Featured Home (TOP)

Recent Comments

Monday, August 31, 2015

avathani Media Network

அட்டாளைச்சேனை மண்ணிற்கு வழங்கப்படவுள்ள தேசிய பட்டியலை தட்டி பறிப்பது நியாயமாகுமா..??


அட்டாளைச்சேனை மண் விகிதாசாரத் தேர்தல் வருவதற்கு முன்னர் தொகுதிவாரித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றிருக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தோற்றம் முதல் இன்று வரைக்கும் பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு அட்டாளைச்சேனை தள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜலால்தீன் மற்றும் பெருந்தலைவர் அஷ்ரப் ஆகியோரின் பிற்பட்ட காலத்தில் அட்டாளைச்சேனை மண் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் பார்க்கப்பட்டு வரும் அதேவேளை பெயர் சொல்லும் அளவிற்க்கு அபிவிருத்தி என்பது இங்கு நடைபெறவில்லை என்பதை கசத்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


இலங்கையில் ஆகக் கூடியளவான விகிதாசாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெறுகின்ற பிரதேசம் அட்டாளைச்சேனையாகும். அம்பாரை மாவட்டத்தில் சகல பிரதேசங்களுக்கும் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய போதிலும் அட்டாளைச்சேனையை மட்டும் தொடர்ந்தும் புறக்கணித்தே வந்துள்ளார்கள்.



தமது மண்ணை முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணித்தபோதும் கட்சியின் மீதான பற்றுக்காரணமாக அந்தக்கட்சிக்கே வாக்களித்தே வந்துள்ளனர். இந்த முறைதான் பலமானதொரு வாக்குறுதியை தலைவர் ஹக்கீம் அவர்கள் வழங்கினார்கள். மற்ற ஊர்களைப்போல் எம்.பி பதவிக்காக கட்சியைக் காட்டிக்கொடுத்த ஊர் அட்டாளைச்சேனையல்ல.


முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நூற்றுக்கு நூறுவீதம் முஸ்லிம் காங்கிரஸ்சுக்கு வாக்களித்து வந்த ஊர் என்ற வகையில் அதற்கான நன்றிக்கடனாக முஸ்லிம் காங்கிரஸ்சின் தலைமை இம்முறை கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியலை அம்மண்ணையும் அம்மக்களையும் கௌரவித்து வழங்க முன்வந்த விடயம் யாவரும் அறிந்ததே அதற்காக என்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக கடமைபட்டவர்களாக அட்டாளைச்சேனை மக்கள் உள்ளனர் என்பதை மனபூர்வமாக தெரிவித்துக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.


சம்மாந்துறை மண்ணுக்கு முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தொப்பி முகைதீன் மூன்று தடவைகளும், அன்வர் இஸ்மாயில் ஒரு தடவையும், இன்று மன்சூரும் எம்.பி கிடைத்திருக்கின்றது. இதற்கிடையில் கடந்த முறை சம்மாந்துறை பிரதேச சபையை சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த நௌசாத் கைப்பற்றியிருந்தார். இன்று அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக கூடுதலான வாக்குகள் மாற்றக்கட்சியினருக்கு அளிக்கப்படும் இ்டமாகவும் சம்மாந்துறை திகழ்கின்றது.



அட்டாளைச்சேனை மண் எந்த சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைக் காட்டிக் கொடுக்கவி்லலை.குறிப்பிட்ட சில வருடங்கள் எம்.பி பதவி இல்லாத நிலையில் சம்மாந்துறைக்கு எம்.பி வேண்டும் என்ற எத்தனையோ போராட்டங்களை நடத்தினீர்கள்.நீங்கள் கூறுவது போன்று சம்மாந்துறை மண்ணும் கட்சி்ககாகவும், மற்றய இடங்களைப் பாதுகாப்பத்ற்காகவும் வேட்பாளரை நிறுத்தாமல் அட்டாளைச்சேனைக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம்.


உங்களுடைய தேவைபப்ாடு முடிந்துவிட்டதற்காக மற்றய ஊரை விட்டுக்கொடுக்கச் சொல்லுவது எந்த வகையில் நியாயமாகும்.


அட்டாளைச்சேனை மண்ணுக்கான பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கினால் அது எதிர்காலத்தில் எமது பிரதேச பாராளுமன்ற உறுப்புருமைக்கு சவாலாக அமைந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவோ என்னவோ சிலர் அட்டாளைச்சேனைக்கு தேசிய பட்டியல் வழங்குவதை மறைமுகமாக தடுக்க முற்படுகின்றனர்.


