Featured Home (TOP)

Recent Comments

Thursday, August 27, 2015

avathani Media Network

தேர்தலுக்குப் பின்னரான மற்றுமொரு மக்கள் சந்திப்பு ஏறாவூரில் இடம்பெற்றது

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான மற்றுமொரு மக்கள் சந்திப்பு நேற்று ஏறாவூரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), பிராந்திய தலைமைத்துவசபை உறுப்பினர் ASM.ஹில்மி உட்பட NFGGயின் தலைமைத்துவசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பலரும் ஏறாவூர் பிரதேச பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், பிர்தௌஸ் நளீமி மற்றும் ஏறாவூரைச் சேர்ந்த அப்துல் சலாம் ஆகியோர் உரையாற்றினார்கள்.










Read More
avathani Media Network

தேசியப்பட்டியல் நியமனங்கள் உரிய நோக்கத்தை நிறைவு செய்வதாக அமைய வேண்டும்: NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் பிர்தௌஸ்

"தேசியப்பட்டியல் நியமனம் என்பது ஜனநாயகத்திற்கும் நல்லாட்சிக்கும் வலுச் சேர்த்தல் என்ற அடிப்படை நோக்கத்தை நிறைவு செய்வதாக அமைய வேண்டும் என்பதே தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் எமது நிலைப்பாடாகும்" என NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் தெரிவித்துள்ளார்.
தேசியப்பட்டியல் நியமன விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
"தேர்தலில் வெற்றி பெறாதவர்கள் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு உள்வாங்கப்படுவது முறையாகுமா? என்ற கேள்வி தற்போது பரவலாக எழுப்பப்படுகிறது. எந்தவொரு விடயமும் அதன் அடிப்படை நோக்கத்தை நிறைவு செய்வதாக அமைகிறதா இல்லையா என்பதனை நோக்குவதில் இருந்தே நாம் எமது நிலைப்பாடுகளை வரையறுக்க வேண்டும். அந்த வகையில் தேசியப்பட்டியல் நியமன முறை என்பது எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் அது நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதே இங்கு நோக்கப்பட வேண்டிய அடிப்படை விடயாமாகும். 
இந்த நாட்டில் தேசியப்பட்டியல் முறை அறிமுகம் செய்யப்பட்டதற்கு அடிப்படையான ஒரு நோக்கம் இருக்கிறது. பாராளுமன்றத்திற்கு அறிவு பூர்வமான பங்களிப்புச் செய்யக்கூடிய புத்தி ஜீவிகளும், நேர்மையானவர்களும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியாத சூழ்நிலைகளில் அவர்களை பாராளுமன்றத்திற்கு உள்வாங்குவதே தேசியப்பட்டியல் முறையின் அடிப்படை நோக்கமாகும்.
இந்த அடிப்படை நோக்கத்தை மனதிற்கொண்டே தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்படல் வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அந்த வகையில் தேசியப்பட்டியல் நியமனங்கள் இந்த அடிப்படை நோக்கத்தை நிறைவு செய்வதாக பெரும்பாலும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய ஒரு வரலாற்று உண்மையாகும்.
தேசியப்பட்டியல் மூலமாக பொருத்தமானவர்களை பாராளுமன்றத்திற்கு உள்வாங்கும் விடயம் பல கட்சிகளினாலும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதும் மற்றுமொரு கவலையான விடயமாகும்.
இந்த அனுபவங்களின் அடிப்படையிலேயே தேசியப்பட்டியல் நியமனம் மீண்டும் ஒருமுறை இந்தத் தடவையும் துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது என்ற கருத்து தற்போது மேலோங்கி வருகிறது.
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது தேர்தலில் வெற்றி பெறத் தவறியவர்களில் பொதுவாக இரண்டு வகையினர் இருக்கின்றார்கள்.
அதில் முதலாவது வகையினர் நல்லாட்சிக்காக அர்ப்பணத்துடன் உழைத்த ஒரு தரப்பினராகும். அடுத்த வகையினர் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளிலும், அதிகாரத் துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்டு நல்லாட்சியின் அடிப்படைகளுக்கு எதிராகத் தொடர்ந்தும் செயற்பட்டவர்களாகும்.
இங்கே நல்லாட்சிக்காக உழைக்கின்ற வரலாற்றைக் கொண்டவர்களை, அவர்கள் தேர்தலில் வெற்றி பெற தவறுகிற போது தேசியப்பட்டியல் மூலமாக உள்வாங்குவதானது தேசியப்பட்டியல் முறையின் அடிப்படை நோக்கத்திற்கு முரணானதல்ல. அதனை நாம் வரவேற்கிறோம்.
உதாரணமாக நல்லாட்சிக்கான உழைப்பில் முன்னணி வகித்த ஒருவரான சுனில் ஹந்துநெட்டி போன்றவர்கள் தேசியப்பட்டியல் மூலமாக உள்வாங்கப்படுருப்பது நல்லாட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் வலு சேர்க்கின்ற விடயமாகும். மட்டுமின்றி தேசியப்பட்டியல் முறையின் நோக்கத்தை நிறைவு செய்வதாகவே இது அமைகிறது. இது போன்ற நியமனங்களை NFGG வரவேற்கிறது.
ஆனால், கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் புரிந்து சட்ட விரோத செயல்களையும் அதிகாரத் துஷ்பிரயோகங்களையும் மேற்கொண்டு நல்லாட்சிக்கு விரோதமாக செயற்பட்டவர்களை தேர்தலில் மக்களே தோற்கடித்திருக்கும்போது அவர்களை தேசியப்பட்டியல் மூலம் உள்வாங்குவதென்பது ஜனநாயகத்திற்கும் நல்லாட்சிக்கும் விரோதமான நடவடிக்கையாகவே அமையும்.
உதாரணமாக மஹிந்தவின் அராஜக ஆட்சியின் முகவர்காக இறுதிவரை தொழிற்பட்டு பல ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு நல்லாட்சிக்கு விரோதமாக இறுதிவரை செயற்பட்ட பலரை மக்கள் தோற்கடித்த பின்னரும் கூட தேசியப்பட்டியல் மூலமாக UPFA கட்சி உள்வாங்கியிருப்பதானது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும்.
மட்டுமின்றி நல்லாட்சியை உருவாக்குவதற்கு அர்ப்பணம் கொண்டுள்ளோம் எனக்கூறும் ஜனாதிபதி மைத்திரி அவர்களினால் தலைமை தாங்கப்படும் கட்சி இதனைச் செய்திருப்பதானது ஜனநாயகத்தை நேசிக்கும் அத்தனை பெயரையும் தலை குனியச் செய்யும் நடவடிக்கையாகவும் அமெந்துள்ளது.
இது போன்ற தேசியப்பட்டியல் நியமனங்கள் ஜனநாயக விரோத மற்றும் நல்லாட்சி விரோத செயற்பாடாக அமையும் என்பதனால் நாம் இவற்றை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அந்த வகையில் தேசியப்பட்டியல் நியமன விடயம் என்பது ஜனநாயகத்திற்கும் நல்லாட்சிக்கும் வலுச் சேர்த்தல் என்ற நோக்கத்தை நிறைவு செய்வதாக அமைய வேண்டும் என்பதே  தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் எமது உறுதியான நிலைப்பாடாகும்."
Read More
avathani Media Network

