Featured Home (TOP)

Recent Comments

Saturday, September 19, 2015

avathani Media Network

கடற்கரை சூழலை தூய்மைப்படுத்தும் பணியில் ஜனாதிபதி

கடற்கரை சூழலை தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றது. 

"கடலை பாதுகாப்போம் நாமும் பாதுகாப்பாய் இருப்போம்" என்ற தொனிப்பொருளில் அமைந்த தேசிய வேலைத்திட்டத்தை கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்து இந் நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. 
கடற்கரையைச் சூழவுள்ள பகுதிகள் மாசடைவதை தடுப்பதற்கு உடனடித் தீர்வொன்றை வழங்கும் வகையில் கடற்கரைப் பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.




source- virakesary
Read More
avathani Media Network

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் மகன் மாரடைப்பால் மரணம்! அமீரகத்தில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரும், துணை குடியரசு தலைவருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் மகனுமான ஷேக் ரஷீத் பின் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 34. 
ஐக்கிய நாடுகளின் பிரதமரும், துணைக் குடியரசுத் தலைவரும், துபாயின் மன்னருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்துமின் மூத்த மகன், ஷேக் ரஷீத் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தும். 34 வயதான இவர் குதிரையேற்றம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

மாரடைப்பு காரணமாக, இன்று காலை அவர் மரணத்தை தழுவினார். அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, துபாயில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. எமிரேட்ஸ் நாடுகளில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். "நாங்கள் அல்லாவுக்கு உரித்தானவர்கள், அவரிடமே திரும்ப வேண்டியவர்கள்" என்று துபாய் மன்னர் அலுவலகம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

Read More
avathani Media Network

தந்தையால் கடலுக்குள் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் மீட்பு!

கொஸ்கொட மாபெல்லே பகுதியில் தந்தையால் கடலுக்குள் தள்ளிவிடப்பட்ட இரண்டரை வயதுக் குழந்தையின்  சடலம் மஹாபெலன பகுதியில் இன்று சனிக்கிழமை(19) கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாபெல்லே பகுதியிலுள்ள கற்பாறைக்கு குழந்தையும் மனைவியையும் அழைத்து சென்ற நபர் அவ்விருவரையும் அங்கிருந்து கடலுக்குள் தள்ளிவிட்டுள்ளார். அவரது மனைவி கரைக்கு நீந்திவந்து உயிரை காப்பாற்றி கொண்டுள்ளார்.
எனினும்,  இரண்டரை வயதுடைய குழந்தை காணமற்போயிருந்தது. இந்நிலையிலேயே குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More
avathani Media Network

9 மாதங்களில் 10 சிறார்கள் கொலை; அதிர்ச்சித் தகவல்!

நாட்டில் கடந்த 9 மாதங்களில் 10 சிறார்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சிறார்கள் மற்றும் பெண்கள் என 795 பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையின் பதில் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த 9 மாதங்களில் சிறுவர்கள் கடுமையாக நடத்தப்பட்டுள்ளமை குறித்த 84 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தலவத்துகொட, மாதிவல தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜயகொடி இதனை குறிப்பிட்டுள்ளார்.
2014ம் ஆண்டில் 27 சிறார்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறுவர்கள் கொடுமையாக நடத்தப்பட்டமை தொடர்பில் 197 சம்பவங்கள் நடந்துள்ளன.
அத்துடன் 2014ம் ஆண்டில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான ஆயிரத்து 680 சம்பவங்கள் நடத்துள்ளதாகவும் பிரியந்த ஜயகொடி மேலும் தெரிவித்துள்ளார்.
Read More
avathani Media Network

சேயா படுகொலை : உறவினர்கள் இருவர் கைது

கொட்­ட­தெ­னி­யாவ - படல்­கம, அக்­க­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற முன்­பள்ளிச் சிறுமி கொடூ­ர­மாக பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு  படு­கொலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  
17 வயதுடைய இளைஞனும் மற்றுமொரு நபருமே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
டி.என்.ஏ பரிசோதனையின் முடிவிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இருவரும் சிறுமியின் உறவினர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஐந்து வயதுடைய சேயா செதவ்மி, கடந்த 11 ஆம் திகதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது காணாமல் போய் 13 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

நீங்களும் எழுதலாம் - BMICH யில் கவிதைச்சுவர்


கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் 18-09.2015 அன்று ஆரம்பமான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி அமையப் பெற்ற வளாகத்தில் ஒரு பகுதியில் நிறுவப்ப்பட்டிருக்கும் கவிதைச்சுவரில் கண்காட்சி காண வரும் எவரும் தமக்கு விருப்பமான மொழியில் கவிதை எழுதி அச்சுவரில் பொருத்தி வரலாம்.

கடந்த இரண்டு வருடங்களாக வழமையாக அமைக்கப்பெறும் இக்கவிதைச் சுவரில் சிங்கள கவிஞர்கள் பெரும் தொகையினர் தம் கவிதைகளைப் பொருத்தி வருகிறார்கள். அக்கவிதைகளில் சிறந்தவை தெரிவுச் செய்து இலங்கை புத்தகப் பதிப்பகங்கள் சங்கம் அக்கவிதைகளை ஒரு நூலாக வெளிடுவது வழக்கம்.

நம் தமிழ்க் கவிஞர்களுக்கு அதையிட்டு பரவலான தகவல் கிடைக்கப் பெறவில்லை
அதன் காரணமாக இந்த அறிவித்தல்.

புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் தமிழ்ப் பேசும் கவிஞர்கள் தம் கவிதைகளை அஙகு பொருத்தி வரலாம். அவ்வாறாக பொருத்தி வரும். கவிஞர்கள் தம் கவிதைப் பிரதிகளில் அவர் தம் விலாசம், தொலைப்பேசி இலக்கம் போன்ற விபரங்களை ஆங்கிலத்தில் எழுதி வருவது நல்லது.
கடந்த இருவருடங்கள மேற்படி சுவரில் கணிசமான அளவில் சிங்கள கவிஞர்கள் எழுதி வருவதால் அக்கவிதைகளில் சிறந்த தேர்ந்தெடுத்து இலங்கை புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் அக்கவிதைகளை ஒரு நூலாக வெளிடுவது வழக்கம். ஆனால் ஒரு நூலாக வெளியிடும் அளவுக்கு தமிழ்க்கவிதைகள் அச்சுவருக்கு சேர்வதில்லை என அச்சுவருக்கு பொறுப்பான இளஞர்கள்கள் எமக்கு தெரிவித்தார்கள்.

ஆகவே கண்காட்சிக்குச் செல்லும் தமிழ்க்கவிஞர்களே!
உங்கள் கவிதைக்காக அச்சுவர் காத்துக்கொண்டிருக்கிறது.




Read More
avathani Media Network

தற்கொலையை தடுக்க குர்ஆனை உதாரணம் காட்டிய நடிகர்!

விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்த குர்ஆனில் உள்ள வசனத்தை சுட்டிக் காட்டி நடிகர் நானா படேகர் பேசியுள்ளார்.
மகாராஷ்ட்ராவில் வறுமையினால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனை அறிந்த நடிகர்  நானா படேகர், சுமார்  113 விவசாயிகளுக்கு தலா 15,000 ரூபாயை நன்கொடையாக அளித்தார் .

மகாராஷ்ட்ராவில் உள்ள மராத்வாடா மாவட்டத்தில் லாட்டூர் மற்றும் உஸ்மானாபாத்தில் நடைபெற்ற இந்த உதவி வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய நானா படேகர் "விவசாயிகளே! தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்! வாழ்க்கையில் போராட பழகிக் கொள்ளுங்கள். இஸ்லாமிய விவசாயிகளையும் பாருங்கள். அவர்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உங்களைப் போல் தற்கொலை செய்து கொள்வதில்லை. ஏனெனில் புனித குர்ஆன் தற்கொலை செய்து கொள்வதை பாவம் என்று அவர்களுக்கு போதிக்கிறது. இந்த அறிவுரையானது எனது மனதை மிகவும் தொட்ட ஒன்ற." என்று பேசியிருந்தார்.

மேலும், அரசியல் தலைவர்களும் இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி நடந்த விழாவில்  62 ஏழை விவசாயிகளுக்கு தலா 15,000 வீதம் ஏழை விவசாயிகளுக்கு நானா படேகரால் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தகக்து.
Read More
avathani Media Network

நாட்டுக்கு தேவை மஹிந்த இல்லாத அரசாங்கமே!

மஹிந்த ராஜபக்‌ஷ இல்லாத அரசாங்கம் ஒன்றுதான் நாட்டிற்குத் தேவையாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்த ஊடக நிறுவனங்களின் பிராணிகளுடனான சந்திப்பு ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது.
இதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி கருத்து தெரிவித்தார்.
ஜனவரி 8ம் திகதி நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் எமது வௌிநாட்டுக் கொள்கைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. சர்வதேசத்திற்கு எமது நாடு தொடர்பில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு தேசிய பொறிமுறை ஒன்றினூடாக தீர்வு பெற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஒருவேளை நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படாமல், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையானது பல மடங்கு கடினமானதாக இருந்திருக்கும்.
அது மிகவும் பயங்கரமானதாக இருந்திருக்கும். நாடு பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிட்டிருக்கும்.
மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் தான் சர்வதேசத்திற்கு சென்று பொய் வாக்குறுதிகளை வழங்கியது. உள்ளக விசாரணை நடத்துவதாக கூறியது. இறுதியில் சர்வதேசத்தை பகைத்துக் கொண்டது.
தற்பொழுது நாடு ஆபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கை 1000 மடங்கு கடினத்தன்மை குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேசம் தற்பொழுது இலங்கை தொடர்பில் தௌிவான நிலையில் உள்ளது.
எங்களுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நாம் சிறந்த வௌிநாட்டுக கொள்கையை முன்னெடுத்து வருகின்றோம்.
ஆகவே இதே நிலமை தொடர வேண்டுமானால் நாட்டின் தற்போதைய தேவை மஹிந்த இல்லாத அரசாங்கமே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.
அத்துடன் சீபா உடன்படிக்கை தொடர்பில் கருத்து வௌியிட்ட ஜனாதிபதி, அவ்வாறான எந்தவொரு உடன்படிக்கைகளும் இந்தியாவுடன் ஒப்பந்தமாகவில்லை என்று தெரிவித்தார்.
ஜெனிவா அறிக்கை தொடர்பிலும் சரி சீபா உடக்படிக்கை பற்றியும் சரி செய்திகளை வௌியிடும் ஊடகங்கள் சரியான செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Read More