“சாமியார் கொடுத்தாலும் பூசாரியார் மறுப்பதாக உள்ளது” அட்டாளைச்சேனைக்கான தேசிய பட்டியல் விவகாரம் கடந்த மூன்று தசாப்தங்களாக தவம் இருந்து கிடைக்க உள்ள இம்மண்ணிற்க்கான கௌரவம் இப்பாராளுமன்ற அலங்கரிப்பு இம்மண்ணில் பிறந்த மைந்தன் ஒருவன் நாடாளுமன்றில் அமரும் சந்தர்பம் அது முஸ்லிம் காங்கிரஸ்சால் மட்டுமே முடியும் என்பதற்கிணங்க முஸ்லிம் காங்கிரஸ்சின் தலைமை வழங்கிய வாக்குறுதிக்கமைய அதை வழங்குவதற்காண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் “வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக” சகோதரர் மிஸ்பா அவர்களின் கட்டுரை காணக்கிடைத்தது.


உண்மையில் சகோதரர் மிஸ்பா அவர்கள் யாரை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறான ஒரு கட்டுரையை வரைந்துள்ளார் என்று தெரியவில்லை ஆனாலும் உங்களின் வேண்டுதலின் மூலம் அட்டாளைச்சேனை மண்ணில் பிறந்த ஒவ்வொரு மகனும் வேதனை அடைந்துள்ளான் என்பதை உங்களுக்கு நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டியதில்லை


நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் கடந்த பாராளுமன்ற தேர்தல் களநிலவரங்களின் படி அட்டாளைச்சேனை மண்ணில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ்சுக்கு கிடைத்த வாக்குகள் எந்த பக்கம் சாய்ந்திருதாலும் அந்த பக்கம் வெற்றி நிச்சயிக்க பட்டிருந்ததை நீங்கள் மறுக்க முடியாது அது அதாவுல்லா தலைமையிலான சுதந்திர கூட்டமைப்பானாலும் சரி ரிஷாத் பதுருத்தீன் தலைமையிலான அ.இ.ம. காங்கிரஸ்சானாலும் சரியே.


இன்னொன்று நீங்கள் மறுக்க முடியாத உண்மை அட்டாளைச்சேனை மண் கடந்த பாராளுமன்ற தேர்தலை பகிஷ்கரித்திரிந்தாலோ அல்லது மாற்றுகட்சிக்கு வாக்களித்திரிந்தாலோ முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் பெற்றிருக்கும் மூன்று உறுப்பினர்களும் கேள்விக்குறியே என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்


சகோதரர் மிஸ்பா அவர்களே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் இஸ்மாயில் அவர்களுக்கு பின்னர் சம்மாந்துறை மண் இழந்த பாராளுமன்ற பிரதிநிதியை இம்முறை கிடைக்கபெற்றதை இட்டு முதலில் மகிழ்வது அட்டாளைச்சேனை மக்களே ஏன் என்றால் சகோதரர் மன்சூர் அவர்களுக்கு சம்மாந்துறையில் கிடைத்த வாக்குகளைவிட அட்டாளைச்சேனை மக்களே அதிகமாக வாக்களித்துள்ளனர் என்பதை மறந்துவிடவேண்டாம்.


சம்மாந்துறை மண் பத்து வருடங்கள் மட்டும் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத கவலையை அறிந்திருந்தும் அட்டாளைச்சேனை மண் மூன்று தசாப்தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத கவலையை உங்களால் உணரமுடியாமல் இருப்பது உங்களின் சுயநலத்தை காட்டுகின்றது.


பர்ஸான் எஸ் முஹம்மது


அட்டாளைச்சேனை
Read More
avathani Media Network

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் களம்..! வேட்பாளர்களின் வெற்றி தோல்வி

(அபூநிதா)

அவதானம் - 01

அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து உறுப்பினர்களுக்காக தமிழர் முஸ்லிம்கள் என பலர் களமிறங்கியிருந்தனர். 

குறிப்பாக, இம்மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலேயே தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் களைகட்டியிருந்தன. அதிலும் குறிபாக காத்தான்குடியிலேயே  எதிரும் புதிருமான பிரச்சாரங்கள், ஆளையாள் ஏசுகின்ற நிலைப்பாடு, ஒருவர் விவாதத்திற்கு அழைக்க அடுத்தவர் முடிந்தால் பதில் கொடுங்கள் என்று ஒளிந்து கொள்ளுகின்ற போக்கு என பல்வேறு விடயங்கள் காணப்பட்டன.

