Featured Home (TOP)

Recent Comments

Wednesday, August 5, 2015

avathani Media Network

முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு எதிர்வரும் 07ம் திகதி நடைபெறும்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட பிரமாண்டமான மாநாடு எதிர்வரும் 07.08.2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு வாழைச்சேனை வீசி பொது மைதானத்தில்
இடம்பெறவிருக்கிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமதின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இப்பிரமாண்டமான மாநாட்டில் பிரதம பேச்சாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நீர்வழங்கல் வடிகலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான சட்டமுதுமானி ரவூப் ஹக்கீம் கலந்து
கொள்ளவுள்ளதுடன், கட்சியின் அதியுயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தகள், கல்விமான்கள், உலமாக்கள், அபிமானிகள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
Read More
avathani Media Network

“வெற்றிலைக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் எமது சமூகத்திற்காக நாம் தோண்டும் கபுர்களாகும்” - சிப்லி பாறூக்


மட்டக்களப்பு மாவட்ட வாக்காளப் பொதுமக்களுக்கு!!!!

கண்ணியத்துக்குரிய உலமாக்களே, மதிப்பிற்குரிய கல்வி மான்களே, எனது அன்புக்குரிய தாய் மார;களே, சகோதர சகோதரிகளே உங்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளால் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 

உங்கள் அனைவரையும் என்னால் முடிந்த வரை ஒவ்வோரா வீடுகளாக விஜயம் செய்து உங்களது தனிப்பட்ட, பொதுப் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டேன். இருந்த போதிலும் இச் சிறிய மடலின் ஊடாகவும் உங்களை சந்திப்பதையிட்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அல்-ஹம்துலில்லாஹ்!!!

உங்களுக்காக உங்களில் ஒருவனாகிய நான் கடந்து வந்த அரசியல் அனுபவங்களின் அடிப்படையில் எதிர்கால எமது சமூகத்தின் இருப்புக்காக சில உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...

எம்மை எதிர்நோக்கியுள்ள இந்த பொதுத் தேர்தலானது எமது மாவட்டத்துக்கு மட்டுமல்லாது இலங்கையில் வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களினதும் இருப்புக்கும் பாதுகாப்பிற்க்குமான மிகவும் சவாலான ஒரு தேர்தலாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அல்லாஹ்வின் உதவியால் நாம் அடைந்த வெற்றியானது இன்று
நாம் நிம்மதியாக வாழ்வதற்கு எவ்வாறு உதவுகின்றதோ அதே போன்று எதிர்காலத்திலும் இனவாதிகளின் சவால்களுக்கு எதிராகவும் எமது எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ்வதற்க்காகவும் எமது பள்ளிவாயல்களில் சுதந்திரமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காகவும் இனவாத சூழ்ச்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய தேவை முழு முஸ்லிம்
சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்து அரசியலில் ஈடுபட்ட நான் எனது சமூகத்திற்கு எதிரான இனவாதியான மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டேன். இதற்காக பல்வேறு பட்ட பணமும் ஆடம்பர வாழ்க்கையும் கொடுப்பதற்க்கு முன்வந்த சந்தர்ப்பத்தில் இவைகளை தூக்கி எறிந்து விட்டு எமது முஸ்லிம் உம்மத்திற்காக இனவாதத்திற்கெதிராக சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களது அணியில் இருந்து வெளியேறினேன்.

இதைனை தொடர்ந்து எனக்கும் எனது குடும்பத்திற்கும் எனது பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதோடு எனது வீட்டுக்கும் எனது ஆதரவாளர்களின் வீடுகளுக்கும் குண்டு வீச்சுத்தாக்குதல் நடாத்தப்பட்டது. இவைகளையும் தாண்டி எமது சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.

எந்த சமூகத்தின் வாக்குகளைப் பெற்று அந்த சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என்று
கூறிய சகோதரர் ஹிஸ்புல்லா மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆகுவார் எனக்கு அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும் என்ற பேராசையின் காரணமாக தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து விட்டு மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து இந்த மக்களை ஏமாற்றுவகற்காக ஒரு நாடகத்தினை அரங்கேற்றி கொண்டிருக்கின்றார்.

இதற்காக அதிகமான பணத்தையும் பொருள்களையும் செலவு செய்து எமது சமூகத்தின் வாக்குகளை சூரையாடி மீண்டும் ஒரு முறை இனவாதிகளுக்கு துணைபோகின்றார். இனவாதிகளின் காலடியில் எமது சமூகத்தினை அடகு வைக்கின்ற பணியினை மிகவும் மும்முரமாக செய்து கொண்டு போகிறார்.

அன்புக்குறிய ஈமானிய உள்ளங்களே…!

சிந்தியுங்கள். நான் மேற்குறிய விடயங்களை மிக ஆழமாக சிந்தித்து எமது சமூகத்தின் எதிர்கால இருப்புக்கும் இனவாதிகளின் முகவர்களாக செயற்படுகின்ற அரசியல் தலைமைத்துவங்களுக்கும் சரியான பாடம் ஒன்றை கற்பிக்கின்ற சந்தர்ப்பமாக எதிர் வரும் பொதுத் தேர்தலை பயன்படுத்த வேண்டும்.