புதிய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுக்கள் ஐ.தே.முன்­ன­ணிக்கு!

புதிய தேசிய அர­சாங்­கத்தின் முக்­கிய பிர­தான அமைச்­சுக்கள் ஐ.தே.முன்­ன­ணிக்கும். ஏனைய அமைச்­சுக்­களை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடையே பகிர்ந்து கொள்­வ­தற்கு இணக்கம் காணப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.
இதற்­க­மைய நெடுஞ்­சா­லைகள், உயர்­கல்வி, நீர்ப்­பா­சனம், கமத்­தொழில் மற்றும் சமுர்த்தி அமைச்­சுக்­களை வழங்­கு­வ­தற்கு இரண்டு கட்­சி­க­ளுக்­கி­டையே நடை­பெற்ற பேச்­சுக்­களில் இணக்கம் காணப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.
இது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
தேசிய பாது­காப்பு அமைச்சு மற்றும் மகா­வலி அபி­வி­ருத்தி சூழல் பாது­காப்பு அமைச்சை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே தொடர்ந்தும் வைத்­தி­ருக்க போவ­தா­கவும் நிதி­ய­மைச்சு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கீழ் கொண்­டு­வ­ரப்­ப­டு­மென்றும் தெரி­ய­வ­ரு­கி­றது.
பெருந்­தோட்ட அபி­வி­ருத்தி அமைச்சு லக் ஷ்மன் கிரி­யெல்­ல­வுக்கும் ஹரீன் பெர்­னாண்­டோ­வுக்கு விளை­யாட்­டுத்­துறை அமைச்சும் தயா­க­ம­கே­வுக்கு சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து அமைச்சும் எரான் விக்­கி­ர­ம­ரட்­ன­வுக்கு முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்சும் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை அமைச்சை மட்டும் வழங்கி சமுர்த்தி விவ­கா­ரத்தை தயா­சிறி ஜய­சே­க­ர­வுக்கு வழங்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.
அத்­தோடு பொரு­ளா­தார அமைச்சு ஏற்­ப­டுத்­தப்­பட்டு அதனை மலிக் சமரவிக்­ர­ம­விற்கு வழங்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரியவருகிறது.
நிதியமைச்சு தொடர்பில் ஐ.தே.முன்னணிக்குள் பலத்த போட்டி நிலவிய நிலையில் அதனை பிரதமர் தன் கையில் வைத்திருப்பார் என்றும் அறிய வருகிறது.
Read More
avathani Media Network