எப்படியோ தேர்தல் முடிந்தது. மக்கள் எதிர்பார்த்தது போல் மூன்று தமிழர்களும், இரண்டு முஸ்லிம்களும் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகினர். அத்தோடு பிரச்சினை முடிந்து விட்டதா என்றால் இல்லை அப்போதுதான் பிரச்சினையே தொடங்கியது.

காத்தான்குடியில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்,  பொறியியலாளர்  சிப்லி பாறூக் ஆகியோருக்கு தேசியப் பட்டியல் கொடுக்கப்பட வேண்டும் என்ற 'தேசியப்பட்டியல்' படலம் தொடங்கியது. 

குறிப்பிட்ட சில நாட்களுக்குள் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு  தேசியப் பட்டியல் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடந்து அவரது சொந்த ஊரான காத்தான்குடியில் ஊர்வலங்களும் பட்டாசு முழக்கங்களும் இடம் பெற்றன. அத்தோடு பல இடங்களில் தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்று பலர் வைத்திய சாலைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.

அது மட்டுமல்லாமல் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கான நியாயமான காரணங்கள் இருப்பதை நியாயப்படுத்தியும் குறிப்பிட்ட சிலர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் றவூப் ஹகீமிடம் பேச்சு வார்த்தைகளை நடாத்தியிருந்தனர். அதைப்பற்றி கவனமெடுப்பதாகவும் முடிவு சொல்வதாகவும் கருத்துத் தெரிவித்த தலைவர் இதுவரை அதற்கான சைகையைக் காட்டவில்லை.

இவை ஒரு புறமிருக்க..

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் களத்தில் தோற்றது வென்றது யார் என்பது பற்றி அவதானத்தின் முதற்பகுதியில் சிறு குறிப்பொன்றைத் தரலாம் என நினைக்கிறேன்.

நடந்து முடிந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் போட்டியிட்டவர்களில் முக்கியமானவர்களாக முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்,  பொறியியலாளர்  சிப்லி பாறூக், அலிசாகிர் மௌலானா, அமீரலி ஆகியோர் அடங்குகின்றனர். அவர்களில் அலிசாகிர் மௌலானா, அமீரலி ஆகியோர் வெற்றிபெற ஏனைய மூவரும் தோற்றுப் போனார்கள்.

இவர்களின் வெற்றி தோல்விக்கும் அப்பால் இன்னும் சில விடயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது


SLMC

01. மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டுப்போயிருந்த SLMC என்ற மரத்தை வளர்த்தெடுப்பதற்கு SLMC தலைமைத்துவம்  NFGG யையும், பொறியியலாளர் அப்துர் ரஹ்மானையும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. 

02. நடந்து முடிந்த தேர்தலில் தனது பெயரையும், தமது கட்சி ஆசனம் பெற்றுக் கொண்டதையும் SLMC யின் தலைமைத்துவம் உலகுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறது.

03. முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை தோற்கடிக்க வேண்டும் என்ற SLMC யின் தலைமைத்துவக் கனவு இங்கே நனவாகியிருக்கிறது.

NFGG

04. பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், தான் ஒன்பது வருடங்களாக கட்டிக்காத்து வந்த நல்லாட்சி சிந்தனையை தனது தனித்துவத்தின் மூலமும், இந்த இணைவின் மூலமும் இன்னும் வளர்த்தெடுத்திருக்கின்றார்.

05. NFGG யின் அரசியற் கொள்கையினை ஏற்றுக் கொண்டிருந்த சுமார் 8000 வாக்காளர்களின் எண்ணிக்கையினை அப்துர் ரஹ்மான் சுமார் 12000 ஆக உயர்த்தியிருக்கின்றார்.

06. உள்ளுரில் வளர்த்தெடுத்த நல்லாட்சிக் கொள்கையை மாவட்ட ரீதியில் கொண்டு செல்வதற்கு NFGG இத்தேர்தலைப் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது

சிப்லி பாறூக்

07. முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கான தனது எதிர்ப்பையும், ஆத்திரத்தையும் பாவிப்பதற்கு இந்தத் தேர்தலை  சிப்லி பாறூக் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

08. குறைந்த ஆதரவாளர்களுடன் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த பொறியியலாளர் சிப்லி பாறூக் அவர்கள், பொறியியலாளர் அப்துர் ரஹ்மானின் அரசியல் மேடையையும் பயன்படுத்தி அவருக்கான ஆதரவை அதிகரிக்கச் செய்துள்ளார்.

