Featured Home (TOP)

Recent Comments

Sunday, October 18, 2015

avathani Media Network

தொலை பேசி மூலம் அறிமுகம்.! பாலியல் வல்லுறவுக்காளானார் இரு பிள்ளைகளின் தாய்..!

588885218Untitled-1
இரு பிள்ளைகளின் தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ள இருவரைத் தேடி கண்டி, கலகெதர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More
avathani Media Network

இரு மகள்மாரை கடுமையாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை விளக்கமறியலில்

downloadதனது இரண்டு மகள்மாரை கடுமையாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தையை 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் பி குமார நாயக்க  உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Read More
avathani Media Network

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்திற்கு ஜனாதிபதிக்கு உலமா கட்சி பாராட்டு..

Copy of Mubarak2தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் மூன்று வாரத்தில் நல்ல முடிவு
கிடைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவித்திருப்பதை உலமா கட்சி
பாராட்டியிருப்பதுடன் இது விடயத்தில் தமிழ் கூட்டமைப்பு ஜனாதிபதியை அணுகாமல்
தமது சொந்த அரசியல் லாபம் கருதி இப்பிரச்சினையை இழுத்தடித்துள்ளது என உலமா
கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சியின் தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத்
தெரிவித்துள்ளதாவது,
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் என்பது நீண்ட கால பிரச்சினையாகும். 2009ம்
ஆண்டு யுத்தம் முடிவுற்று புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு என
அறிவித்தவுடன் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கைதிகளும்
விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இதனை கடந்த அரசு செய்யாமல் விட்டமை கவலைக்குரியது.
உண்மையில் அரசியல் கைதிகள் போன்ற விடயங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட
ஜனாதிபதி முறைமையினால் மட்டுமே சாத்தியமாக முடியும் என்பதால் நிறைவேற்று
அதிகார முறையை ரத்துச்செய்ய வேண்டாம் என்பதை உலமா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி
வந்துள்ளது. கடந்த ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன இவ்வாறு தனது அதிகாரத்தை
பயன்படுத்தி விடுதலை செய்துள்ளார்.
குற்றவாளி என தண்டனை பெற்றுக்கொண்டிருந்த சரத் பொன்சேக்காவை ஒரே இரவிலேயே
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலை
செய்தார். ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கும் முயற்சிகளுக்கு
துணை போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது இப்பிரச்சினையை நிறைவேற்று
அதிகாரம் மூலம் உடனடியாக தீர்க்க சொல்வது ஆச்சர்யமாக உள்ளது. ஆனாலும் இதனை
அவர்கள் சரியான முறையில் ஜனாதிபதியிடம் அணுகாது தமது சொந்த அரசியல்
இலாபத்துக்காக ஏழை கைதிகளை பயன்படுத்துகிறார்கள்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று ஜனாதிபதி முறையை
ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தவர். இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகள்
விடயத்தில் நிறைவேற்று அதிகாரத்தை பயன் படுத்துவது என்பது அவரது
கொள்கைக்கு மாற்றமானதாகவே உலகுகக்கு காட்டும் என்ற நியாயத்தை நாம்
புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் இப்பிரச்சினையை ஒரே இரவில் முடிக்கும் அதிகாரம் தனது
கையிலிருந்தும் அதனை பாவிக்காமல் மூன்று வாரங்களில் இதற்கு நல்லதொரு
தீர்வை
வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை உண்மையில் பாராட்டுக்குரிய விடயமாகும்.
இதனை தமிழ் கூட்டமைப்பு ஏற்று ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பதன் மூலம் இது
விடயத்தில் நல்ல முடிவுக்கு வழி வகுக்க முடியும் என உலமா கட்சித் தலைவர்
கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெறிவித்தார்.
(ஜுனைட்.எம்.பஹ்த்)
Read More
avathani Media Network

சக்தி யூ ரிப்போர்டர்ஸ் செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது -எம்.எச்;.எம் அன்வர்-

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் அனுசரணையில்  சக்தி யூ ரிப்போட்டர்ஸ்; நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது
Read More