காத்தான்குடி மீடியா போரத்தின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் நிகழ்வு-படங்கள்.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி மீடியா போரத்தின் பெருநாள் ஒன்று கூடல் நிகழ்வு நேற்று 26.09.2015 சனிக்கிழமை இரவு 9.00 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை முழு நிலவில் காத்தான்குடி கடற்கரையிலுள்ள அஷ்ஷெய்க் மும்தாஸ் மௌலவியின் வளவில் இடம்பெற்றது.
காத்தான்குடி மீடியோ போரத்தின் தலைவர் ஏ.எல்.டீன் பைரூஸ் தலைமையில் இடம்பெற்ற இப் பெருநாள் ஒன்று கூடலில் காத்தான்குடி மீடியோ போரத்தின் செயலாளர் எம்.எச்.எம்.அன்வர்,பொருளாளர் ஏ.சீ.கே.பழீலுல் றஹ்மான்,உப தலைவர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி) உட்பட நிருவாகத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட மற்றும் கணிஷ்ட ஊடகவியலாளர்கள் ,நிருவாக உறுப்பினர்கள்,பொதுச் சபை அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் , பொதுச் சபை அங்கத்தவர்கள் ஆகியோரின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் இசையற்ற பாட்டு நிகழ்ச்சி,ஒரு தலைப்பில் பேசுதல்,நகைச்சுவை அரங்கு,சங்கீதக் கதிரை,நூலினால் சிறிய பந்தை வாளியில் போடுதல்,தண்ணீர் பையை பரிமாறுதல் போன்ற பல்வேறு கலாசார நிகழ்வுகளும்,விளையாட்டுக்களும் இடம்பெற்றதுடன் இதிலும் விஷேட அம்சமாக சபாநாயகர் ஒருவர் தெரிவு செயயப்பட்டு ஆளும் கட்சி,எதிர்க்கட்சி பிரிக்கப்பட்டு ஊடக பாராளுமன்றம்ஒன்றும் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இதன் போது இடம்பெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய நிருவாக உறுப்பினர்கள்,பொதுச் சபை அங்கத்தர்கள் ஆகியோருக்கு காத்தான்குடி மீடியா போரத்தின் சிரேஷ்ட நிருவாக உறுப்பினர் எம்.எஸ்.எம்.நூர்தீன் , பொதுச் சபை அங்கத்தவர் மதியன்பன் மஜீத் ஆகியோரினால் பரிசு வழங்கி வைக்கப்பட்டது.
இதில் காத்தான்குடி மீடியா போரத்தின் பொதுச் சபை அங்கத்தவர் மதியன்பன் மஜீத் எழுதிய ஆனாலும் திமிருதான் அவளுக்கு என்ற கவிதை நூல் மதியன்பன் மஜீதினால் காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் , பொதுச் சபை அங்கத்தவர்கள் ஆகியோருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி ஹஜ் பெருநாள் ஒன்று கூடலில் பங்குபற்றிய காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் , பொதுச் சபை அங்கத்தவர்கள் ஆகியோர் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