ஹிஸ்புல்லாஹ்

09. எத்தனை கோடி செலவு செய்தாலும் மக்கள் அதற்காக மயங்கமாட்டார்கள் என்பதை இந்தத் தேர்தல் மூலம் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் புரிந்து கொண்டுள்ளார்.

10. அரசியலில் தமக்கு எதிரிகளாக இருந்த றஊப் ஏ மஜீத். மற்றும் சல்மா ஹம்சா ஆகியோரை தன்னோடு இணைத்துக் கொண்டதன் மூலம் எதிர் வரும் உள்ளு}ராட்சி தேர்தல்களில்  தனக்கு வரும் சவால்களில் கனிசமானவற்றை ஹிஸ்புல்லாஹ் குறைத்துக் கொண்டுள்ளார்.

11. ஊரை அழகு படுத்துவதைவிட உட்கட்டமைப்பு வேலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை மக்கள் வாக்களிப்பின் மூலம் ஹிஸ்புல்லாஹ் வுக்கு விளங்கவைத்திருக்கிறார்கள்.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ)

12. காத்தான்குடியில் பல்வேறு அமைப்புக்களும், இயக்கங்களும் இருந்தும் இந்தத் தேர்தலில் தமது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தைரியமாகச் சொன்ன ஒரு முதுகெலும்புள்ள அமைப்பாக தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) இடம்பிடித்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பு:
இது ஒரு தொடர் கட்டுரையாகும். இங்கே எழுதப்படும் கருத்துக்கள் தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அதனை எமக்கு எழுதி அனுப்பினால் (பெயர் முகவரியுடன்) அதனை பக்கசார்பின்றி பிரசுரிக்க முடியும்.

avathanimedia@gmail.com

அவதானம் தொடரும்...




Read More
avathani Media Network

வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் உட்­பட 7 மாவட்­டங்­களில் வரட்­சியான கால­நிலை; இரண்டு இலட்சம் மக்கள் பாதிப்பு!

வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் உட்­பட நாட்டின் 7 மாவட்­டங்­களில் நிலவும் வரட்­சி­யான கால­நிலை கார­ண­மாக சுமார் 60,000 குடும்­பங்­களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக இடர்முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்டுள்­ளது.
யாழ்ப்­பாணம், மட்­டக்­க­ளப்பு, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, பொலன்­ன­றுவை, அம்­பாறை மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்கள் வரட்­சி­யான கால­நி­லையால் பாதிப்பை எதிர்­நோக்­கி­யுள்­ள­தாக அந்த நிலை­யத்தின் உதவிப் பணிப்­பாளர் பிரதீப் கொடிப்­பிலி தெரி­வித்தார். இத­னை­ய­டுத்து, பல பிர­தே­சங்­களில் குடி­நீ­ருக்கு தட்­டுப்­பாடு நில­வு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.
பாதிக்­கப்­பட்­டுள்ள பிர­தே­சங்­க­ளி­லுள்ள மாவட்ட செய­ல­கங்கள், பிர­தேச செய­ல­கங்கள், மாவட்ட இடர் முகா­மைத்­துவ பிரி­வுகள் மற்றும் நிவா­ரண சேவைப் பிரி­வுகள் என்­பன இடர் முகா­மைத்­துவ அமைச்­சுடன் இணைந்து நிவா­ரணப் பணி­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இதே­வேளை, வரட்சி நிலை அதி­க­ரித்து வரு­கின்ற பிர­தே­சங்­க­ளுக்கு நீரை விநி­யோ­கிப்­ப­தற்­கான விசேட திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு தேசிய நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு சபை திட்­ட­மிட்­டுள்­ளது.
மொன­ரா­கலை, அம்­பாந்­தோட்டை, அனு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, குரு­ணாகல் மற்றும் வவு­னியா மாவட்­டங்­க­ளிலும், மஹி­யங்­கனை பிர­தே­சத்­திலும் எதிர்­வரும் சில மாதங்­களில் வரட்சி ஏற் ­ப­டக்­கூ­டிய சாத்­தியம் உள்­ள­தா­கவும் அந்த சபை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
தற்­போது வரட்சி ­யினால் பாதிக்கப்­பட்­டுள்ள பிர­தே­சங்­களில் மக்­களுக்கு நீரை விநி­யோ­கிக்கும் நடவ­டிக்­கைகள் முன் ­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக தேசிய நீர்­வ­ழங்கல் வடிகா­ல­மைப்பு சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் இரண்டு இலட்சம் லீற்றர் வரையான நீரை பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களுக்கு விநியோகிப்ப தற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More