முன்பள்ளி ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டு அரச சம்பளம் வழங்குவதற்கான விஷேட ஏற்பாடுகளை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும்-மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் சேவையாற்றி வருகின்ற கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் கல்வி அமைச்சில் இணைக்கப்பட்டு அரசாங்க சம்பளம் வழங்குவதற்கான விஷேட நடவடிக்கைகளை மேற்கொள்வதினூடாக நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இ.துரைரட்னமினால் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பாலர் பாடசாலை கல்விப்பணியகத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சமர்ப்பிக்கப்பட்ட பிரேரனையில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள்  அமைச்சரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு பிரதித்தவிசாளர் திரு.இந்திர குமார் பிரசன்னா தலைமையில் நடைபெற்றபோது தொடர்ந்தும் உரையாற்றுகையில்.....
கிழக்கு மாகாணத்தில் 03 தசாப்த காலமாக யுத்த சூழ்நிலையிலும் அர்ப்பணிப்புடன் இன்று வரை நமது முன்பள்ளி ஆசிரியர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கான விஷேட கொடுப்பணவு ஒன்றினை கடந்த அரசாங்கத்தில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி நேரத்தில் இடை நிறுத்தப்பட்டது.

கல்வி அமைச்சின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களை இணைத்து நிரந்தரமான சம்பளம் வழங்க உயர் நடவடிக்கைகளை முதலமைச்சர், கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண அமைச்சரவை இணைந்து மத்திய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் ஊடாக வருடாந்தம் மத்திய அரசினால் நமது கிழக்கு மாகாண சபைக்கும்;, கல்வி அமைச்சிக்கும் வழங்கப்படும் நிதியினை அதிகரிக்க வாய்ப்புக்கள் ஏற்படும். முன்பள்ளி ஆசிரியர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்வதன் ஊடாகத்தான் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை காணமுடியும்.
இந்த சபையில் உரையாற்றிய உறுப்பினர் திரு.நடராசா கடந்த கிழக்கு மாகாண ஆட்சியில் முன்பள்ளி தொடர்பாக எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டார்.

இது கவலைக்குரிய விடயமாகும். கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் கடந்த ஆறரை வருடங்களாக அமைச்சராகப் பணி புரிந்தவன் என்ற அடிப்படையில் இது தொடர்பான யதார்த்தமான நிகழ்வுகளை இச்சபைக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

முன்னாள் முதலமைச்சர் திரு.சந்திரகாந்தனின் முயற்சியினால் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகளுக்கான நியதிச் சட்டம் உருவாக்கப்பட்டு கிழக்கு மாகாணத்திற்கென புதிதாக பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் அமைக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளின் விபரங்கள், முன்பள்ளி ஆசிரியர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு முன்பள்ளி பாடசாலைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டதுடன், முன்பள்ளி பாடசாலைகளுக்கான பாடவிதானம் உருவாக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், சிங்கள மொழிமூல பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி நெறியும் 1வது முறையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த உண்மைகளை மறைத்து சபையில் உரையாற்றுவது குறித்து மிக்க வேதனை அடைகின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் புதிதாக ஒரு விடயத்தை ஆரம்பித்து பல சவால்களுக்கு மத்தியிலும் பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தினை உருவாக்கிய இத்துறையின் வளரச்சிக்கு திட்டமிட்டு செயல்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் திரு.சந்திரகாந்தன், கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் தவிசாளர், செயலாற்று முகாமையாளர்கள், அதிகாரிகளுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர்; கிழக்கு மாகாண சபையின் அமைச்சிக்களின் அதிகாரங்களை பிரிப்பதிலும், வழங்குவதிலும் தற்போது அனுபவம் பெற்றுள்ளார்.

எனவே முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்று அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டு கிழக்கு மாகாண பாலர் பாடசாலை ஆசிரியர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.தண்டாயுதபானி கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராகா கடமை புரிந்து நமது மாகாண கல்வித் துறையை நன்கு உணர்ந்தவர்.