ஆகவே என்றும் கௌரவமாக யாருக்கும் சோரம் போகாத சமூக அக்கறை கெண்ட இளம் அரசியல் தலைமைத்துவங்களே…! சிந்தித்து செயலாற்றுங்கள்....!!! ஆக இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அடையாளச் சின்னமான மரத்திற்கும் எனது இலக்கமான 5ம் இலக்கத்திற்கும் புள்ளடியிடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

“வெற்றிலைக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் எமது சமூகத்திற்காக நாம் தோண்டும் கபுர்களாகும்”

நன்றி,
“மக்களை மதித்து வாழும் மக்களின்
ஒருவனாக”
உங்கள் சமூக சேவகன்,
பொறியியலாளர்,
அல்-ஹாஜ். ஷிப்லி பாறூக்,
SLMC வேட்பாளர். இலக்கம் - 05

(ஜுனனட்.எம்.பஹ்த்)
Read More
avathani Media Network

போதிமர நாகம் வெற்றிலையின் பின்னால்

(இப்னு மஹ்மூத்)

நெஞ்சைக் கனக்கச் செய்த ஒரு காட்சியின் பின் எழுதத் தோன்றியது

இரவு சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சடன நிகழ்ச்சியில் ஒரு பொது பல சேனாவின் காவி நாகம் கடுமையான இனத்துவேச விஷத்தை முஸ்லிம்கள் மீது கக்கியது, இந்த நாட்டில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் மாத்திரம் தான் காணிப் பிரச்சினை இருக்கிறது முஸ்லிம்களுக்கு காணிப் பிரச்சினை கிடையாது  ( நமது மண்ணின் மைந்தனின் பத்திரிகை அறிக்கை போல ) மாறாக அவர்கள் இந்த இரு இனங்களின் காணிகளையும் பொருளாதரத்தையும் சூறையாடியுள்ளனர் என இடித்துரைத்தது.

பொது அணி கொண்டுவந்த நல்லாட்சி மாற்றம் ஒரு சிறிய மன அமைதியை முஸ்லிம் மக்களுக்கு கொண்டுவந்தாலும் எம்மீது சூழ்ந்துள்ள இனவெறி ஆதிக்க ஆபத்து இன்னும் நமது சமுகத்தை விட்டு அகலவில்லை. நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது, மகிந்தவின் அணி பலமுறச் செய்யப்பட்டால் அந்த நெருப்பு இந்நாட்டில் நாம் வாழும் அத்தனை மூலை முடுக்குகளையும் சூழ்ந்து  முஸ்லிம்களை சுட்டெரிக்கும்.

ஆட்சியில் இருந்து துரத்தப் பட்ட போதும் கூட ஒரு ஜனாதிபதியின் அதிகாரத்தினையும் மீறி, பிரதமருக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப் போட்ட, ஒரு வேட்பளராக களமிறங்கிய, தேர்தல் செயற்பாடுகளின்  செயற்பாடுகளின் நாயகனாக பரிணமிக்க முடிந்த மகிந்தவுக்கு பாராளுமன்றத்துக்குள் வந்துவிட்டால், அவரிடம் இருக்கும் பண பலத்தால் பல எம்பிக்களை விலைக்கு வாங்கி இந்த நாட்டின் நல்லாட்சி அரசியல் செயற்பாடுகளைக் குழப்பி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது  

அன்பின் சகோதரர்களே! எந்த தனிமனிதன் மீதான அதீத காதலும் நமது இனத்திற்கு எதிராக, எதிர்கால சந்ததிகளுக்கு எதிராக, நமது வணக்கஸ்தலங்களுக்கு எதராக, நமது சன்மார்க்க விழுமியங்களுக்கு எதிராக உங்களை வாக்களிக்க தூண்ட வேண்டாம்!

இது நீங்கள் அறிந்துகொண்டே செய்யும் பெரும் பாவமாகும், சிறுபான்மை மக்கள்தான் என்னை தோற்கடித்தார்கள் அதற்காக பழிவாங்குவேன் என மஹிந்த சூளுரைத்ததை மறந்து விட வேண்டாம்!

என்னருமை சமூகமே! உன் எதிர்கால இருப்பும், தன்மானமும், சுதந்திரமும், இஸ்லாமியனாக வாழ்வதும் நீ அளிக்கப் போகும் வாக்கில்தான் தங்கியிருக்கிறது!

சமுகத்தின் நல்வாழ்வைத் தீர்மானிக்கும் உரிமையை வாக்குச் சீட்டுகளாக உன் கையில் தரப்பட்டிருக்கிறது!

இம்முறையாவது ஏமாற்றுக்கும், பணத்தின் விளையாட்டுக்கும், அன்பளிப்பாக கொடுக்கப் படும் அற்ப கோப்பைகளுக்கும், சோத்துப் பொதிகளுக்கும்  போலியான நாடகங்களுக்கும் அடிமையாகி விடாது சமுகத்திற்காக, உங்கள் குழந்தைகளுக்காக, நமது அமைதியான எதிர்காலத்திற்காக ஒரு கணமேனும் சிந்தித்தீர்க்களென்றால் உங்கள் கரங்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்காது

சிந்திப்பீர்களா??????????????????       
போதிமர நாகம் வெற்றிலையின் பின்னால் எம்மை பொறிவைத்துக் காத்திருக்கிறது கவனம் மக்காள்!


Read More
avathani Media Network

நிறைந்த சனத் திரளுடன் இடம்பெற்ற 9ம் கிளை சந்தி NFGGயின் பிரச்சாரக் கூட்டம் - படங்கள்

NFGG ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்று நேற்று 9ம் கிளை சந்தியில் இடம்பெற்றது.
நிறைந்த சனத் திரளுடன் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய செயற்குழு உறுப்பினர் KM.புஹாரி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான PM.முஜிபுர் ரஹ்மான், பொறியியலாளர் MM.பழுலுல் ஹக் ஆகியோர் உரையாற்றியதுடன் விஷேட உரையாற்றினார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளருமான பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான்.


















































Read More