Featured Home (TOP)

Recent Comments

Thursday, October 1, 2015

avathani Media Network

மட்டு-வெல்லாவெளி -பக்கியெல்ல உப அஞ்சல் அலுவலகத்தில் பாரிய கொள்ளைச் சம்பவம்- படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்கியெல்ல பிரதேசத்தில் பிரதான வீதியில் அமைந்துள்ள பக்கியெல்ல உப அஞ்சல் அலுவலகத்தில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று நேற்று 30 புதன்கிழமை மாலை சுமார் 4.30 –மணியில் இருந்து 5.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் உப அஞ்சல் அலுவலகம் திறந்து இருந்த நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் உப அஞ்சல் அலுவலக (லொக்கர்) பாதுகாப்பு பெட்டி திறந்து இருந்ததாகவும்,தான் ஒரு வெளி வேலை காரணமாக வெளியில் சென்ற நேரத்தில் எனது மகளை உப அஞ்சல் அலுவலகத்தை பார்த்துக் கொள்ளுமாறு கூறிச் சென்றதாகவும் பக்கியெல்ல உப அஞ்சல் அலுவலக அதிபர் எம்.சித்திரவேல் தெரிவித்தார்.

இப் பாரிய கொள்ளைச் சம்பவவத்தில் உப அஞ்சல் அலுவலக (லொக்கர்) பாதுகாப்பு பெட்டியில் இருந்த கோயில் போரதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 12 இலட்சத்து 25 ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான 275 கிராம் தங்கமும்,இரண்டாயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பரிசோதகர் ஐ.பி.நிமால் தெரிவித்தார்.

குறித்த கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 3 பேர் வந்ததாகவும், அவர்களை தனக்கு அடையாளம் காட்ட முடியும் எனவும் பக்கியெல்ல உப அஞ்சல் அலுவலக அதிபர் எம்.சித்திரவேலின் மகள் தெரிவித்துள்ளார்.

மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பரிசோதனை செய்ய அவ் விடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட   (சொகோ ) குற்ற நிகழ்வு இடப் பரிசோதனை பிரிவினால் அதன் பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர் கே.ரவீந்திரன் தலைமையிலான குழு பரிசோதனையை மேற்கொண்டது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸ் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













Read More
avathani Media Network

மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில் ஒரு இஸ்லாமிய மாநாடு -நாளை காத்தான்குடியில்


மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில் ஒரு இஸ்லாமிய மாநாடு -நாளை காத்தான்குடியில்


Read More
avathani Media Network

புதிய கடவுச்சீட்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிறுவனமாக காத்தான்குடி அல்-இனாறா மெனேஜ்மன்ட் தெரிவு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இலங்கை குடி வரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிறுவனமாக காத்தான்குடி பிரதான வீதி இலக்கம் 357 லுள்ள அல்-இனாறா மெனேஜ்மன்ட் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அல்-இனாறா மெனேஜ்மன்ட் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான்-jp தெரிவித்தார்.

இலங்கை குடி வரவு,குடியகல்வு திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை இலங்கை குடி வரவுஇகுடியகல்வு திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிறுவனமொன்றின் மூலமே வழங்கமுடியும்.

அதற்கான அங்கீகாரத்தை காத்தான்குடியிலுள்ள மேற்படி அல்-இனாறா மெனேஜ்மன்ட் நிறுவனத்திற்கு குடிவரவு ,குடியகல்வு திணைக்களம் வழங்கியுள்ளதாக எஸ்.ஏ.கே.பலீலுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
( 0652246110- 065 2247898)


Read More
avathani Media Network

சவூதி அரேபியாவின் தேசிய தின வைவபம் கொழும்பில் இடம் பெற்றது

(றுசைக் பாறூக், பழுலுல்லாஹ் பர்ஹான்)

சவூதி அரேபியாவின் தேசிய தின வைவபம் நேற்று முன்தினம் கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் மஹ்மூத் அலி அலாப் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட விஞ்ஞான,தொழிநுட்பக்கல்வி மற்றும் தொழில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந் கேக் வெட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இராஜாங்க அமைச்சர் பௌஸியின் இணைப்புச் செயலாளர் புரவலர் ஹாஸிம் உமர். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம் மாஹிர் ஆகியோருடன் இந்நிகழ்வில் அமைச்சர்களான றிசாட் பதியூதீன், கபீர் ஹாசிம், அப்துல் ஹலீம், ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதியமைச்சர்களான பைஸால் காசிம், எச்.எம்.எம் ஹரீஸ், கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் , இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் அதிகளும் கலந்து கொண்டனர்.