எனவே தற்போதைய நல்ல சூழ்நிலையை பயன்படுத்தி முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாண மக்களின் நலனுக்காக நாங்கள் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். நாங்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்தாலும் கிழக்கு மாகாண சபையை உருவாக்குவதற்கும் அதன் அதிகாரங்களை பெறுவதற்கும் தற்போதைய முதலமைச்சர் பதவியை பெறவும் தியாகத்துடன் கடந்த காலங்களில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.
புதிய முதலமைச்சருக்கு 14 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினோம். எங்களை நம்ப வைத்து ஏமாற்றியதால் வேறு வழியின்றி எதிர்க்கட்சி ஆசனங்களில் கொள்கைக்காக அமர்ந்து செயல்படுகின்றோம்.

கிழக்கு மாகாண மக்களின் நலனுக்காக சபையில் சமர்ப்பிக்கும் நல்ல திட்டங்களுக்கு எங்களின் ஒத்துழைப்பு என்றும் உள்ளது எனக் குறிப்பிட்டார்.
Read More
avathani Media Network

சவால் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் வெற்றிபெற்ற மாவட்ட செலயக அணி மாவட்ட அரசாங்க அதிபரிடம் உத்தியோக பூர்வமாக கிண்ணத்தினை கையளித்தது.படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சவால் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் வெற்றிபெற்ற மாவட்ட செலயக அணியின் தலைவர் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சனால் மாவட்ட அரசாங்க அதிபரிடம் உத்தியோக பூர்வமாக கிண்ணத்தினை நேற்றைய தினம் (26) மாலை கையளித்தது.
 
மாவட்ட செலயகத்தில் நேற்றைய தினம் மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர்களான எஸ்.கிரிதரன், திருமதி ஜே. திருச்செல்வம், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்நேசராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
 
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சவால் கிண்ணம் 2015 சுற்றுப் போட்டியில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களின் அணி மற்றும் மாவட்ட செயலக அணியும் பங்கு கொண்டன.
 
கடந்த 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையில் நடைபெற்ற இச் சுற்றுப் போட்டியில் மாவட்ட செலயக அணி சம்பியனாகத் தெரிவானது.
 
இறுதிப்போட்டிக்கு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக அணியும், மாவட்ட செயலக அணியும் தெரிவாகின. இதில் மாவட்ட செயலக அணி முதலில் துடுப்பெடுத்தாடி 102 ஓட்டங்களைப் பெற்றது.
 
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 80 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.
 
அந்த வகையில் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மாவட்ட செயலக அணி மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சவால் கிண்ணத்தைத் தன்வசமாக்கிக் கொண்டது.
 
3ஆவது இடத்தினை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவு பெற்றுக் கொண்டது.
 
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இரண்டாவது வருடமாக நடத்தப்பட்டிருந்தது.
 
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சவால் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி அரச உத்தியோகத்தர்களிடையே ஒருங்கிணைப்பையும் அவர்களது விளையாட்டுத்திறமைகளையும் வெளிக் கொணரும் வகையில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



 
Read More
avathani Media Network

கிழக்கு மாகாண இன ஒற்றுமைக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட விமல வீர திஸாநாயக்கா மாகாண அமைச்சுப்பதவிக்கு சோரம் போகாமல் இறுதி வரை தனது கொள்கையுடன் செயல்பட்டார் -மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள், முன்னால் உறுப்பினர்கள் 21 பேர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இதில்  08 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை எமது கிழக்கு மாகாண சபைக்கு பெரும் கௌரவமாகும் விசேடமாக கிழக்கு மாகாண கல்வி, காணி, அமைச்சராக கடந்த ஆறரை வருடங்களாக பதவி வகித்த திரு. விமல வீர திஸாநாயக்கா பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் கடந்த 03 தசாப்த காலமாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண கல்வித்துறையை கட்டி எழுப்புவதற்கும், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த தமிழ் பேசும் மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தன்னால் முடிந்தளவு உதவியதுடன், கிழக்கு மாகாண இன ஒற்றுமைக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முதலமைச்சருக்கு ஆதரவு வழங்கினோம்.

எங்களின் ஆதரவைப் பெற்று விட்டு எங்களை ஏமாற்றினார்கள் இதனால் தனக்கு மாகாண கல்வி அமைச்சுப் பதவி 03வது தடவையும் காலடிக்கு வந்த போதும் பங்காளிக் கட்சியான தேசிய காங்கிரஸூக்கு கிழக்கு மாகாண சபை அமைச்சரவையில் அமைச்சுப் பதவி கிடைக்காததால் தனக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியை தியாகம் செய்தார். அமைச்சுப் பதவிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்காக வன்முறைகள், கொலைகள் கூட நடந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் கொள்கைக்காகவே தனது அமைச்சுப்பதவியை தூக்கி எறிந்தார்.
 
