Featured Home (TOP)

Recent Comments

Tuesday, September 22, 2015

avathani Media Network

காத்தான்குடி-ஸாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்களுக்கு ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இலவசமாக பெருநாள் புத்தாடைகள் வழங்கி வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் ஸாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலையில் கல்வி பயின்று வருகின்ற விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இலவசமாக பெருநாள் புத்தாடைகள் வழங்கும் நிகழ்வு 22-இன்று செவ்வாய்க்கிழமை ஸாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலையில் இடம்பெற்றது.

கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

இதன் போது பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் ஸாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலையில் கல்வி பயின்று வருகின்ற விஷேட தேவையுடைய 33 மாணவ ,மாணவிகளுக்கு இலவசமாக பெருநாள் புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கிழங்கை ஸாஹிறா இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் முகாமையாளர் எம்.எச்.ஏ.எம்.இஸ்மாயில், ஸாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலையின் அதிபர் ஏ.அன்வர் ஸாதிக் உட்பட பாடசாலை ஆசிரியர்கள், கிழக்கிழங்கை ஸாஹிறா இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் நிருவாகிகள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த விஷேட தேவையுடைய  மாணவ ,மாணவிகளுக்கு இலவசமாக பெருநாள் புத்தாடைகளை வழங்குவதற்கான அனுசரனையை அல்-மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.மும்தாஸ் (மதனி) வழங்கியதாக கிழக்கிழங்கை ஸாஹிறா இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் செயலாளரும், ஊடகவியலாளருமான மௌலவி முஸ்தபா(பலாஹி) தெரிவித்தார்.

1995ம் ஆண்டு உருவாக்கப்பட்ட குறித்த விஷேட தேவையுடையோர் பாடசாலையில் சுமார் 33க்கும் மேற்பட்ட விஷேட தேவையுடைய மாணவர்கள் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 














Read More
avathani Media Network

கிழக்கு மாகாணத்தில் பெருநாள் வியாபாரம் களை கட்டியது-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

உலக முஸ்லிம்களின் இரு பெருநாள் தினங்களில் தியாகத்தை வழியுறுத்தும் பெருநாள் தினமான புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை உலக முஸ்லிம்கள் எதிர்வரும் 24 திகதி வியாழக்கிழமை கொண்டாடவுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் பெருநாள் வியாபாரம் களை கட்ட தொடங்கியுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, ஒட்டமாவடி ஆகிய பிரதேசத்திலும் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, கல்முனைக்குடி, சம்மாந்துறை, நிந்தவூர், அக்கறைப்பற்று ,பொத்துவில் , ஆகிய பிரதேசத்திலும் திருகோணாமலை மாவட்டத்தில் திருமலை, கிண்ணியா ,மூதூர் உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் பெருநாள் ஆடைகளையும், பெருநாளுக்கு தேவையான பொருட்களையும் கிழக்கு முஸ்லிம்கள் தேடித் தேடித் வாங்கி வருவதால் பெருநாள் வியாபாரம் களை கட்ட தொடங்கியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெருநாள் புத்தாடைகளையும், பாதணிகளையும் வாங்குவதற்காக அதிகமான முஸ்லிம் ஆண்களும்; ,பெண்களும் ஆடை விற்பனை நிலையங்களுக்கும், பாதணி  விற்பனை நிலையங்களுக்கும் செல்வதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.











Read More
avathani Media Network

ஜெனிவா அறிக்கையை நிராகரிக்குமாறு அரசாங்கத்திடம் மஹிந்த கோரிக்கை!

சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கிடையாதென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.
போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கே இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், மஹிந்த ராஜபக்‌ஷ இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவானது மேற்குலக நாடுகளினால் வழங்கப்படுகின்ற நிதிகளின் மூலமாகவே இயங்குகின்றது.
அதேபோல் மனித உரிமைகள் ஆணையகத்தில் உயர் பதவிகளை வகிக்கக்கூடிய பெரும்பாலானவர்கள் மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அதில் பணி புரியும் ஊழியர்களில் பாதிப்பேர் மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்களே.
அதேபோல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவந்ததும் மேற்குலக நாடுகளே.
இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்று உருவாகி இருப்பதனால் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை காரம் குறைவானதாக அமைந்துள்ளது என்று பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது, “இது மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினை அல்ல அரசியல் ரீதியான பிரச்சினையே” என்று பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதி அக்ரம் தெரிவித்திருந்த கருத்து இந்த பிரச்சாரங்களினுடாக உறுதிப்படுத்தப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த அறிக்கை காரம் குறைந்ததாக தனக்குத் தெரியவில்லை.
பேர்க்குற்ற நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக பரிந்துரை செய்வது தான் இவ்வாறான அறிக்கை மூலம் உச்சகட்டமாக செய்ய முடியும்.
இந்த அறிக்கையில் அது பரிந்துரைக்கப்பட்டுள்ளதன் மூலம் அவர்களால் முடியுமான அளவு தூரம் வரை சென்றுள்ளனர் என்பது தௌிவாகின்றது.
ஆகவே அரசாங்கம் இந்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Read More
avathani Media Network

