்சியின் மட்டக்களப்பு மவட்ட மகளிர் அணி பொறுப்பாளரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் பெண்கள் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்ஸா
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (30) முற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு வழங்கும் தனது தீர்மானத்தை அறிவித்தார்
சல்மா அமீர் ஹம்ஸா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்திலே வெற்றிபெறக் கூடிய வேட்பாளர்களை போட்டியிட வைக்கவில்லை. புதிதாக இணைந்தவர்களையும் செல்வாக்குக் குறைந்தவர்களையும் போட்டியிட வைக்க வேண்டாம் என பல தரப்பினராலும் கோரபட்ட போதும் அந்த விடயம் கருத்தில் எடுக்கப்படவில்லை. காத்தான்குடிக்கு உரிய இடமும் அளிக்கப்படவில்லை.
எமதூரின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்காக இந்த ஊரின் நன்மை கருதி எதிர்வரும் பொதுத் தேர்தலிலே ஹிஸ்புல்லாஹ்வின் கரத்தை பலப்படுத்தி அவரை வெற்றிபெறச் செய்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் எமக்கு கசப்பான பல அனுபவங்கள் உள்ளன. நாம் அந்தக் கட்சிக்காக மிகவும் கஷடப்பட்டு உழைத்துள்ளளோம். ஆனால் எமது பிரதேசத்தில் ஒரு வீதியையேனும் எம்மால் போட முடியவில்லை. வேலைவாய்ப்புக்களை வழங்க முடியவில்லை அத்துடன் பெண்களுக்கான எந்தவித தொழில்வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை.
அபிவிருத்திக்கு அரசாங்கத்தின் பணத்தினை மாத்திரம் நம்பி இருக்காது, அரபு நாடுகளிலிருந்து நிதிகளை கொண்டுவந்து இன, மத, பிரதேச வேறுபாடுகளைப் பார்க்காது பணியாற்றுகின்ற இவ்வாறான சகோதரருடன் இணைந்து அவரை வெற்றிபெறச் செய்வதில் உறுதியாக இருக்கின்றோம். இன்னும் பல முக்கியஸ்தர்கள் எம்முடன் வந்து இணைய இருக்கின்றார்கள்.
இது ஒரு முக்கியமான தேர்தலாகும். தேசிய ரீதியில் எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் பெண்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற இப் பிரதேசத்தில் அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக பெண்கள் மாற வேண்டும். எம்மிடையே காணப்படுகின்ற வேறுபாடுகளை மறந்து நாம் செயற்பட வேண்டும். எனவும் அவர் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லாஹ் உரை
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹிஸ்புல்லாஹ் இங்கு உரையாற்றுகையில், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா அவர்கள் எம்மோடு இணைந்து இந்தத் தேர்தலில் எமக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருக்கிறார்கள். அவர்களது இந்தத் தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பான நாம் மிக மரியாதையுடனும் அன்புடனும் வரவேற்கின்றோம்.
பல்வேறுபட்ட சமூகப் பணிகளிலும் குறிப்பாக பெண்களது அபிவிருத்தியில், அரசியல் நடவடிக்கைகளில் நீண்டகாலமாக ஈடுபட்டிருக்கும் சல்மா அமீர் ஹம்ஸா அவர்கள் எம்மோடு இணைந்திருப்பது எமது வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்றும் என நம்புகிறோம்.
இந்த மாவட்டத்தில் எமது வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்றுவதற்கு அரசியல் பிரமுகர்கள் வர்த்தகர்கள், உளளூராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் போன்றோர் எம்மோடு இணைந்து நாளுக்கு நாள் அணிதிரண்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் 08ஆந் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு இந்த நாட்டு மக்கள் அளித்த ஆணையின் படி அந்த நல்லாட்சியை எதிர்வரும் 18ஆந் திகதி இந்த நாட்டிலே நிறுவி எதிர்வருகின்ற ஆறு ஆண்டுகளுக்கு இந்த நாட்டிலே ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுடன் அவர் எடுத்து வருகின்ற அயராத முயற்சிக்கு கைகொடுத்து அவருடைய அணி வெற்றி பெறுவதன் மூலம் இந்த நாட்டிலே நீதியானதொரு ஆட்சியை உருவாக்குவதற்காக நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலே வெற்றிலைச் சின்னத்திலே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுடைய அணியிலே போட்டியிடுகின்றோம்.
எனவே எமது வெற்றி என்பது இந்த நாட்டிலே நல்லாட்சியை நிலைநிறுத்துவதற்கான வெற்றி. நீங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுடைய அணியிலே போட்டியிடுகின்றவர்களை வெற்றிபெறச் செய்வதென்பது இந்த நாட்டிலே சிறந்ததொரு ஜனநாயக நல்லாட்சியை உருவாக்குவதற்கு நீங்கள் இடுகின்ற அடித்தளமாகும்.
அமீர் ஹம்ஸா அவர்கள் இந்தப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செல்வாக்கிழந்து நலிவுற்றிருந்த நிலையில் அந்தக் கட்சிக்குச் சென்று அதற்காக உழைத்தார். கடந்த நகர சபைத் தேர்தலில் ஒரேயொரு ஆசனத்தை அந்தக் கட்சி பெற்றது. அதில் தெரிவு செய்யப்பட்ட அமீர் ஹம்ஸா அவர்கள் கட்சிக்கு வலுவூட்டினார். அவர் சுமார் 600 ஆதரவாளர்களுடன் எம்மோடு இணந்துள்ளார் என தெரிவித்தார்.
Read More