Read More
avathani Media Network

சிட்டாய் சிறகடிக்க.!!!( சிறுவர் தின கவிதை)

(எம்.ரி.எம்.யூனுஸ்)

சின்னவர்கள்
நாங்கள்...
சிட்டாய் சிறகடிக்க
விட்டு வையுங்கள்.!!!
பூமிப் பந்தின்
அகல... நீள...
கோடுகளை
கடந்து சென்று...
கனதியாக சாதனை
கம்பத்தை தொட்டுவிட.!!!


கூலிக்கு
எமை அமர்த்தி...
வேதனை தீயில்
தவிக்க வைத்து
இன்பத்தில் மடிகின்றீர்.!!!
சின்னவர்- எம்மை
சீரழிக்கும் மூதேவி
நீங்கள்- அன்பால்
அணைத்து கொள்ளுங்கள்.!!!

கடத்தலுக்கு
சோரம் போகாமல்...
ஐன்னலை உடைத்து
தூக்கி செல்லாமல்...
தோள்மீது தோழமையாக
சாய்ந்து கொள்ள
வேலி போடுங்கள்.!!!


புதிதாக
சட்டம் இயற்றி...
காமப்பசி பிடித்த
வக்கிர நாய்களுக்கு...
தூக்குத் தண்டனையை
அறுவடை செய்யுங்கள்.!!!


நாளை- நாங்கள்
புது தேசத்தில்
புதுயுகம் படைக்க...
சத்தியப் பிரகடணம்
செய்யுங்கள்...
சேயாவை போல்
சீரழியாமல்
சீடனாய் வாழ.!!!
----------------------
காத்தான்குடி கவிஞர்.
எம்.ரி.எம்.யூனுஸ்.
01102015.
Read More
avathani Media Network

மைத்திரி மீது குற்றம் சுமத்தியவருக்கு நேர்ந்தகெதி!

நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கிய இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் முகப்புத்தகத்தின் ஊடாக பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரதேச சபை உறுப்பினர், நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
பெண்ணொருவரை தொடர்பு படுத்தியே அவர், மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தரவேற்றம் செய்துள்ளார்.
அந்த சந்தேகநபரை இரகசிய பொலிஸார் தேடிக்கொண்டிருந்த நிலையில், காலி பிரதேச சபை உறுப்பினராக சம்பத் அத்துகோரளை, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஆஜரானார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவின் சகிதமே நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.
-ttnnews
Read More
avathani Media Network

புத்தளத்தில் காணாமல்போன சிறுமி கற்குகையிலிருந்து மீட்பு

புத்தளம் - கருவலகஸ்வெவ பகுதியில் காணாமல் போன 3 வயது சிறுமியை அடர்ந்த வனப் பகுதியிலுள்ள கற்குகையில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

பொலிஸார் பிரதேச மக்களின் உதவியோடு சுமார் 12 மணித்தியால தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், சிறுமியை கற்குகையில் இருந்து மீட்டுள்ளனர்.
புத்தளம் - கருவலகஸ்வெவ பஹரிய பகுதியைச் சேர்ந்த தினிதி அசன்ஸா என்ற சிறுமியே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நேற்றுமுன் தினம் (29) மாலை 4.00 அளவில் குறித்த சிறுமி, தாய் உணவு சமைக்கும் போது வெளியே வந்து சிறிதுநேரத்தின் பின்னர் திடீரென காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து பிரதேச மக்களின் உதவியோடு இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு  பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, நேற்று காலை வீட்டியிலிருந்து  சுமார் 13 கிலோ மீற்றருக்கு அப்பால் அடர்ந்த காட்டிலுள்ள கல்குகையில் இருந்து மீட்டுள்ளனர். 
இதுவரை குறித்த சிறுமி எவ்வாறு அடர்ந்த காடுக்கு சென்றாள் என எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் குறித்த சிறுமி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ரிஐவே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-virakesary-

Read More