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு முதலாவது தெரிவு வாக்குப் பெற்று பாராளுமன்றம் சென்றுள்ள திரு.விமல வீர திஸாநாயக்கா நமது கிழக்கு மாகாண மக்கள் என்றும் மறந்து விட முடியாதுள்ளது என கிழக்கு மாகாண சபையின் அமர்வு பிரதித் தலைவர் திரு.இந்திர குமார் பிரசன்னா தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக வாழ்த்து தெரிவிக்கும் பிரேரனையில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.....

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.ஐ.மன்சூர், அலிசாஹிர் மௌலானா, திரு. தயா கமகே, இம்றான் மஹ்ரூப், எம்.ஐ.அமீர் அலி, எம்.எ.மஃறூப், எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமது கிழக்கு மாகாண மக்களின் நலன்களில் பணி புரிய நாம் வாழ்த்துகின்றோம். இவர்களின் பணிகள் தேசிய மட்டத்தில் இன ஒற்றுமைக்கும், எதிர்கால அரசியல் தீர்வுக்கும், அபிவிருத்திக்கும் பாரிய பங்களிப்பினை வழங்கும் என நம்புகின்றோம்.

இறைவன் நாடுகின்றவர்களுக்குத்தான்  அரசியல் அதிகாரங்களை வழங்குகின்றான். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களில் சிலருக்கு தேசியல் பட்டியல் ஊடாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கவுள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக அறிய முடிகின்றது. அந்த எதிர்பார்ப்புடன் உள்ள நமது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்து மக்கள் பணி புரிய நாம் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் கிழக்கு மாகாண சபையில் உணர்ச்சிவசப்பட்டு பேசுகின்ற போதெல்லாம் நான் பல தடவைகள் அவருக்கு வெளிப்படையாகவே எனது ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றேன். 

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக திரு.தயா கமகே பதவி வகித்தாலும், நமது நாட்டின் தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக பதவி வகிக்கின்றார்.

எதிர்காலத்தில் திரு.தயா கமகே பாராளுமன்றம் சென்று மத்திய அமைச்சரவையில் அமைச்சராகி அம்பாறை மாவாட்ட மக்களுக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் எனவே, திரு.தயா கமகேவின் செயற்பாடுகள் தேசிய மட்டத்தினை நோக்கிய வகையில் அமைய வேண்டும் என அன்று தெரிவித்தேன். இன்று அவர் தேசிய மட்டத்தில் உயர்ந்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் 04 ஐக்கிய தேசியக் வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெறுவதற்கு திரு.தயா கமகேயின் செயற்பாடுகளே பிரதான காரணமாகும் எனக் குறிப்பிட்டார்.

Read More
avathani Media Network

உயர்தரப்பரீட்சை எழுதிவிட்டு சென்ற மாணவன் மீது வாள்வெட்டு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பரீட்சை நிலையத்திலிருந்து வெளியேறிய மாணவன் மீது இனந்தெரியாதோர் வாள்வெட்டு மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இச் சம்பவம் நேற்று பகல் மினுவாங்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மூச்சக்கர வண்டியில் வந்த மூவர், குறித்த மாணவன் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த குறித்த மாணவன் மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையடுத்து மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Read More
avathani Media Network

"எமது கூட்டணியை முன்கொண்டு செல்லும் வகையில் SLMC தனது கடமையை நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம்": பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