பிஸ்மி கிண்டர்காடனின் 2015 இல்ல விளையாட்டுப் போட்டி-படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்,முஹம்மட் நுஸ்ரி)

காத்தான்குடி பிஸ்மி கிண்டர்காடன் பாலர் பாடசாலை மாணவர்களின் இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த 20 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில்  வெகு விமர்சையாக இடம்பெற்றது.

பிஸ்மி கிண்டர்காடனின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில்  பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.பிர்தௌஸ் (நளீமி),மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் எம்.ஆர்.ஜவாத்,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி),இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தின் அமீர் டாக்டர் எம்.எஸ்.எம்.நுஸைர்,மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை டாக்டர் ஏ.எச்.எம்.ஆஸாத் ஹஸன்,முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எச்.ஏ.எம்.மிஹ்ழார்,ஆசிரியர் வித்தியாகீர்த்தி எம்.எம்.அமீர் அலி, உட்பட பிஸ்மி குழுமத்தின் பணிப்பாளர்கள் ,உறுப்பினர்கள், புத்திஜீவிகள், கல்வியலாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பிஸ்மி கின்டர்காடனின் இல்ல விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட  பாலர்களுக்கும், கற்பித்த ஆசிரியைகளுக்கும் அதிதிகளினால் சான்றிதழும், நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டன.​

இப்னு உமர், இப்னு அப்பாஸ், ஹசன், ஹ_சைன் என 4 இல்லங்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன.

மேற்படி இல்ல விளையாட்டுப் போட்டியில் விஷேட அம்சமாக உலகத்தை கலக்கிய முஸ்லிம் விளையாட்டு வீரர்கள் எனும் தொனிப்பொருளில் வினோத உடை நிகழ்வும் மேடையில் அரங்கேற்றப்பட்டது.

இங்கு பிஸ்மி கிண்டர்காடன் மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு வித்தியாசமான ,சுவாரஷ்யமான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அதிலும் குறிப்பாக குண்டெறிதல், தட்டெறிதல், குறி பார்த்து அம்பு எய்தல், அஞ்சல் ஓட்டம், தடை தாண்டல் ஓட்டம் போன்ற மெய்வல்லுனர் விளையாட்டுக்களும் சங்கீதக் கதிரை போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களும் உயிர் எழுத்து தெரிதல், உருவங்களை வகைப்படுத்தல் போன்ற அறிவுசார் விளையாட்டுக்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
























Read More
avathani Media Network

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா ஏற்பாடு செய்துள்ள புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை ஏத்துக்கால் கடற்கரை முன்றலில்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா ஏற்பாடு செய்துள்ள புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை எதிர்வரும் 24-09-2015 வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் நடைபெறவுள்ளதாக தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார்.

இங்கு பெருநாள் தொழுகையை நடைபெறவுள்ளதோடு பெருநாள் குத்பாப் பிரசங்கத்தை பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் நிகழ்த்தவுள்ளார்.
 
இதில் அனைத்து சகோதர ,சகோதரிகளையும் கலந்து கொண்டு புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறு காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா வேண்டுகோள் விடுக்கின்றது.

Read More
avathani Media Network

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் "மாமறைக்கு ஒரு மாநாடு"

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ,அம்பாறை,திருகோணாமலை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில் ஒரு இஸ்லாமிய மாநாடு ஒன்று எதிர்வரும் மாதம் 02-10-2015 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார்.

இம் மாநாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர்களான கோவை எஸ். அய்யூப் மனித குலத்திற்கு மாமறையின் அறைகூவல் எனும் தலைப்பிலும் ,ஏ.அன்சார் ஹ_சைன் (ஃபிர்தௌசி) மாமனிதரின் மனித நேய குரல் எனும் தலைப்பிலும் ,எஸ்.ஹாமீம் ஃபிர்தௌசி இஸ்லாமிய இனிய பண்புகள் எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றவுள்ளனர்.

எனவே மேற்படி இஸ்லாமிய மாநாட்டில் 10000 பத்தாயிரம் ஆண்,பெண் சகோதர ,சகோதரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால்  அனைத்து இஸ்லாமிய சகோதர,சகோதரிகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.




Read More