(NFGG ஊடகப்பிரிவு,)
"SLMC யோடு தேர்தல் கூட்டணி ஒன்றில் NFGG இணைந்தமையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் அரசியல் எழுச்சியினையும் வெற்றியினையும் கண்டிருக்கிறது.
  NFGG செய்த பாரிய உழைப்பு மற்றும் தியாகங்கள் மூலமாகவே இந்த வெற்றி சாத்தியமானது. இந்தக் கூட்டணியை மேலும் வலுப்படுத்தி முன்கொண்டு சென்று இன்னும் பல வெற்றிகளை காண்பதென்பது இப்போது SLMCயின் கைகளியேயே தங்கியுள்ளது" என NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நடை பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அப்துர் ரஹ்மான் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது,
"தனது ஸ்தாபகத் தளமான மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC பாரிய பின்னடைவுகளை கடந்த காலங்களில் கண்டிருக்கிறது. கட்சியால் வளர்க்கப்பட்டவர்கள் அந்தக்கட்சிக்குத் செய்த துரோகத்தனங்களும், அவ்வாறானவர்கள் தொடர்பில் கட்சி நடந்து கொண்ட விதமும் இதற்குப் பிரதான காரணங்களாக இருந்தன.
இந்த வீழ்ச்சியினை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சில சக்திகள் தம்மை வளர்த்துக் கொண்டார்கள். இந்த இடைவெளியை நிரப்பும் வகையிலேயே NFGG கடந்த கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. முஸ்லிம் கட்சிகள் ஒரு சுய விமர்சனத்திற்கு ஊடாக தமது தவறுகளை இனம் கண்டு அவற்றுக்கான பரிகாரங்களை மேற்கொண்டு சமூகத்திற்கும் நாட்டிற்கும் பணியாற்றும் வகையில் முன்னகர வேண்டும் என்பதே எப்போதும் எல்லோரினதும் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலேயே NFGGயின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அந்தப் பின்னணியிலேயே கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக SLMCயோடு ஒரு தேர்தல் கூட்டணியை நாம் ஏற்படுத்திக் கொண்டோம். 
நல்லாட்சிக்காக கூட்டிணைந்து உழைத்தல், பிரதேச மற்றும் இன உறவுகளை வலுப்படுத்துதல் முஸ்லிம் சமூகத்தினதும் ஏனைய மக்களினதும் நலன்களைப் பாதுகாத்தல் போன்ற அடிப்படை நோக்கங்களைக் கொண்டு  ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத் தினையும் நாம் SLMCயுடன் கைச்சாத்திட்டோம்.
இந்தக் கூட்டணியினை முஸ்லிம் மக்கள் பாரிய உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் வரவேற்றார்கள். இந்தக்கூட்டணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைத்த தேர்தல் வெற்றி இதனை உறுதி செய்கிறது.
38477 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ள இந்த அரசியல் கூட்டணி இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அடுத்ததாகப் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட அரசியல் சக்தியாக இடம் பிடித்திருக்கிறது. இதன் விளைவாக இந்தக்கூட்டணி மிகச் சௌகரியமாக ஒரு பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் முழு இலங்கையிலும் முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்சியின் பெயரில் பெற்றுக் கொண்ட ஒரேயொரு ஆசனமாகவும் இது இருக்கிறது.
காத்தான்குடிப் பிரதேசத்தை பல்லாண்டு காலமாக தனது அரசியல் பிடியில் வைத்திருந்த சமூக விரோத சக்திகளையும் தோற்கடித்து காத்தான்குடி பிரதேசத்தில் பெரும்பான்மை மக்கள் பலத்தை இந்தக்கூட்டணி பெற்றிருக்கிறது. அது போலவே, திருமலை மாவட்டத்திலும் மிகக் கணிசமான மக்கள் ஆதரவினை இந்தக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட எமது வேட்பாளரால் பெற முடிந்திருக்கிறது.
இந்தப் பாரிய வெற்றியை சாத்தியப்படுத்துவதற்கு NFGG யின் தலைமைத்துவ சபையும் அதன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பாரிய தியாகங்களையும் பங்களிப்புக்களையம் செய்திருக்கிறார்கள். 
கிட்டத்தட்ட 17 மில்லியன் அளவிலான நிதி எம்மால் இக்கூட்டணியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஒரு சதத்தைக்கூட SLMC யிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ள வில்லை. அவ்வாறு பெறுவது எமது வழிமுறையும் அல்ல. முழுக்க முழுக்க இந்தத் தொகையை எமது தலைமைத்துவ சபையும் எமது இயக்க உறுப்பினர்களும் ஆதரவாளர்களுமே வழங்கியிருக்கிறார்கள். 
இந்த வெற்றியில் எமது பெண்கள் அணி செய்த பங்களிப்பு மிக மகத்தானது. ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் பலத்தை ஆட்டம் காணச் செய்யும் வகையில் ஒரு பிரமாண்டமான மகளிர் மாநாட்டை எமது மகளின் அணியினர் நடாத்தியிருந்தனர். 5000 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட இம்மாநாடு முழு இலங்கையிலும் தேர்தல் காலத்தில் நடாத்தப்பட்ட ஒரேயொரு பிரமாண்டமான மகளிர் மகாநாடாக அமைந்தது.
அது மட்டுமின்றி எமது பிரச்சாரத்திற்காக நமது மகளிர் அணியினர் வீடுவீடாகச் சென்று பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதற்கு மேலதிகமாக எமக்கு நிதித்தட்டுபாடு ஏற்பட்ட ஒரு சிக்கலான தருணத்தில் தமது தங்க நகைகளைக்கூட அன்பளிப்பாக வழங்கினர். இப்படியான தியாகங்களும் உழைப்பும்தான் இந்தக்கூட்டணியின் பாரிய வெற்றியைச் சாத்தியமாக்கியது.
ஒரு சில ஆயிரம் வாக்குகளைப் பெற இக்கூட்டணி  தவறியிருக்குமேயானால் SLMC இம்மாவட்டத்தில் ஆசனத்தை இழந்திருக்கும் என்பது மட்டுமின்றி வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிட்ட சமூக விரோத சக்திகள் வெற்றியடைவதற்கும் அது காரணமாக அமைந்திருக்கும். இப்பாரிய வெற்றியைக் கண்டுள்ள இக்கூட்டணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை எல்லோரும் விரும்புகின்றார்கள்.
எங்களைப் பொறுத்த வரையில் இக்கூட்டணிக்கான பங்களிப்புக்களையும் கடமைகளையும் மிகவும் பொறுப்படனும் தியாகத்துடனும் செய்து NFGG தனது பொறுப்பை நூறு வீதம் நிறை வேற்றியுள்ளது. அத்தோடு இக்கூட்டணியை வலுப்படுத்தி மேலும் கொண்டு செல்ல வேண்டும் என்பதிலும் ஆர்வமாக உள்ளோம். இப்போது இந்த விடயம் SLMCயின் தலைமைத்துவத்தின் முடிவிலும் நடவடிக்கைகளின் முடிவிலுமே தங்கியுள்ளது.
எந்தவொரு அரசியல் கூட்டணியினதும் தொடர்பயணம் என்பது பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதையிலும் தமது  கடமைகளை பரஸ்பரம் உரியமுறையில  நிறைவேற்றுவதிலுமே தங்கியிருக்கிறது. NFGG யின் இவ்வாறான பாரிய பங்களிப்பின் மூலமாகவே இறைவனின் உதவியுடன் SLMCயினால் ஒரு பாராளுமன்றப் பிரதிநிதியைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கின்றது. SLMCயின் வெற்றிக்காக NFGG செய்துள்ள பங்களிப்பை மதித்தும் , NFGGயோடு SLMC செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டினை மதித்தும் NFGGக்கான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவது SLMCயின் கடமையாகும். எனவே, இக்கூட்டணியை முன் கொண்டு சொல்லும் வகையில் தமது பொறுப்பினை SLMC நிறை வேற்றும் என நாம் எதிர் பார்க்கிறோம்.
இது தொடர்பாக கடந்த 24.08.2015ஆம் திகதி நாம் SLMCயின் தலைமைத்துவத்தோடு நாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.
தேசியப்பட்டியல் தொடர்பில் SLMC தலைமைத்துவத்திற்கிருக்கும் நெருக்கடி நிலைமைகளையும் நாம் புரிந்து கொள்கிறோம். இருந்தாலும் இக்கூட்டணியின் எதிர்காலம் தொடர்பில் காலம் தாழ்த்தாது அவசரமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் SLMCயின் தலைமைத்துவத்திற்கு நாம் எடுத்துரைத்துள்ளோம்.
அந்த வகையில் இந்த வார இறுதிக்குள் எமது தலைமைத்துவ சபையும் SLMCயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களும் உத்தியோக பூர்வமான சந்திப்பொன்றை மேற்கொண்டு உரிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முடிவு செய்துள்ளோம்."
Read More
avathani Media Network

கிழக்கு முதலமைச்சரின் முயற்சியில் 8 பாடசாலைக்கு நிதியுதவி..


USA யின் நிதியில் இருந்து கிழக்கு மாகாணத்தில் 8 பாடசாலைக்கு $ 3,218,000 அமெரிக்க டொலர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் அவர்களின்  பெருமுயற்சியால் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன..

பாடசாலைகள்:
01. அட்டாளைச்சேனை அந்-நூர் மஹாவித்தியாலயம்.

02.ஏறாவூர் - அப்துல் காதர் வித்தியாலயம்.

03.கல்முனை- வெஸ்லி உயர்பாடசாலை,

04. சாய்ந்தமருது காரியப்பர் வித்தியாலயம்.

05.காவத்தமுனை - அல்-அமீன் வித்தியாலயம்.

06. காத்தான்குடி -பதுரியா வித்தியாலயம்.

07.சம்மாந்துறை தாறுஷலாம் மகாவித்தியாலயம்.

08.நிந்தவூர் -அல்-மஷ்ஹர் வித்தியாலயம்.

ஆகிய பாடசாலைகளுக்கு இத்தொகைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

(ஜுனைட்.எம்.பஹ்த் )




Read More
avathani Media Network

கடந்த தேர்தலில் இரண்டு வகையான வெற்றிகளை இறைவன் எமக்குத் தந்தான்: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

'கடந்த பொதுத்தேர்தல் முடிவுகளிலிருந்து வெற்றிகளை நாம் இரண்டு வகையாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று பிராந்தியரீதியில் நாம் அடைந்துள்ள வெற்றி, மற்றையது தேசிய ரீதியில் நமது பங்களிப்புடன் நாட்டு மக்கள் பெற்றுள்ள வெற்றி' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் பின்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடாத்தி வருகின்ற தொடர் மக்கள் சந்திப்புகளில் ஒன்று நேற்றைய தினம் 25.08.15 அன்று காத்தான்குடி NFGG பிராந்திய வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், "நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் நாம் பிராந்திய ரீதியில் முழுமையான வெற்றியை பெற்றுக்கொள்ளவில்லை எனும் ஆதங்கத்தினை எமக்குள் தோற்றுவித்திருந்தாலும் அள்ளாஹ் எமக்கு இத்தேர்தலில் நேரடியாகவும் மறைமுகமாக பல வெற்றிகளைத் தந்துள்ளான் என்பதை நாம் தெளிவாகப்புரிந்து கொள்ளவேண்டும்.
கடந்த தேர்தலில் நமக்கு கிடைத்த வெற்றிகளை இரண்டு வகையாக நாம் புரிந்து கொள்ளவேண்டும். இம்முறை நாம் பிராந்திய ரீதியில் நல்லாட்சிக்கு விரோதமான, 25வருட ஊழல் மோசடி மிக்க, சுயநல அரசியல் தலைமைகளை ஒட்டு மொத்த மக்கள் சக்தியாக நின்று முழுமையாக தோற்கடித்திருக்கின்றோம். இது நமக்குக் கிடைத்த முதலாவது பாரிய வெற்றியாகும். இரண்டாவது, தேசிய ரீதியில் தொடர்ந்தும் நல்லாட்சிக்காக பாடுபட்டவர்கள் என்ற வகையில் நமது பங்களிப்புடன் மீண்டும் இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஒன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையாகும்.
அத்துடன் இப்பொதுத்தேர்தலானது, கடந்த ஜனவரி 8ம் திகதி இந்த நாட்டில் இடம்பெற்ற நல்லாட்சிக்கான போராட்டத்தின் இரண்டாம் கட்டமென்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். இதனை எமது தேர்தல் பிரச்சார மேடைகளிலும் நாம் தொடர்ச்சியாக சொல்லி வந்தோம். அந்த வகையில் ஜனவரி 8ம் திகதி நாம் மிகுந்த அச்சுறுத்தல்களுக்கும், தியாகங்களுக்கும் மத்தியில் இந்த நாட்டில் மலரச் செய்த நல்லாட்சியினை தொடர்ந்தும் வலுப்படுத்தும் வகையில் அள்ளாஹ் இத்தேர்தல் முடிவுகளினை தேசிய ரீதியில் மிகப்பெரும் வெற்றியாகவே எமக்கு ஆக்கித்தந்துள்ளான். இம்முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி, கடந்த காலங்களில் முஸ்லிம்களை இந்த நாட்டில் முற்றாக அழிக்கத் துடித்த பொது பல சேனா போன்ற இனவாத சக்திகளுக்கு மக்கள் அடித்த சாவு மணி, அத்துடன் சிறு பான்மை மக்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட ஐக்கிய தேசிய முன்னணி பெற்றுக்கொண்டுள்ள பெருமளவு ஆசனங்களின் எண்ணிக்கை என்பன இதற்கு சான்றுகளாகும். இத்தனை காலமும் பேரினவாத சிந்தனைகளுக்கூடாக தவறாக திசை திருப்பப்பட்டுவந்த சிங்கள மக்கள் இம்முறை பெரும்பான்மையாக இனவாத சக்திகளை இந்தத் தேர்தலில் நிராகரித்திருக்கின்றமையானது அள்ளாஹ் எமக்கு இத்தேர்தலில் வழங்கியிருக்கின்ற பாரிய வெற்றியாகும்.
இவை அனைத்திற்குப் பின்னாலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியாகிய நமது தொடர்ச்சியான பங்களிப்பும், காத்திரமான முன்னெடுப்புகளும் இருந்து வந்தமையை யாரும் மறுத்துரைக்க முடியாது. எனவே நாம் அள்ளாஹ் எமக்கு வழங்கியுள்ள இந்த தேர்தல் வெற்றிகளை தெளிவாக பொருந்திக்கொண்டு எமது நல்லாட்சிக்கான பயணத்தினை மிகுந்த நம்பிக்கையுடன் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல வேண்டும்." என்று தெரிவித்தார்.
Read More